தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 11 september 2014

கடையை உடைத்து திருட்டு: வவுனியாவில் சம்பவம்- கெஸ்பாவ நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு!

ஆறு வயது மகளை குத்திய தாய்- குளிருக்கு அணியும் அங்கியை அணிந்து சென்றதால் மாணவியை தாக்கிய ஆசிரியர்
[ வியாழக்கிழமை, 11 செப்ரெம்பர் 2014, 05:38.16 AM GMT ]
மனநோயாளியான தாய் ஒருவர் தனது ஆறு வயது மகளை கத்தியால் குத்திய சம்பவம் ஒன்று வெலிமடை அம்பகஸ்தொவ பகுதியில் (09.09.2014) அன்று இடம்பெற்றதாக நுவரெலியா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெலிமடை அம்பகஸ்தொவ பகுதியில் (09.09.2014) அன்று இடம்பெற்றதாக நுவரெலியா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வெலிமட அம்பகஸ்தொவ பகுதியை சேர்ந்த மனநோயாளியான பெண் ஒருவர் தனது ஆறு வயது மகளை கத்தியால் குத்தி காயங்களை ஏற்படுத்தியுள்ளார்.
இதனை அடுத்து குறித்த குழந்தையின் தந்தை உடனடியாக குழந்தையை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
இதனை தொடர்ந்து குழந்தை, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக (10.09.2014) அன்று கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் மயக்கமருந்தியல் வைத்திய உதவியாளர்கள் இல்லாமையினாலேயே அவர் கண்டிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், குழந்தையின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் நுவரெலியா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குளிருக்கு அணியும் அங்கியை அணிந்து சென்றதால் மாணவியை தாக்கிய ஆசிரியர்
நுவரெலியா நகரில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் மாணவியொருவர் ஆசிரியையால் தாக்கப்பட்டு நுவரெலியா வைத்தியசாலையில் (09.09.2014) அன்று அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளதாக, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பாக தெரியவருவதாவது,
குறித்த பாடசாலையில் கல்விகற்கும் தர்சினி குமாரி என்ற மாணவி வயது (15) க.பொ.த சாதரண தரத்தில் கல்விகற்று வருகின்றார்.
இவர் (09.09.2014) அன்று பாடசாலை சீருடைக்கு மேலாக குளிருக்காக அணியும் அங்கி ஒன்றை அணிந்து சென்றுள்ளார்.
இதனை கவனித்த பாடசாலையின் ஆசிரியை ஒருவர் இவரை அழைத்து கன்னத்தில் அறைந்துள்ளார்.
இதன் காரணமாக மாணவி பாதிப்படைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் சிறுவர் பராமரிப்பு நன்நடத்தை பிரிவில் முறையிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், குறித்த ஆசிரியை இந்த விடயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் எனவும் அப்படி செய்தால் தங்களுக்கே பாதிப்பு அதிகம் எனவும் தமக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகவும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSVKUgs1.html
இந்திய மீனவர்கள் 51 பேர் கைது- படகு கவிழ்ந்து இரு மீனவர்கள் பலி: மொறட்டுவையில் சம்பவம்
[ வியாழக்கிழமை, 11 செப்ரெம்பர் 2014, 05:57.30 AM GMT ]
தலைமன்னர் மற்றும் பருத்தித்துறை கடற்பரப்புகளில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 51 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
தலைமன்னாரில் 30 இந்திய மீனவர்களை கடற்படையினர் இன்று காலை கைது செய்துள்ளனர்.
ஏனைய 21 இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் கூறியுள்ளனர்.
படகு கவிழ்ந்து இரு மீனவர்கள் பலி - மொறட்டுவையில் சம்பவம்
மொறட்டுவை - கொரலவெல்ல கடற்பரப்பில் மீன்பிடி படகொன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் இரண்டு மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் அதிகாலை நடந்துள்ளதாக மொறட்டுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மீன்பிடி படகில் 4 மீனவர்கள் பயணித்துள்ளனர். இவர்களில் இருவர் உயிர் தப்பியுள்ளனர்.
இவர்களில் ஒருவர் தற்போது பாணந்துறை தெற்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரலவெல்ல பிரதேசத்தை சேர்ந்த மீனவர்களே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJSVKUgs2.html
கடையை உடைத்து திருட்டு: வவுனியாவில் சம்பவம்- கெஸ்பாவ நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு
[ வியாழக்கிழமை, 11 செப்ரெம்பர் 2014, 06:19.35 AM GMT ]
வவுனியா நவீன சந்தை கட்டிடத் தொகுதியில் இயங்கிய இரு கடைகளை உடைத்து திருடியவர்களை தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மடக்கிப் பிடித்து தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று புதன்கிழமை இரவு 11.30 மணியளவில் நவீன சந்தைத் தொகுதியில் உள்ள அழகுப்பொருள், புடவை கடைகள் உடைத்து உட்புகுந்த திருடர்கள் அவ்விரு கடைகளிலும் இருந்த 6000 ரூபா மற்றும் 10,000 ரூபா பணத்தை திருடியுள்ளதாக தெரியவருகின்றது.
இதன்போது அங்கு கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் திருடர்களின் நடமாட்டத்தை அவதானித்து, ஒருவரை மடக்கிப் பிடித்தனர். மேலும் இருவர் அங்கிருந்து தப்பியோடி கண்டி பஸ்ஸில் ஏறி மாயமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததும் பஸ்ஸை வழிமறித்த வவுனியா பொலிஸார் குறித்த இரு நபர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள மூவரும் ஹற்றன் மற்றும் எட்டியாந்தோட்டைப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
இச் சம்பவம் தொடர்பில் வவுனியாப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
கெஸ்பாவ நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு
கெஸ்பாவ நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக அழைத்து செல்லப்பட்ட கைதி ஒருவர் தப்பிச் செல்ல முற்பட்ட போது இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொள்ளையொன்றுடன் தொடர்புடைய 29 வயதான இளைஞரே சம்பவத்தில் காயமடைந்துள்ளார். தப்பிச்செல்ல முயற்சித்த சந்தேக நபரை சிறைச்சாலை அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
காயமடைந்த சந்தேக நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJSVKUgs4.html

Geen opmerkingen:

Een reactie posten