தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 9 september 2014

கச்சதீவு கடலில் தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை!!



மஹிந்த ராஜபக்‌ஷ ஐ.நா.பொதுச் சபையில் உரையாற்ற அனுமதிக்கவே கூடாது என வலியுறுத்தி வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 09 செப்ரெம்பர் 2014, 11:57.20 AM GMT ]
ஈழத்தமிழர் நலன்கருதி தனி ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும், ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ உரையாற்ற அனுமதிக்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணிக்கு ம.தி.மு.க. தலைவர் வைகோ தலைமையில் இக்கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழுக் கூட்டம் தலைமைக் கழகம் தாயகத்தில் கடந்த முதலாம் திகதி திங்கட்கிழமை காலை நடைபெற்றது.
இக் கூட்டத்தில், சிங்கள இராணுவத்தை ஏவி லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்த சிங்கள பேரினவாத அரசின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இனக்கொலைக் குற்றத்துக்காக தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி ஆவார்.
2009 போரின் இறுதிக் கட்டத்தில் எண்ணிலடங்காத தமிழர்கள் படுகொலை உள்ளிட்ட சிங்கள அரசின் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் குறித்து, சுதந்திரமான பன்னாட்டு நீதிவிசாரணை நடத்த வேண்டும் என்று, இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைக் கவுன்ஸிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, ஐ.நா.வின் மனித உரிமை ஆணையர் மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவை அறிவித்தபோதிலும், அந்த விசாரணைக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று ஆணவத்தோடு அறிவித்து, ஐ.நா.மன்றத்தின் மதிப்புக்கே பங்கம் விளைவித்த இலங்கை ஜனாதிபதி ராஜபக்‌ஷவை ஐ.நா.மன்றத்தின் பொதுச்சபையில் செப்ரெம்பர் 25ம் திகதி உரையாற்ற அழைப்பு விடுத்திருப்பது ஐ.நா.வின் நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்கிவிட்டது என்பதால் அதற்குக் கண்டனம் தெரிவிக்கும் அதேவேளை, ராஜபக்‌ஷவுக்கு விடுத்த அழைப்பை ஐ.நா. சபை திரும்பப் பெறவேண்டும்.
ஐ.நா. அறிவித்த விசாரணைக் குழுவினரை இந்தியாவுக்கு வர அனுமதித்து, தொப்புள் கொடி உறவுகளான ஏழரைக்கோடி தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டில் இலங்கை அரசின் இனக்கொலையால் தமிழகத்திற்கு தஞ்சமென வந்த ஈழத் தமிழ் அகதிகள் விசாரணைக் குழுவிடம் அச்சமின்றி வாக்குமூலம் வழங்க உத்தரவாதம் தருகிற நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
அதனைச் செயல்படுத்த தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆக்கிரமித்துள்ள சிங்கள இராணுவமும், காவல்துறையும் முற்றாக வெளியேற்றப்பட்டு, ஈழத் தமிழர் தாயகத்தில் திணிக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்களை அகற்றி, சிறை முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டு, சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த தீர்மானங்களை வலியுறுத்தி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், வைகோ தலைமையில் அறப்போர் ஆர்ப்பாட்டம் இன்று நடத்தப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmsyJTdKUhu0.html
கச்சதீவு கடலில் தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை
[ செவ்வாய்க்கிழமை, 09 செப்ரெம்பர் 2014, 12:19.11 PM GMT ]
ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 400க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது ஒரு படகு திடீரென பழுதடைந்த நிலையில் கச்சதீவு அருகே நிற்கையில் அந்த படகில் இருந்த மீனவர் படகை சரி செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், பழுதடைந்த படகினையும் அதில் இருந்த மீனவர்கள் செபஸ்டியான், டோனா, ஜான்சன், செல்வராஜ், கிளாடி, பிரான்சிஸ் ஆகிய 6 மீனவர்களையும் சிறை பிடித்து சென்றனர். 

சிறைபிடிக்கப்பட்ட 6 மீனவர்களும் தலைமன்னாரில் உள்ள கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே இலங்கை சிறையில் 15 மீனவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பிடிபட்டுள்ள 6 மீனவர்களும் சிறை வைக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJTdKUhu1.html

Geen opmerkingen:

Een reactie posten