[ சனிக்கிழமை, 06 செப்ரெம்பர் 2014, 07:05.31 AM GMT ]
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15வது தேசிய மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் ஆரம்பமாகியது.
கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் காலை 9.30க்கு ஆரம்பமான நிகழ்வுகளில் 160 பொதுச்சபை உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதன்போது தமிழரசுக் கட்சியின் தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட கட்சியின் புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.
இதனையடுத்து நாளை இடம்பெறவுள்ள கட்சியின் மாநாட்டில் வெளியிடப்படும் தீர்மானங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளது.
இன்றைய நிகழ்வுகளில் தமிழ்த் தேசியத்தின் பதிவுகள் என்ற தலைப்பிலான புகைப்பட கண்காட்சியும் இடம்பெற்றிருந்ததுடன் மாலை 02.00 மணிக்கு தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி மாநாடும் இடம்பெறவுள்ளது.
இரண்டாம் இணைப்பு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கட்சியின் சம்மேளனக் கூட்டத்துக்கு முன்னதான புதிய மத்திய அமைப்புக் கூட்டத்தில் இதற்கான பிரேரணை முன்மொழிய, ஏகமனதாக மாவை சேனாதிராஜா தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
இந்தநிலையில் கட்சியின் செயலாளராக கிழக்கு மாகாணசபையின் உறுப்பினர் துரைராஜசிங்கம் நியமிக்கப்பட்டார்.
இதுவரை காலமும் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனே தமிழரசுக் கட்சியின் தலைவராகவும் செயற்பட்டு வந்தார்.
இந்த தலைமைத்துவ மற்றும் கட்சியின் பொறுப்பு மாற்றங்கள் குறித்து அறிவிப்பு நாளை நடைபெறவுள்ள பேராளர் மாநாட்டில் பகிரங்கமாக அறிவிக்கப்படவுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJTaKUip4.html
இலங்கையில் நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள வெளிநாட்டவர்கள்
[ சனிக்கிழமை, 06 செப்ரெம்பர் 2014, 07:32.46 AM GMT ]
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயத்தில் அகதி அந்தஸ்து கோரி இலங்கையில் தங்கியிருக்கும் ஆயிரத்து 456 வெளிநாட்டவர்களை நாட்டில் இருந்து வெளியேற்றும் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் முதல் கட்டமாக 10 பாகிஸ்தான் பிரஜைகள் நேற்று மதியம் கட்டுநாயக்கவில் இருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இலங்கையில் தங்கியிருக்கும் 240 பாகிஸ்தான் பிரஜைகளை நாடுகடத்த குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் எடுத்த தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 3 ஆம் திகதி தள்ளுபடி செய்தது.
இலங்கையில் உள்ள அகதிகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகராலயத்தில் ஆயிரத்து 606 வெளிநாட்டவர்கள் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களில் 321 பேருக்கு மாத்திரம் உயர்ஸ்தானிகராலயம் அகதி அந்தஸ்து வழங்கியுள்ளது. ஏனையோர் அகதி அந்தஸ்தை எதிர்பார்த்துள்ளவர்கள்.
இவர்களில் ஆயிரத்து 324 பாகிஸ்தான் பிரஜைகளும் 185 ஆப்கானிஸ்தான் பிரஜைகளும் மாலைதீவு, நைஜீரியா மற்றும் ஈரான் பிரஜைகளும் அடங்குகின்றனர்.
குடிவரவு, குடியல்வு திணைக்களம் ஏற்கனவே 150 பேரை அவர்களின் நாடுகளுக்கு திருப்பி அனுப்பியிருந்தது.
அகதிகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகராலயத்தில் பதிவு செய்து விட்டு நாடு முழுவதிலும் பரந்து வாழ்ந்து சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTaKUip5.html
Geen opmerkingen:
Een reactie posten