அகதிகளுக்காக வாதாடும் சட்டத்தரணிகள் மொரிசன் அறிமுகப்படுத்திய தற்காலிக பாதுகாப்பு விசாவினை நிராகரித்துள்ளனர்.
இது தொடர்பாக அகதிகள் அதிரடி கூட்டணி அமைப்பாளர் இயன் தெரிவித்ததாவது,
இந்த விசாவினை அறிமுகப்படுத்துவதற்காக நவுறு மற்றும் மனுஸ் தீவுகளில் உள்ள சிறுவர்களை நாட்டுக்குள் எடுப்பதென்றால் இந்த விசாவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளதாகவும், இதன் மூலமாக இந்த சிறுவர்கள் பழிவாங்கப்படுவதாகவும் இயன் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு பாராளுமன்றத்தில் எதிராக வாக்களிக்கும் படி வலியுறுத்தியுள்ளனர்.
மொரிசன் இந்த விசா நடைமுறையை செனட் சபையில் நிறைவேற்ற முடியாத காரணத்தினால் சிறுவர்களை வைத்து பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சட்டத்தரணிகளும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எது எவ்வாறாயினும், மொரிசனின் இந்த சிறுவர்களை வைத்து நடத்தும் துஸ்பிரயோகங்களுக்கு கடும் எதிர்ப்பை தெரிவிப்பதாகவும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளதாக இயன் தெரிவித்துள்ளார்.
இந்த விசாவினை அறிமுகப்படுத்துவதன் மூலம் முகாம்களுக்குள் இருக்கும் அகதிகளுக்கு மட்டும் அல்லாமல் அனைத்து அகதிகளுக்கும் பாரிய பிரச்சினையை ஏற்படுத்தும்.
அமைச்சரின் இந்த நடவடிக்கை அவர் அறிமுகப்படுத்திய புதிய அகதிக் கொள்கைகளுக்கு மாறுபட்டதாக இருக்கின்றது.
அதே நேரம் ஒரே படகில் வந்தவர்களை அமைச்சரின் புதிய கொள்கை சட்டப்படி 2 பிரிவுகளாக பிரித்து, ஒரு சிலரை நாட்டுக்குள் எடுப்பது மிகுதி பேரை மனுஸ் மற்றும் நவுறு தீவு போன்ற தீவுகளில் தங்க வைப்பது புகலிடக் கோரிக்கையாளர்கள் மத்தியில் அநீதி விளைவிப்பதாகவும் இருக்கின்றது.
இதன் காரணமாகத்தான் மிகவும் மனமுடைந்து தற்கொலைகள் அதிகரிக்கின்றது. இவர்களை 3ம் தரப்பு நாடுகளில் வைத்து விசாரணை என்ற தீர்மானமும் தோல்வி கண்டுள்ளது.
இதற்கு முதல் இருந்த ஹோவட் அரசாங்கமும் இந்த நடவடிக்கை தோல்வி காரணமாக மீள நாட்டுக்குள் புகலிடக் கோரிக்கையாளர்களை அழைத்திருந்தது.
கிறிஸ்மஸ், மனுஸ், நவுறு போன்ற தீவுகளில் அகதிகளை வைத்து விசாரிக்கும் அரசின் கொள்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றத்தில் வருகின்ற ஒக்டோபர் மாதம் 14ம் திகதி விசாரணைக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கத்தின் சட்டக் கொள்கை படி நவுறு, மனுஸ் தீவுகளுக்கு அனுப்பப்படுவது சட்ட விரோதமானது என்பதற்காக வருகின்ற ஒக்டோபர் மாதாம் 14 ம் திகதி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்படுவதாகவும் இயன் தெரிவித்துள்ளார்.
இவை அனைத்தும் வெறுமனே மொரிசன் அவர்களின் அரசியல் நாடகமே. சிறுவர்கள் விடயத்தில் அக்கறை உள்ளவராயின் சிறுவர்களை வைத்து பழிவாங்கும் நடவடிக்கையை கை விட்டு அவர்களை சமூகத்தில் இணைத்திருக்கலாம் என இயன் மேலும் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்மஸ் தீவு அகதி முகாமில் புகலிடக் கோரிக்கையாளர்கள் வெட்ட வெளியில் தூங்குவதாக அதிர்ச்சித் தகவல்
கிறிஸ்மஸ் தீவு அகதிகள் முகாமில் அகதிகள் வெட்ட வெளியில் தூங்குவதாக கிறிஸ்மஸ்தீவு வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மைக் காலமாக அவுஸ்திரேலியாவுக்குள் உள்ள பாரிய மூன்று முகாம்கள் மூடப்பட்டுள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக அகதிகள் பாரிய பிரச்சினைக்கு முகம் கொடுதுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற வாரம் 2 ஈரானிய புகலிடக்கோரிக்கையாளர்கள் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளதாக கிறிஸ்மஸ் தீவு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு வருட காலமாக இவர்களுக்கு வழக்குகள் ஏதும் நடத்தாமல் இவர்களை நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்காக அடிமைகள் போல் நடத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களை மனிதாபிமானம் அற்ற முறையில் கிறிஸ்மஸ் தீவில் வைத்திருப்பதன் மூலம் அவுஸ்திரேலியா அரசாங்கம் பல மில்லியன் செலவிடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக இந்த முகாம்களை மூட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJSVKUgs0.html
Geen opmerkingen:
Een reactie posten