தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 14 september 2014

வரலாற்றின் அசைவினை உணர வைத்த வன்னி வரலாறும் பண்பாடும் நூல்!!!

ஐநா விசாரணைக்குழு தொடர்பாக வடமாகாண சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றுவது உகந்ததல்ல! சுரேஷ் எம்.பி.
[ ஞாயிற்றுக்கிழமை, 14 செப்ரெம்பர் 2014, 06:55.17 AM GMT ]
ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையகத்தினால் உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச விசாரணைக்குழு தமது விசாரணைகளை ஆரம்பித்திருக்கும் நிலையில், குறித்த விசாரணைக்குழு தொடர்பாக வடமாகாண சபையில் தீர்மானங்களை நிறைவேற்றுவது சமகாலத்திற்கு உகந்ததல்ல. என நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடகிழக்கு தமிழர் தாயகத்தில் நடைபெற்றதும், நடைபெற்றுக் கொண்டிருப்பதும், ஒரு இன அழிப்பு நடவடிக்கை என்பத்தில் கூட்டமைப்பிற்குள் மாறுபட்ட கருத்துக்கள் இல்லை.
எனவே மாகாணசபையில் கொண்டுவரப்பட்ட உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் பிரேரணை தொடர்பில் எதிர்வரும் 25ம், 26ம், திகதிகளில் நடைபெறவுள்ள கட் சியின் உயர்மட்டக் குழுவில் பேசுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் மீது தொடர்ந்து கொண்டிருக்கும் இன அழிப்பு செயற்பாட்டிலிருந்து தமிழ் மக்களை பாதுகாப்பதற்கான சர்வதேச பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். என வலியுறுத்தி மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஒரு பிரேரணையினை முன்மொழிந்திருந்தார்.
எனினும் இப் பிரேரணை நிறைவேற்றப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருவது தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேற்படி விடயம் தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
மாகாணசபை உறுப்பினர் கொண்டுவந்திருக்கும் பிரேரணை தவறான ஒரு பிரேரணை அல்ல. அதில் அவர் குறிப்பிட்டிருக்கும் இன அழிப்பு என்னும் விடயத்தில் எவ்விதமான மாறுபட்ட கருத்துக்களும் எமக்கில்லை. நாங்கள் அது தொடர்பில் நாடாளுமன்றில் கூட பேசியிருக்கின்றோம். சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசியுள்ளார்கள்.
எனவே மிக தெளிவாக கூறுகின்றோம். குறித்த பிரேரணையின் உள்ளடக்கத்தில் எமக்கு எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை. ஆனால் ஜ.நா சர்வதேச விசாரணைக்குழு தன்னுடைய விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பித்து நடத்திக் கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் தமிழர் தாயகத்தில் நடைபெற்றது ஒரு இன அழிப்பு என நாங்கள் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி அனுப்புவது பொருத்தமற்றது.
அதாவது வடமாகாணசபை வடக்கு தமிழ் மக்களின் ஒட்டுமொத்த வாக்குப் பலத்தின் மூலம் தமிழ்தேசிய கூட்டமைப்பு வடக்கில் மாபெரும் வெற்றியை பெற்று உருவாக்கிய சபை. எனவே அதற்கு ஒரு அங்கீகாரம் சர்வதேச மட்டத்தில் இருக்கின்றது. அங்கிருந்து வெளிவரும் விடயங்கள் மிக பெறுமதியானவை, மக்களுடைய மன உணர்வுகளை பிரதிபிலிப்பவை என்னும் பார்வையும் இருக்கவே செய்கின்றது.
இந்நிலையில் ஒரு சிறப்புமிக்க சபையில் வெறும் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி அனுப்புவதனால் நிச்சயமாக எவ்விதமான பயனும் இல்லை. அத்தோடு ஐ.நா விசாரணைக்குழு எடுத்திருக்கும் தீர்மானங்களிலும் மாற்றத்தை கொண்டுவர முடியாது.
