தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 8 september 2014

அவுஸ்திரேலியாவின் அகதி கொள்கைகளை எதிர்த்து மாபெரும் ஆர்ப்பாட்டம்!

தற்போது இலங்கைக்கு விஜயம் செய்ய முடியாது: பாகிஸ்தான் நிபுணர்
[ திங்கட்கிழமை, 08 செப்ரெம்பர் 2014, 04:01.40 AM GMT ]
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பாகிஸ்தான் நிபுணர், தற்போதைக்கு இலங்கை விஜயம் செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இரண்டு பிரதிநிதிகளை, நிபுணர் குழுவிற்கு பரிந்துரை செய்திருந்தார்.
பாகிஸ்தானின் முன்னாள் நீதி அமைச்சரும், சர்வதேச சட்ட வல்லுநருமான அஹம் பீ சுபீ என்பவரை ஜனாதிபதி பரிந்துரை செய்திருந்தார்.
காணாமல் போனவர்கள் தொடா்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் வெளிநாட்டு நிபுணர்கள் நியமிக்கப்பட்டனர்.
ஜனாதிபதியின் இந்த அழைப்பினை ஏற்றுக் கொள்வதாக சுபீ தெரிவித்துள்ளார்.
எனினும், கடுமையான வேலைப்பளு காரணமாகவும், ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ள சில பணிகள் காரணமாக உடனடியாக இலங்கைக்கு விஜயம் செய்வதில் சிரமம் காணப்படுகிறது.
எனது காரியாலயம் இலங்கையுடன் தொடர்புகளைப் பேணி வருகின்றது.
எப்போது இலங்கைக்கு விஜயம் செய்ய முடியும் என்பதனை திட்டவட்டமாக அறிவிக்க முடியாது.
எனினும், இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு ஆலோசனை வழங்குவேன் என அவர் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJTcKUix0.html
அவுஸ்திரேலியாவின் அகதி கொள்கைகளை எதிர்த்து மாபெரும் ஆர்ப்பாட்டம்
[ திங்கட்கிழமை, 08 செப்ரெம்பர் 2014, 04:59.47 AM GMT ]
புகலிடக் கோரிக்கையாளர்கள் விடயத்தில் அரசும் எதிர் கட்சியும் சேர்ந்து சரியான சிறந்ததொரு முக்கிய முடிவினை எடுக்க வேண்டும் என்று எதிர் வரும் 11ம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை Refugee Action Coalition சிட்னியில் ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடர்பாக அகதிகள் அதிரடி கூட்டணி அமைப்பாளர் இயன் ரிண்டோல் தெரிவித்ததாவது,
அவுஸ்திரேலியா அரசாங்கமும் எதிர் கட்சியும் சேர்ந்து அப்பாவி புகலிடக் கோரிக்கையாளர்கள் விடயத்தில் மிகவும் ஆக்க பூர்வமான முடிவினை எடுக்க வேண்டும்.
அவுஸ்திரேலியா அகதிகளை உள்வாங்கும் நாடு இதற்கு மாறாக அகதிகளை கொலை செய்யும் அளவுக்கு மாறியுள்ளது.
மிக விரைவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் விடயத்தில் சிறந்த ஒரு முடிவினை எடுக்காவிடின் பாரியளவில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார் .
கடந்த காலங்களில் இருந்த அரசு புகலிடக் கோரிக்கையாளர்கள் விடயத்தில் மிகவும் சிறந்த முடிவினை எடுத்திருந்தது.
இந்த அரசு மக்களின் வாக்குறுதியை நிறைவேற்றுவதாக கூறி அப்பாவி புகலிடக் கோரிக்கையாளர்களை தற்கொலை செய்யும் அளவிற்கு நடத்துகின்றது.
மக்கள் தற்போது இந்த அரசாங்கத்தின் நடவடிக்கையை எதிர்க்கும் அளவுக்கு மாறியுள்ளார்கள் என்பதுதான் உண்மை.
டோனி அபொட்டின் ஓராண்டு பிரதம மந்திரி பதவி காலத்தில் 24 புகலிடக் கோரிக்கையாளர்களை அநியாயமாக மரணமாக்கியதும் முக்கிய அம்சமாக விளங்குகின்றது.
அண்மையில் பிரதமர் டோனி அபொட் தனது அரசியல் வாழ்க்கையில் பல வெற்றிகரமான விடயங்களை செய்துள்ளதாகவும், மக்களுக்கு அளித்த ஆணை படி புகலிடக் கோரிக்கையாளர்கள் விடயத்தில் தான் நடந்து கொள்ளும் விதம் சரியானது என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கு அகதிகள் அதிரடி கூட்டணி அமைப்பாளர் இயன் ரிண்டோல், பிரதமரின் செயற்பாடு மிகவும் துன்பகரமான நிகழ்வுகளும் மனித உரிமை மீறல்களும் செய்த பிரதமாராக தான் இருக்கின்றார் என்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் மரணிக்கும் அளவுக்கு எந்த அரசாங்கமும் நடத்த வில்லை என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டமானது எதிர் வரும் 11ம் திகதி சிட்னி உள்ள ஹைட் பார்கில் இடம்பெற உள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTcKUix1.html

Geen opmerkingen:

Een reactie posten