தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 14 september 2014

வெருகல் சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தை வந்தடைந்தது ஆன்மீக பாதயாத்திரை!

தோல்வி ஒப்புக்கொண்ட சஷீந்திர ராஜபக்ஷ!
[ ஞாயிற்றுக்கிழமை, 14 செப்ரெம்பர் 2014, 08:00.58 AM GMT ]
ஊவா மாகாண சபைத் தேர்தலில் இம்முறை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 65 வீத வாக்குகளையே பெறும் என அதன் முதலமைச்சர் வேட்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான சஷீந்திர ராஜபக்ஷ வாராந்த பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய போட்டியில் கூறியுள்ளார்.
தேர்தலுக்கு முன்னர் அரசாங்கத்தின் தோல்வியை அவர் ஏற்றுக் கொண்டுள்ளமை இதன் மூலம் தெளிவாகியுள்ளதாக ஜே.வி.பியின் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
கடந்த மாகாண சபைத் தேர்தலில் மொனராகலை மாவட்டத்தில் அரசாங்கம் 80 வீதமான வாக்குகளை பெற்றது. இம்முறை அது 65 வீதமான குறையும் என கூறப்பட்டுள்ளது.
அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, ஊவா தேர்தலில் ஆளும் கட்சி 2 லட்சத்து 50 ஆயிரம் மேலதிக வாக்குகளை பெறும் எனக் கூறியிருந்தார். எனினும் கடந்த தேர்தலில் ஆளும் கட்சி 2 லட்சத்து 89 ஆயிரம் மேலதிக வாக்குகளை பெற்றிருந்தது.
எவ்வாறாயினும் அரசாங்கத்தில் உள்ள பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் மூலம் அரசாங்கம் தனது தோல்வியின் ஒரு பகுதியை ஒப்புக்கொண்டுள்ளமை தெளிவாகியுள்ளது.
அரசாங்கம் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான சந்தர்ப்பம் மிகவும் குறைவு என பொலிஸ் புலனாய்வு அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த இணையத்தளம் கூறியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJSYKUfx5.html
வெருகல் சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தை வந்தடைந்தது ஆன்மீக பாதயாத்திரை
[ ஞாயிற்றுக்கிழமை, 14 செப்ரெம்பர் 2014, 08:19.53 AM GMT ]
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினரால் ஏற்பாடு செய்த ஆன்மீக பாதயாத்திரையானது நேற்று இரவு வெருகலம்பதி சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தை வந்தடைந்தது.
இந்தப் பாத யாத்திரையானது, மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை மண்டூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகியது.
ஐந்து நாட்களைக் கொண்ட ஆன்மீக பாத யாத்திரையில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் சா.மதிசுதன், ந.புவனசுந்தரம், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்த அடியார்கள் கலந்து கொண்டு நந்திக் கொடிகளை ஏந்தியவாறும், அரோகரா என்ற நாமத்தை உச்சரித்தும், பஜனைகள் நடாத்தியும், தமது நேர்த்திக் கடனை நிறைவேற்றும் முகமாக ஆலயத்தை வந்தடைந்தனர்.
இதேவேளை, யாத்திரையை மேற்கொண்ட பக்தர்களுக்கு உணவு, சிற்றூண்டி, குளிர்பானம், தேனீர், தண்ணீர், மற்றும் தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி தந்த மாவட்டத்திலுள்ள ஆலய பரிபாலன சபையினர் மற்றும் தனிநபர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSYKUfx6.html

Geen opmerkingen:

Een reactie posten