எனவே மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கொண்டு வந்திருக்கும் பிரேரணை எப்பொழுது பெறுமதி மிக்கதாகவும், ஆக்கபூர்வமானதாகவும் மாறும் என்றால், குறித்த பிரேரணையினை சபையில் நிறைவேற்றுவதுடன், இங்கே நடைபெற்றது ஒரு இன அழிப்பு என்பதனை நிரூபிக்கும் வகையில் மிக முக்கியமான ஆவணங்களையும் நாங்கள் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துடன் இணைத்து அனுப்பிவைக்க வேண்டும்.
எனவே அதற்கான ஏற்பாடுகள் மாகாணசபையிடம் இருக்கின்றதா? இருந்தால் நிறைவேற்றப்படும் தீர்மானமும், அனுப்பப்படும் ஆவணங்களும், வடக்கில் வாழ்கின்ற தமிழ் மக்களுடைய நிலைப்பாடாக எடுத்துக் கொள்ளப்படும் வாய்ப்புக்கள் அதிகளவில் இருக்கின்றது.
மறுபக்கம் இந்த விடயம் தொடர்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலமைகள் சர்வதேச மட்டத்தில் ஒரு இராஜதந்திர நகர்வினை மேற்கொண்டு வருகின்றன. எனவே இவ்வாறான பிரேரணை தொடர்பில் அவர்களுடைய நிலைப்பாடும் என்ன? என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
அந்தவகையில் எதிர்வரும் 25ம், 26ம் திகதிகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களுக்கான கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் இந்த விடயம் தொடர்பாக நாங்கள் நிச்சயமாக பேசுவோம்.
மேலும் விடயம் தொடர்பாக அந்தக் கூட்டத்திலேயே ஆக்கபூர்வமான நடவடிக்கை ஒன்றிணையும் நாங்கள் எடுப்பதற்கு தயாராக இருக்கின்றோம். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSYKUfx3.html
வரலாற்றின் அசைவினை உணர வைத்த வன்னி வரலாறும் பண்பாடும் நூல்
[ ஞாயிற்றுக்கிழமை, 14 செப்ரெம்பர் 2014, 07:13.47 AM GMT ]
வரலாற்றின் அசைவை உணர வைத்து தமிழர் அடையாளங்களை காக்க உதவும் கடமையைச் செய்துள்ளது வவுனிக்குளம்- நோர்வே கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கத்தின் வன்னி வரலாறும் பண்பாடும் நூல்.
வன்னி வரலாறும் பண்பாடும் என்ற ஒரு ஒரு புதுநூல் தமிழுக்கு கிடைத்துள்ளது.
நமது வரலாற்றை புதைத்து அந்த கல்லறைகளின் தம் பாசறை அமைத்து அடிமைச் சாசனத்தை எழுத நினைப்பவர்கள் மேல் பண்டார வன்னியன் கைவாளாக, குருவிச்சநாச்சியின் தடங்களின் மூச்சாக, ஒரு காலத்தின் சாலப்பொருத்தமான வராலாற்று ஆவணமாக வவுனிக்குளம் நோர்வே கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம் என்ற ஓர் தமிழ்பற்றாளனால் வரலாற்றின் மீது தாகமுள்ள மனிதனால் வெளியிடப்பட்டுள்ளது.
வரலாறு தன் வழிகாட்டி என்பான் நம் இறுதி மன்னன் பிரபாகரன். வரலாற்றின் அசைவை  அதன் துவாரங்களை அது சந்ததிக்கு தரும் வீச்சை மூச்சை வன்னி வரலாறும் பண்பாடும் என்ற நூலை வாசிக்கும்போது உணரலாம்.
