உள்நாட்டு போர் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது 08 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன கணவன் உயிருடன் மீண்டு வருவார் என்கிற அதீத நம்பிக்கையில் சுழிபுரத்தில் பண்ணாகத்தை சேர்ந்த 41 வயதான ஆசிரியை தனலக்சுமி மோகனராஜன் காத்திருக்கிறார்.
வர்த்தகரான இவரின் கணவர் துரைசிங்கம் மோகனரராஜன் ஏ9 நெடுஞ்சாலை ஊடாக பயணித்துக் கொண்டிருந்தபோது 2006 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதி மிகவும் மர்மான முறையில் காணாமல் போய் உள்ளார்.
செஞ்சிலுவைச் சங்க சர்வதேச குழுவினர் மனைவி தனலக்சுமி மேற்கொண்ட முறைப்பாட்டின் பேரில் மோகனராஜனை தேடுகின்ற முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் போரில் ஈடுபட்ட எத்தரப்பினருமே இவரை கைது செய்யவில்லை என்கிற தகவலைத்தான் மனைவிக்கு கொடுத்து உள்ளார்கள்.
ஆனால் இவர் உயிருடன் உள்ளார் என்று சோதிடர்கள், பூசாரிகள் சொல்லி இருக்கின்ற வார்த்தைகளை மனைவிக்கு ஆறுதல்களாக உள்ளன. இத்தம்பதிக்கு இரு பிள்ளைகள். அதிகாரம் உள்ள தரப்பினர்கள் கணவனை கண்டு பிடித்து தர வேண்டும் என்று எழுத்துமூலம் கோரி உள்ளார்.
 |
Geen opmerkingen:
Een reactie posten