[ செவ்வாய்க்கிழமை, 09 செப்ரெம்பர் 2014, 01:25.39 PM GMT ]
இலங்கைக்கான ஆறு புதிய தூதுவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் தமது நியமனக் கடிதங்களை இன்று கையளித்துள்ளனர்.
இது தொடர்பான நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.
புதிதாக நியமனம் பெற்ற ஆறு தூதுவர்களும் ஜனாதிபதியிடம் நியமனக் கடிதங்களை கையளித்ததாக ஜனாதிபதி பேச்சாளர் மற்றும் சர்வதேச ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்டோனியா, கொலம்பியா, பல்கேரியா, இஸ்ரேல், வியட்நாம், லாவோஸ் ஆகிய நாடுகளின் இலங்கைக்கான புதிய தூதுவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் தங்களின் நியமனக் கடிதங்களை கையளித்துள்ளனர்.
இவர்களில் வியட்நாம் சோஷலிச குடியரசின் தூதுவர் தவிர ஏனையோர் இந்தியாவின் புதுடில்லியில் தங்கியிருந்து கடமைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைவராக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விஜித் மலலகொட நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய இராச்சியத்தின் அபர்டீன் பல்கலைக்கழகத்தில் சட்ட முதுநிலை பட்டம் பெற்ற இவர், முன்னர் இலங்கை விமானப்படையின் நீதிபதி - சட்டத்தரணியாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJTdKUhu3.html
பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய மர்ம கும்பல் - துப்பாக்கியும் அபகரிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 09 செப்ரெம்பர் 2014, 01:50.33 PM GMT ]
சப்புகஸ்கந்த பிரதேசத்தில் பொலிஸார் மீது இனந்தெரியாத குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் நேற்றிரவு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது, இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குலை மேற்கொண்ட குழுவினர், அவரின் துப்பாக்கியையும் அபகரித்து சென்று விட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ரோந்து சேவையில், முதலில் பொலிஸார் இருவர் சென்றதாவும் அதற்கு பின்னர் மேலும் இரண்டு பொலிஸார் சென்றதாகவும் அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTdKUhu4.html
யாழ்.பல்கலைக்கழக மாணவன் மீது பொலிஸார் தாக்குதல்
[ செவ்வாய்க்கிழமை, 09 செப்ரெம்பர் 2014, 02:21.10 PM GMT ]
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒருவரை நெடுங்கேணிப் பொலிஸார் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
வவுனியா ஒலுமடுவில் உள்ள நண்பரின் வீட்டுக்கு நிகழ்வொன்றுக்காகச் சென்றிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேர் இன்று முற்பகல் 11 மணியளவில் வீடு திரும்புவதற்காக பஸ்ஸுக்காக காத்திருந்துள்ளனர்.
எனினும், பஸ் வராத காரணத்தால் முச்சக்கர வண்டியொன்றை வாடகைக்கு அமர்த்தி மாணவர்கள் 6 பேரும் அதில் பயணம் செய்துள்ளனர்.
இந்தநிலையில், அவ்வழியாக சிவில் உடையில் பயணித்த நெடுங்கேணி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, முச்சக்கர வண்டியில் 6 பேர் பயணித்ததைக் கண்டுள்ளார்.
உடனே முச்சக்கர வண்டியை நிறுத்தி, அதில் 3 பேர்தான் போகமுடியும். என்று கூறி சாரதியை மிரட்டியதாக, பயணம் செய்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பஸ்ஸுக்காகக் நீண்டநேரம் காத்திருந்துவிட்டு வேறு வழியில்லாமல் முச்சக்கரவண்டியில் பயணித்தோம் என்று தாம் கூறிய போது, மாணவர் ஒருவரை அவர் கடுமையாகத் தாக்கியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் தம்மை பொலிஸ் நிலையம் வரும்படி அழைத்துச் சென்றதுடன் முச்சக்கர வண்டியையும் பொலிஸ் நிலையம் கொண்டு சென்றதுடன், சம்பவம் குறித்து நெடுங்கேணி பிரதேச செயலருக்கு தெரியப்படுத்தப்பட்டது.
நெடுங்கேணி பிரதேச செயலர் அங்கு வந்து பொலிஸாருடன் கலந்துரையாடி தங்களை விடுவித்ததாகவும், எண்ணிக்கைக்கு அதிகமாக ஆட்களை ஏற்றியமைக்காக தண்டப்பணம் அறவிடப்பட்ட பின்னர் சாரதி விடுவிக்கப்பட்டார் என்றும் அம்மாணவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, சம்பவம் தொடர்பதில் தாம் வவுனியாவிலுள்ள மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடப் போகிறோம் என்று அந்த மாணவர்கள் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTdKUhu5.html
Geen opmerkingen:
Een reactie posten