தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 8 september 2014

திடீரென காணாமல் போன மாணவி: பொலிஸார் தேடுதல் வேட்டையில் (செய்தித் துளிகள்) !

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டக்கொடை மடக்கும்புர கீழ் பிரிவு தோட்டத்தில் வசிக்கும் 10ஆம் ஆண்டு கல்வி கற்கும் சக்திவேல் நித்தியா (வயது 15) எனும் மாணவி கடந்த 5ம் திகதியிலிருந்து திடீரென காணாமல் போயுள்ளார்.
வெளியே சென்ற மாணவி வீட்டுக்கு திரும்பாததையடுத்து மாணவியின் உறவினர்கள் அயலவர்களின் உதவியோடு தேடுதல் பணிகளில் ஈடுப்பட்டிருந்தபோதிலும் அவர் கிடைக்கப்பெறவில்லை.
அதன்பின் மாணவியின் தந்தை நேற்று தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளநிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு தேடுதல் பணிகளிலும் ஈடுப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவி வட்டக்கொடை தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.
குளவி கொட்டுக்கு இழக்காகி இரு மாணவா்கள் வைத்தியசாலையில் அனுமதி
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவான பகுதியில் 08.09.2014 அன்று காலை 9.00 மணியளவில் குளவி கொட்டியதால் இரு சிறுவர்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொகவான பகுதிக்கு விறகு சேகரிக்க சென்ற சிறுவர்கள் மற்றும் தொழிலாளிகள் மீது மரத்தில் இருந்த குளவி கூடு கலைந்து வந்து இவ்வாறு தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களில் ஏனையோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் அவர்களுக்கு பெரும் பாதிப்பில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இதில் இரண்டு சிறுவர்கள் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர் தற்கொலை
இராணுவ வீரர் ஒருவர் அவருக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்தது.
பாதுக்கை - பாணலுவ பிரதேசத்தில் உள்ள காவலரணில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரரே இவ்வாறு நேற்றிரவு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குருணாகல் - அம்புலேகம பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான இராணுவ வீரரே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
நீதவான் விசாரணையும் மரணத்திற்கு பின்னரான பிரேத பரிசோதனையும் இன்று நடைபெறவுள்ளது.
உணவு விஷமானதால் பெண் உயிரிழப்பு
கடந்த வெள்ளியன்று ஆடைத் தொழிற்சாலையில் வழங்கப்பட்ட உணவு விஷமானதால் 65 பெண் ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் இதில் ஒரு பெண் சிகிச்சை பலனின்றி நேற்று இவர் உயிர் இழந்து விட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளது.
உயிர் இழந்த பெண் 48 வயதுடைய ஞானவதி என்று தெரிவிக்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmsyJTcKUix2.html

Geen opmerkingen:

Een reactie posten