மிகவும் ஒரு கடினமான பணியை தன்னுள் இருக்கும் ஆழ்ந்த தமிழர் வராலாறு பற்றிய விருப்புக்காரணமாக தேடல் காரணமாக வரலாற்றை புதைப்பவர்கள் மீதுள்ள விசனம் கோபம் காரணமாக இந்த நூலை கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கள் பெரும் பொக்கிசமாக தமிழர் உலகத்திற்கு தந்துள்ளார்.
இதுவரை தொகுக்கப்படாத வன்னி வரலாற்றின் சமூக வரலாற்று ஆவணமென இதை புகழுவதில் பெருமை கொள்ளலாம். மண்ணையும் மரபுகளையும் மக்களையும் நேசிப்பவனுக்கு இது உண்மையில் பெரும் பொக்கிசம்தான்.
வன்னி வரலாறும் பண்பாடும் நூலுக்கு முன்னுரை எழுதிய பேராதனை பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை தகைசார் பேராசான் கலாநிதி சி.பத்மநாதன் தன் உரையில் முதலில் இப்படி குறிப்பிடுகின்றார்.
இலங்கை வரலாற்றில் இலங்கை தமிழர் வஞ்சிக்கப்பட்ட சமூகம் என்பதை இந்நாட்களிலும் எவராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.
அவர்களை பொறுத்தவரையில் இருவிதமான தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் புரதான காலம் முதலாகநாகரிக முன்னேற்றத்திலும் தொழில் நுட்பத்தை பெருக்குவதிலும்பெரும் பங்கு கொண்டிருந்தனர்.
ஆயினும், இலங்கை பல்கலைக்கழகம் கழகம் வெளியிட்ட இலங்கை வரலாறு அவர்களை ஓரம் கட்டிவிட்டது. அந்நூலின் இரண்டாம் மூன்றாம் பாகங்களிலும் இதே நிலைதான்.
கல்வித் திணைக்களம் வெளியிடும் நூல்களை பற்றி சொல்லவேண்டியதில்லை. இலங்கை வரலாற்றை பிரித்து நிதானமாக எழுதுவதனால் அவ்வக்காலங்களில் நாட்டில் வாழந்த சமுகங்கள் ஒப்பீட்டு அடிப்படையில் தேசத்து விவகாரங்களிலும் பாரம்பரியங்களிலும் கொண்டிருந்த இடத்தை விபரித்து எழுதவேண்டும். அவ்வாறான ஒரு வராலாற்றை காண்பது ஒரு பகற் கனவுபோல ஆகிவிட்டது.
கலாநிதி சி.பத்மநாதன் முன்னுரையில்,
தமிழர் வரலாறு தொடர்பாக குறிப்பிடும் கவலைகளுக்கு இந்தநூல் கண்ணீர் துடைக்கும் கால மொழியாக அமைகின்றது. வெறும் கற்பனைகளின் தொகுப்பாக அல்லாமல் வன்னியின் காலம்காலமான வராலாற்றின் ஆவணங்களில் மூழ்கி எடுக்கப்பட்ட உண்மையாக இந்நூல் படிக்கும் இருக்கும்.
வன்னி கானகங்களின் தொகுப்பு வன்னி நீர்வளத்தின் அழகு வன்னி அடங்காபற்றின் தாய் மடி. பாரம்பரிய வழிபாடுகளின் உறைவிடம். தமிழ் கலைகளின் அரங்கம் என நீண்ட வரலாற்றின் தொடர்ச்சியாக இன்று முள்ளிவாய்க்காலின் முகவரியாக விரிகின்றது.
வன்னிக்குள் தேடதேட வெளிவரும் தமிழர் வரலாற்று பொக்கிசமாகவும் புதைக்கப்படும் வரலாற்றின் பொருளாகவும் இவரின் புத்தகமும் மாறும்.
வன்னியில் தொடும் இடமெல்லாம் தொன்மம் ஊற்றெடுக்கும் கால வெளிவிரிகின்றது. இதற்கு கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கத்தின் வன்னி வரலாறும் பண்பாடும் வீழ்ச்சிக்குப் பின்னரான நல்ல நல்ல தொடக்கம்.
