இத்தாலியில் இலங்கை பெண்ணை ஏமாற்றி சூதாட்ட நிலையத்திற்கு அழைத்துச் சென்ற இரு இளைஞர்கள் பெண்ணின் கைப்பையை பறித்து சென்றுள்ளனர்.
இத்தாலியின் மொன்சா நகரில் வங்கி ஒன்றில் ஏ.டி.எம் இயந்திரத்தில் இலங்கையை சேர்ந்த 50 வயதான பெண் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியில் வந்துள்ளார்.
அப்போது அவர் அருகில் வந்த இரண்டு இளைஞர்கள், தமக்கு அதிஷ்ட லொத்தர் ஒன்றில் பெருந் தொகை பணம் பரிசாக கிடைத்துள்ளதாக கூறியுள்ளனர்.
அந்த பணத்தை பெற்றுக்கொள்வதற்காக அதிஷ்ட லொத்தர் நிலையம் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்று காட்டுமாறு இளைஞர்கள் அந்த பெண்ணிடம் கேட்டுள்ளனர். அத்துடன் பெண்ணுக்கும் ஒரு தொகை பணத்தை தருவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து இலங்கை பெண், அந்த இரண்டு இளைஞர்களையும் அதிஷ்ட லொத்தர் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, இடத்தை காட்டி விட்டு செல்ல முயற்சித்த போது, இளைஞர்கள் பெண்ணின் கை பையை பறித்து கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTYKUjqz.html
Geen opmerkingen:
Een reactie posten