[ திங்கட்கிழமை, 08 செப்ரெம்பர் 2014, 02:53.20 AM GMT ]
கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை நடைபெற்றது.
பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் பூர்த்தியாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் புஸ்பகுமார சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
மூன்று லட்சம் மாணவ மாணவியர் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
இந்த மாத இறுதியளவில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டில் சர்வதேச சிறுவர் தினமன்று பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டது.
இவ்வாறு பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டமைக்கு பல்வேறு தரப்பினரும் கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJTcKUiw6.html
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய ஊவாவில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்
[ திங்கட்கிழமை, 08 செப்ரெம்பர் 2014, 03:05.15 AM GMT ]
பொலிஸார் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
தேர்தல் தினமன்று பதினோராயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக 325 வாகனங்களும், பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள், பொலிஸ் அத்தியட்சகர்கள் உள்ளிட்ட 40 உயர் அதிகாரிகளும் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தேர்தல் வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு பொலிஸ் பிணை வழங்காது, நீதிமன்றில் முன்னிலைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஊவா மாகாணசபைத் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 48 பொலிஸ் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTcKUiw7.html
தாய் மண்ணை வாழ வைக்க புலம்பெயர் உறவுகளால் முடியும்: அவுஸ்திரேலியாவில் சிறிதரன் எம்.பி
[ திங்கட்கிழமை, 08 செப்ரெம்பர் 2014, 03:40.02 AM GMT ]
இதன்போது, புலம்பெயர் அவுஸ்திரேலியா உறவுகளால் ஒழுங்கு செய்யப்பட்ட போரினால் பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கான உதவிக்கரம் என்ற தலைப்பிலான ஒன்று கூடலில் கலந்துகொண்டு கலந்துரையாடி, தற்போதைய தாயக மக்களின் அரசியல், பொருளாதார வாழ்வு நிலைமைகள் தொடர்பாக கருத்துரைத்தார்.
அவர் தனது உரையில்,
சுதந்திரமான ஊர் திரும்பும் கனவோடு நிலத்தில் பல்வேறு துன்பங்களுடன் ஆனால் என்றும் உறுதி குன்றா மனதுடன் வாழ்ந்தவரும் உறவுகளுக்காக அல்லும்பகலும் பாடுபடும் உங்களுக்கு முதலில் நன்றி சொல்கிறேன்.
இன்றைய அரசியல் சர்வதேச சூழலில் புலம்பெயர் மக்களின் பங்கை உலகம் அறியும். அவர்களின் உழைப்பும் இராஜதந்திரமும் ஒரு மாற்றத்திற்கான மைல்கல்லை நாட்டியிருக்கின்றது.
இது சாதாரண விடமல்ல. இந்த நிலையில் தாயகத்தில் வாழும் உறவுகளின் இன்றைய சூழல் மிகவும் நெருக்கடி மிகுந்ததாகவே காணப்படுகின்றது.
அச்சமும் ஏக்கமும் நிறைந்த அடிமை தனத்துக்குள் அவர்கள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அதற்கு காரணம் அவர்களின் கையில் இருந்த பொருளாதாரம் அடியோடு ஆக்கிரமிப்பாளர்களால் பேரினவாத அரசாங்கத்தால் சாய்க்கப்பட்டு அவர்கள் கையேந்திகளாக வாழ நிர்ப்பந்திக்கப்படுவது.
தொழில் இன்மை காரணமாக அவர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை கல்வியை எப்படி ஒளி மிகுந்ததாக ஆக்குவது பற்றி மிகவும் ஏங்குகின்றார்கள்.
இந்த ஏக்கத்தை பேரினவாத அரசாங்கம் தன் அடக்குமுறைக்கு பயன்படுத்தி சமூக சீரழியையும் இனக்கலப்பையும் ஏற்படுத்தி எமது இன விகிதாசாரத்தை சனத்தொகையை குறைத்து தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட முனைகின்றது.
எனவே இதை நாம் வெற்றி கொண்டு எமது மக்களை தமது இன அடையாளங்களுடன் வாழ அவர்களுக்கான வாழும் வகைகளை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.
அது புலம் பெயர் மக்களின் கைகளிலேயே தங்கி இருக்கின்றது. போர் முடிந்தபின் எமது மக்களை தூக்கி நம்பிக்கையுடன் நிமிர்த்தும் கடமையை கணிசமாக தொடர்ந்து பல நாடுகளில் இருந்தும் செய்து வருகின்றார்கள்.
நீங்களும் உதவிக்கரம் கொடுக்கின்றீர்கள் நன்றி. உங்கள் நல்லெண்ணத்தால் பொருளாதாரத்திலும் கல்வியிலும் இன அடையாளத்துடனும் முழுமையுள்ள சமுதாயத்தை உருவாக்க நம்பிக்கையுடன் உழைப்போம் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTcKUixz.html
Geen opmerkingen:
Een reactie posten