[ சனிக்கிழமை, 06 செப்ரெம்பர் 2014, 07:35.01 AM GMT ]
ஹல்தமுல்லை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் அரிசி, பருப்பு, சீனி, நூடில்ஸ் உள்ளிட்ட உலர் உணவுப் பொருட்கள் தெரிவு செய்யப்பட்ட வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக கொண்டு செல்லப்பட்டதாக கபே அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது தேர்தல் சட்டங்களை மீறும் நடவடிக்கையாக கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் உழவு இயந்திரம் என்பன மக்களால் பொலிஸ் நிலையத்தில் பொறுப்பளிக்கப்பட்டது.
பின்னர் குறித்த உழவு இயந்திரம் ஹப்புத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyJTaKUip6.html
எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் ஐ.தே.கட்சியின் பிரதிநிதியாக இருக்க வேண்டும்: லக்ஷ்மன் கிரியெல்ல
[ சனிக்கிழமை, 06 செப்ரெம்பர் 2014, 07:53.59 AM GMT ]
அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தலை அறிவித்ததும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்மொழியும் ஜனாதிபதி வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படும்.
நாட்டின் பிரதான எதிர்க்கட்சி ஐக்கிய தேசியக் கட்சி என்பதால், நிறுத்தப்பட போகும் ஜனாதிபதி வேட்பாளர் அனைவரும் ஏற்றுக்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக இருக்கவேண்டும் எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, அண்மையில் கண்டிக்கு விஜயம் செய்து, மல்வத்து, அஸ்கிரிய மாநாயக்க தேரர்களையும் ராஜோபவனாராமாதிபதி கெப்பிட்டியாகொட சிறிவிமல நாயக்க தேரர் ஆகியோரைச் சந்தித்து ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்படும் பொது வேட்பாளர் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
அத்துடன் தேர்தலில் தான் போட்டியிடுவது தொடர்பில் மாநாயக்கர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிட முடியாது போனால், பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து ஆராயப்படும் என ரணில் விக்ரமசிங்க இதன் போது கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTaKUiqy.html
யுத்தகால நிலைமை மீண்டும் கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கு?
[ சனிக்கிழமை, 06 செப்ரெம்பர் 2014, 07:41.55 AM GMT ]
கொழும்பில் தமிழ் மக்கள் வசிக்கும் வீடுகளுக்கு பொலிஸார் சென்று, அங்கு குடியிருப்பவர்களின் விபரங்களை பதிவு செய்த நிலைமை தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, பகுதிகளில் வாழும் தமிழ் குடும்பங்களுக்கு இவ்வாறான விண்ணப் படிவங்கள் கொடுக்கப்பட்டு இவற்றை உடனடியாக பூர்த்தி செய்து தருமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
வீட்டின் உரிமையாளரின் பெயர், வசிப்பவர்களின் பெயர் மற்றும் குடியிருப்பாளர்களின் விபரங்கள் அனைத்தும் அந்த விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ளது. இவ்விண்ணப்பம் பாதுகாப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
நேற்று படிவங்களை பூர்த்தி செய்து கையளிக்காத மக்களின் வீடுகளுக்கு சென்ற பொலிஸார் படிவங்களை முழுமையாக பூர்த்தி செய்து கையளிக்க வேண்டும் என கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கையளிக்க தவறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸார் கூறியதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTaKUip7.html
Geen opmerkingen:
Een reactie posten