பிணையில் வந்தார் அனிதா!
கடந்த 29ஆம் திகதி முன்னாள் மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கமலேந்திரன், றெக்சியனின் மனைவி அனிதா ஆகியோருக்கு நீதிமன்று பிணை அனுமதி வழங்கியபோதும், பிணை எடுக்க யாரும் முன்வராத நிலையில் அவர்கள் தொடர்ந்தும் சிறைச்சாலைக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் அனிதா சார்பில் அவரது உறவினர் ஒருவர் பிணையில் எடுக்க முன்வந்ததையடுத்து அவரை ஊர்காவற்றுறை நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்தது. நீதிமன்றத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாகவே அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். கமல் தொடர்ந்தும் சிறையிலேயே தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அவரை பிணையில் எடுக்க இதுவரை யாரும் முன்வரவில்லை என்று தெரிகிறது.
http://www.jvpnews.com/srilanka/81443.html
வட-கிழக்கை சுற்றிப் பார்க்கும் சிறுவர்கள்…
ஓகஸ்ட் மாதம் 19, 20, 21 ஆம் நாட்களில் திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் உள்ள முக்கிய இடங்களை பார்வையிடுவதற்காக 215-க்கும் அதிகமான சிறுவர்கள் மூன்று பேருந்துகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் வழங்கிய பூரண நிதி உதவியுடன் அழைத்துச் செல்லப்பட்டு இருந்தனர். சுற்றுலாவின் தொடக்கத்தில் உலகின் அதிசயமான திருகோணமலை, கிண்ணியா வெந்நீரூற்றுப் பகுதியினை சிறுவர்கள் சென்று பார்வையிட்டு இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, நிலாவெளியில் அமைந்து உள்ள ஸ்ரீ லக்ஷ்மி நாராயண ஆலயத்தினை சிறுவர்கள் வழிபாடு செய்ததுடன், ஆலய நிர்வாகத்தினர் வழங்கிய மதிய உணவிலும் கலந்து கொண்டனர். அன்று மாலை திருகோணமலை கடற்பரப்பினை சிறுவர்கள் படகில் சுற்றிப் பார்வையிட்டதோடு, அப்பகுதி கடற்கரை மணலில் விளையாடி மகிழ்ந்தனர்.
இரண்டாவது நாளான 20 ஆம் நாள் ஈழத்தின் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான திருக்கோணேஸ்வரம் ஆலயத்தினை சிறுவர்கள் வழிபட்டு- தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தினை நோக்கி தமது பயணத்தினை தொடங்கினர். சுமார் மூன்று மணி நேர பயணத்தின் பின்னர் மட்டக்களப்பில் பிரசித்தி பெற்ற பாசிக்குடா கடற்கரையினை சென்றடைந்த சிறுவர்கள், மூன்று மணி நேரத்துக்கு மேலாக கடலில் நீராடி தமது பொழுதினை இனிதே கழித்தனர்.
அன்று மதியம் கன்னங்குடா கண்ணகி அம்மன் ஆலய வழிபாட்டினைத் தொடர்ந்து, ஆலய நிர்வாகமும் அப்பகுதி மக்களும் சிறுவர்களுக்கு சிறப்பான முறையில் மதிய உணவு தயாரித்து வழங்கி இருந்தனர். அன்றைய பொழுது தாந்தாமலை முருகன் ஆலய வழிப்பாட்டுடன் நிறைவு பெற்று இருந்தது.
சுற்றுப் பயணத்தின் இறுதி நாளான 21 ஆம் நாள், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வழிபாட்டுக்குப் பின்னர், மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிசனுக்குச் சென்று அப்பகுதியினையும் சுற்றிப் பார்வையிட்டு இருந்தனர். இங்கு இராமகிருஷ்ண மிசன் தலைவர் சிறுவர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து, அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்துக்குச் சென்று பின்னர், மட்டக்களப்பில் அண்மையில் திறக்கப்பட்ட கல்லடி பாலத்தினையும் சிறுவர்கள் பார்வையிட்டு இருந்தனர்.
அங்கிருந்து மீண்டும் திருகோணமலை திரும்பிய சிறுவர்கள், அங்கு உள்ள பளிங்கு கடற்கரையில் நீராடி மகிழ்ந்து- தமது சுற்றுலாவினை இனிதே நிறைவு செய்தனர். இந்த சிறுவர்களில் பெருமளவிலானோர் போரில் சாவடைந்த போராளிகளினதும் பொதுமக்களினதும் பிள்ளைகள் என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.
























