[ ஞாயிற்றுக்கிழமை, 14 செப்ரெம்பர் 2014, 06:27.35 AM GMT ]
சிலாபம் பங்கதெனிய பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த யுவதி வேறு நபர்களுக்கு விற்பனை செய்திருந்த இரண்டு குழந்தைகளை பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
இந்த குழந்தைகளில் ஒரு குழந்தை பிறந்து 7 நாட்கள் ஆன குழந்தை என பொலிஸார் தெரிவித்தனர்.
குழந்தைகளை விற்பனை செய்யும் இந்த நடவடிக்கையுடன் வைத்தியசாலைகளில் பணி புரியும் பெண் சுகாதார ஊழியர்களும் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மர்மமான முறையில் கொலை செய்து புதைக்கப்பட்ட ஆசிரியை: பசறையில் சம்பவம்
பசறை பிரதேசத்தை சேர்ந்த தமிழ் ஆசிரியை ஒருவரை மர்மமான முறையில் கொலை செய்து பசறை மீதும்பிட்டிய பிரதேசத்தில் உள்ள கோயில் ஒன்றுக்கு எதிரில் புதைத்த சம்பவம் குறித்து பொலிசார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காக ஆசிரியையின் சடலம் நாளைய தினம் தோண்டி எடுக்கப்பட உள்ளது என பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த முதலாம் திகதி பாடசாலைக்கு சென்றிருந்த ஆசிரியை வீடு திரும்பவில்லை என ஆசிரியையின் கணவர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் ஆசிரியை கொலை செய்யப்பட்டு குறித்த கோயிலுக்கு எதிரில் புதைக்கப்பட்டுள்ளதை கண்டறிந்தனர்.
சடலத்தை நேற்று தோண்ட பொலிசார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
எனினும் சட்ட வைத்திய அதிகாரியின் உதவியை பெற முடியாத காரணத்தினால் நாளைய தினம் சடலத்தை தோண்டி எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJSYKUfx0.html
Geen opmerkingen:
Een reactie posten