இதை தடம் பற்றி வரலாற்றை தேடுகின்றவர்கள் நம்பிக்கையோடு தேடலாம். ஏனெனில் இந்தநூலில் கட்டுரையாளர்கள் வரலாற்றுப் பார்வையோடு பார்க்கின்றபோது, வன்னி நிலத்தின் வயல்களோடும் கானகங்களோடும் புழுதி வீதிகளோடும் போரோடும் ஆறுகளின் அழகோடும் வாழ்ந்த சிலிர்த்தவர்கள் எழுதியிருக்கின்றார்கள்.
வரலாற்றை ஒரு பாடமாக கற்று துறைசார் நிபுணத்துவங்கள் அல்லாத வன்னியின் வெறும் பட்டறிவையே கொண்ட அனுபவச் சித்தர்களின் எழுத்துக்கள் இந்நூலின் மிகப்பெரும்பலம்.
கானங்களை பற்றி நினைக்கின்றபோது வன்னியின் மயில்குஞ்சனும் வட்டனும் எயிற்றரும் யாருக்கும் நினைவுக்கு வருகின்றார்கள். இவர்கள் யார் வன்னியில் கானக மரங்களில் குசு குசுப்பையும் காதல் உணர்வையும் உச்சரிப்பையும் மொழி பெயர்க்கக்கூடிய வயல்காட்டான்கள்.
இந்நூலில் வன்னி மாவட்ட வனம் பற்றி எழுதும் கட்டுரையாளர் முதலில்,
மற்றவை எதுவும் இல்லாமல்
என்னால் வாழமுடியும்
ஆனால் மரங்கள் இல்லாமல்வாழமுடியாது.
நேராகவும் வலுவாகவும்
என்வாழ்வில் மரங்கள் இருக்கட்டும்
என்ற கன்னடத்துக் கவிஞரின் வரிகளோடு ஆரம்பிக்கின்றார்.
வன்னியின் வரலாற்றுக்கும் வாழ்வுக்கும் நெருங்கிய பின்னிய தொடர்பு தொன்று இருந்து வருவதை விபரிக்கும் இந்நூலின் பல கட்டுரைகள். தலைவர் பிரபாகரன் இயற்கை எனது நண்பன் என்று குறிப்பிட்டதும் வன்னி வாழ்வில் கானகங்களின் நெருக்கத்தை கொண்டுதான் எனலாம்.
வன்னி வராலாறும் பண்பாடும் இது பற்றி மேலும் கலாநிதி சி.பத்மநாதன்  
இந்நூல் அடங்காப்பற்று வன்னி பற்றி இதவரை வெளிவந்த  நூல்களைவிட மிக விரிவானது.அவையாவற்றை காட்டிலும்மிகக்கூடிய அளவில் ஆதாரபூர்வமானது.
வன்னி மானிலத்தின் தொல்லியல் வரலாறு இயற்கைவளம் குடித்தொகை தொழில்கள் மொழிவழக்கு இலக்கிய மரபு சமய பண்பாட்டு நெறிகள் முதலான பிரதானமான விடயங்களை பற்றிய கட்டுரைகள் அடங்கியுள்ளன.
வன்னி தொடர்பாக வேறெங்கும் காணப்படாத பல விடயங்களை இதில் கண்டுகொள்ளலாம். மேற்கொண்டு ஆய்வுகளை முன்னெடுத்துச் செல்ல இந்த நூல் ஓர் அடித்தளமாக அமைக்கின்றது.
இது தமிழர் எல்லோராலும் படிக்கப்பட வேண்டிய நூல் இதனை சிங்கள மொழியில் மொழிபெயர்த்து வெளியிடுவது அவசியமாகின்றது என மேலும் குறிப்பிடுவதில் இருந்து இந்நூலின் காலப்பெறுமதி உணரப்படுகின்றது.