http://www.jvpnews.com/srilanka/81446.html
இலங்கை கிரிக்கெட் வீரரை ஜெயசூரியா மிரட்டினார்! ராஜபக்ச கடுப்பானார்…
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் திசர பெரேரா நியூசிலாந்து அணிக்கு விளையாட அழைக்கப்பட்டதாக அவர் இலங்கைப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக 2 அருமையான் ஆல்ரவுண்ட் ஆட்டத்திற்குப் பிறகு தொடர் நாயகன் விருது பெற்ற திசர பெரேரா, சிங்கள மொழி செய்தித்தாள் லக்பிமாவுக்கு அளித்த பேட்டியில் இது பற்றி கூறியதாவது:
“ஆம். நியூசீலாந்து கிரிக்கெட் அணிக்கு விளையாட அழைப்பு வந்தது உண்மைதான், முதலில் குடியுரிமை பெற்றுத் தருகிறோம் என்றார்கள். பிறகு படிப்படியாக நியூசிலாந்து அணியில் இடம்பிடிக்கலாம் என்று உறுதி அளித்தனர். எனக்கும் இங்கு சில ஏமாற்றங்கள் ஏற்பட்டது. இதனால் நியூசிலாந்து அழைப்பை ஏற்கலாம் என்ற முடிவுக்கே வந்து விட்டேன். நமக்கு எங்கு அங்கீகாரம் இருக்கிறதோ அதைத் தேர்வு செய்ய வேண்டியதுதானே. ஆனால் நான் நிறைய யோசித்தேன் கடைசியில் நாட்டிற்கு முன்னுரிமை அளிக்க முடிவெடுத்தேன்” என்றார்.
ஆனால் சமீபத்தில் ஏற்பட்ட கசப்புணர்வு ஏன் என்று கேட்ட போது, “இப்போது நான் அதைக் கூறமாட்டேன், கிரிக்கெட் ஆட்டத்தை விட்டு விலகும் போது சரியான தருணத்தில் அதனை வெளிப்படுத்துவேன்” என்றார்.
திசர பெரேராவுக்கும் அணித் தேர்வுக் குழுத் தலைவர் சனத் ஜெயசூரியாவுக்கும் பிரச்சனைகள் இருந்தது உண்மைதான். கரிபியன் லீக் 20 ஓவர் கிரிக்கெட்டில் விளையாட பெரேரா அனுமதி கேட்டார், ஆனால் ஜெயசூரியா இவரை இலங்கை ஏ அணிக்கு விளையாடுமாறு வலியுறுத்தினார். ஆனால் இவர் ஏ அணியில் விளையாட இயலாது என்று விலகிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து அவர் இலங்கைக்கு ஆடப்போவதில்லை என்ற செய்திகள் அடிபட்டது. ஆனால் அதிபர் ராஜபக்சே தலையீட்டில் விஷயம் சுமுகமாக முடிந்ததாக அந்தப் பத்திரிக்கை செய்தி தெரிவித்துள்ளது.
http://www.jvpnews.com/srilanka/81474.html
விக்கியைச் சந்திக்க கோத்தா! மாமா வேலையில் மனோ…
இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கருத்து தெரிவிக்கையில், வடக்கு மாகாண சபைக்கும், கொழும்பு அரசுக்கும் இடையில் கருத்தியல் ரீதியில் முரண்பாடுகள் எழுந்துள்ளன. இது தொடர்பில் அரச தரப்பு என்ற ரீதியில், வடக்கு முதல்வருடன் பேசுவதற்கு தான் தயாராக இருக்கிறார் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்� என்னிடம் தெரிவித்தார். பேச்சுக்காக யாழ்ப்பாணத்துக்கு வந்து சந்திக்கவும் தான் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்திருக்கிறார். இல்லையேல் தனது அலுவலகத்திலோ தனது வீட்டிலோ கூட சந்திப்பை வைத்துக்கொள்ள முடியும் என்றும் கூறியிருக்கிறார்.
இதனை வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனிடம் நான் தெரியப்படுத்தியுள்ளேன். அவர் இது தொடர்பில் எந்தப் பதிலும் வழங்கவில்லை. இந்தப் பேச்சு நடக்க வேண்டும் என்றோ, இதில் நான் மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என்றோ எந்த ஆர்வமும் எனக்கு இல்லை. முடிவெடுக்க வேண்டியது வடக்கு முதலமைச்சர்தான். நான் பாதுகாப்பு அமைச்சின் செயலர் சொல்லிய தகவலை, வடக்கு முதல்வருக்குத் தெரியப்படுத்தியுள்ளேன் என்றார்.
இதேவேளை, வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் நேற்றுமுன்தினம் வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் உரையாற்றும் போது, ‘வெளிநாட்டுச் சூழல், அயல்நாட்டு சூழல், உள்நாட்டு சூழல் என்பவை சற்று கரிசனை தந்து கொண்டிருப்பதால் அரச முக்கியஸ்தர்களைப் பொறுத்த வரையில் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.
வடமாகாண முதலமைச்சரைப் பக்கத்தில் வைத்துத் தனிமையில் பேச வேண்டும் என்று சகோதரர்கள் இருவரும் காரணமில்லாமல் வெவ்வேறாகக் கருத்து வெளியிட்டிருக்கமாட்டார்கள்’ என்று மறைமுகமாக, ஜனாதிபதியின் சகோதரர்களான பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய அழைத்ததையும் இதேபோன்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் மற்றொரு சகோதரருமான பஸில் ராஜபக்ஷவும் ஏற்கனவே அழைத்ததையும் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/81479.html
Geen opmerkingen:
Een reactie posten