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும் என்ற வ.ஜ.ச.ஜெயபாலனின் நெடும்பா பதிப்பாசிரியரால் சேர்க்கப்பட்டுள்ளது.
பாலி ஆற்றின் கரையிலிருந்தேன் என தொடங்கும் பாவில்,
1958ல்
நான்கு வயதில்
கலவரம் என் காட்டிலும் வெடித்தது.
அணைக்கட்டிருந்து
புல்டோசர்களும் லாரிவண்டிகளும் ஊருள்வந்தன.
வெறி ஏற்றப்பட்ட சிங்கள கூலிகள்
வீட்டை கொழுத்த
எங்கள் தந்தையர் துப்பாக்கி வெடிக்க
அமைதி நிலவிய நமது காடுகள்
ஒன்றைய நூற்றாண்டுகள் கழித்து
மீண்டுமோர் போர்க்களமாய் சிதைந்தது.
வெள்ளை குதிரையில் வீரவாள் தாங்கிய
இளைஞன் தோன்றி போர் தொடுத்த சி ங்களவர்களை
துரத்திவிட்டதாய்ச் சேதிவந்தது.
இதே கலவரம்தான்
என் வீட்டை சாம்பர் மேடாக்கி
என்னருந்தாயை காவு கொண்டது
இப்படியாக என் இளமை வாழ்வு
சோகம்
சாவுகள் நிறைந்த சோகம் மலிந்தது.
என பதிவு செய்யப்பட்ட வரலாற்றை பதிப்பாசிரியர் கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம் தேடிய இந்த நூலுக்கான பொக்கிசங்கள் மிக காத்திரமானவை என்பதை உணரலாம்.
போருக்குபின் வீரம் செறிந்த வன்னி மண்ணில் அழிக்கப்பட்ட தமிழர் வரலாற்று பொக்கிசமான நடுகற்களும் கல்லறைகளும் அழிக்கப்பட்டு அடையாளங்களும் கல்வெட்டுக்களும் தோண்டி எடுக்கப்பட்டு,
வன்னயில் கானகங்களின் ஒவ்வொரு மரத்துக்கு மரம் நிலைகொண்டிருக்கும் சிங்களப் படைகள் தென்னிலங்கையில் இருந்துவரும் சிங்கள சுற்றுலா பயணிகளுக்கு ஆனையிறவிலும் முள்ளிவாய்க்காலிலும் புதுக்குடியிருப்பிலும் கிளிநொச்சி காக்காகடை சந்தியிலும் வரலாற்றை திரிவுபடுத்தி இனவாதத்தை விதைத்துவரும் இருண்ட காலமாக தமிழர்க்கு இது அமைக்கின்றது.
கோப்பாயிலும் கனகபுரத்திலும் விசுவமடுவிலும் உயிலங்குளத்திலும் மட்டக்களப்பிலும் தமிழர் விடுதலைக்காய் போராடி விதைந்த நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்களின் கல்லறைகளை சிங்களப்படைகள் உடைத்து அங்கு இருந்த புனித உடல்களை கிழறி எடுத்து வீதிக்கு மண்ணாக போட்டு அதன்மேல் இராணுவாகனங்களை உறுமி உறுமி ஓடும் வரலாற்றின் துரதிஸ்டமான காலத்தில் நாம் வாழ்கின்றோம்.
விடுதலைக்காய் எழுதுவதாக கூறிய பலர் இன்று தடங்களை மாற்றிக்கொண்டு எழுத்து விபச்சாரிகளாகி தமிழர் வரலாற்றை அழித்தர்களுக்கு சாமரம் வீசி பொற்கிழி வாங்கும் இ;ந்த நாளில் இத்தகு வரலாற்றுத்தொகுப்பு அபூர்வமானது. ஆச்சரியமானது.
வன்னியில் நாகர் உருவாக்கிய அரசு
வன்னியின் வரலாறும் பண்பாடும்
ஈழத்தில் வன்னி என்ற சொல்வழக்கு
வரலாற்றெழுத்தின் வரையறைகள்
வரலாற்றுக்கு முற்பட்ட வன்னிப் பாண்பாடு
யாழ்ப்பாணம் வன்னி வாணிபத்தெருக்கள்
வரலாற்றுக் காலத்துக்கு முந்திய வன்னி நாட்டின் தொல்லியற்சான்றுகள்
ஜே.பி.லூயிஸ் வன்னியின் ஆவணச்சிற்பி
பிரித்தானியர் கால வன்னி இராச்சியம்
பண்டார வன்னியன்
வன்னிப்பெருநிலப்பரப்பில் ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டிய தொல்லியல்
யாழ்ப்பாண இராதானிக்காலத்தில் வன்னிமைகள்
பாலியாற்றங்கரை குடியிருப்பும் அதன் வளர்;ச்சிப்போக்கும் வரலாற்று ரீதியானபார்வை
சமூகமும் வாழ்வியலும்
வன்னிப்பிரதேசத்தின் அண்மைக்கால மாற்றங்களும் மீள்குடியேற்றங்களும்
யே.பி.லூயிஸ் இலங்கையில் தமிழ் பாரம்பரிய பிரதேசங்களும் அரசகுடியேற்ற திட்டங்களும்
வன்னிப்பிரதேச மீன்பிடித்தொழில்
விவசாய அபிவிருத்தியும் நீர்வள பயன்பாடும்
வேரோடு பிடுங்குதலும் மீள்நடுதலும் வன்னிக்குடும்பங்களின் சமுகநிலை
இலங்கையின் வன்னிப்பிரதேச சட்டசபை பிரதிநிதித்துவம்
பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் எதிர்நோக்கும் சமுக பொருளாதார பிரச்சனைகள்
பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் சமுக பொருளாதார நிலைமை
குடியேற்றத்துக்குப் பின்னரான அபிவிருத்திக்குரிய சமுகநிலை
வன்னி ஆன்மா
வளம்கொண்ட வன்னிப்பிரதேசத்தின் வாழ்வியல் அனுபவங்கள்
மனிதம் மலரட்டும்
வன்னி மாவட்ட வனம்
வன்னி மாவட்ட வளர்ச்சி படிகளில் நாடாளுமன்ற நடவடிக்கைகள்
வன்னிப்பிரதேச தமிழ்இலக்கியம்
வன்னியின் பெண்மையின் பக்கங்கள்
மொழியால் அமைந்த நிலம்
வன்னிப்பிரதேச தனித்துவமும் பண்பாடும்
வன்னிப்பிரதேச நாவல்கள்
வன்னி நாட்டார் இலக்கியம்
வன்னிச் சிறுதெய்வ வழிபாடு
திருக்கேதீஸ்வரம்
வற்றாப்பளை கண்ணகி தெய்வம்
தூய மடுமாதா திருத்தலவரலாறு
வன்னியின் சமயநிலை
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
போன்ற தலைப்புக்களின் கீழ் பல்கலைக்கழகங்களின் துறைசார் படைப்பாளிகள், ஈழத்தின் மூத்த படைப்பாளிகள், புலம்பெயர் படைப்பாளிகள், பெண்ணிய ஆய்வாளர்கள், கலைசார்ந்த நிபுணர்கள் என நம்பத்தகுந்த ஆவண தேடல் உள்ளவர்களால் எழுதப்பட்ட கட்டுரை, ஆய்வுகள் அனுபவங்கள் வன்னி வரலாறும் பண்பாடாக நூலாக்கப்பட்டிருக்கின்றது.
-ஈழக்கிழவன்
http://www.tamilwin.com/show-RUmsyJSYKUfx4.html

Geen opmerkingen:

Een reactie posten