தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 10 september 2014

உலக தற்கொலை தடுப்பு தினம் இன்று- விழிப்புணர்வு நிகழ்விற்கு மக்களை பலவந்தமாக அழைத்து வந்த படையினர்!

கூட்டமைப்பு அரசுடன் பேசுவதால் எதையும் சாதிக்க முடியாது அரசே தீர்வுத் திட்டத்தை முன்வைத்து பேச வேண்டும்: மக்கள் விடுதலை முன்னணி
[ புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2014, 06:01.03 AM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பாராளுமன்ற தெரிவு குழுவிற்கு அழைப்பதினாலேயோ அல்லது அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதாலேயோ தமிழர் பிரச்சினைகள் தீர்க்கப்பட போவதில்லை.
அரசாங்கம் முதலில் தனது தீர்வுத் திட்டத்தை முன் வைக்க வேண்டும். அந்த தீர்வுத் திட்டத்தின் அடிப்படையிலேயே பேச்சுவார்த்தை நடைபெறல் வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரடி பேச்சுவார்த்தைக்கு அரசு தயாரில்லை என்று கூறிய கருத்திற்கு பதில் கூறும் விதத்திலேயே மக்கள் விடுதலை முன்னணி இந்த கருத்தை அதன் பிரச்சார செயலாளர் விஜித்த ஹெரத் மூலமாக வெளியிட்டுள்ளது.
முதலில் அரசு தீர்வுத் திட்டத்தை முன் வைத்து பேச்சுவார்த்தை நடாத்தி ஓர் இணக்கபாட்டை ஏற்படுத்திய பின் தெரிவுக்குழுவில் பங்கேற்கலாம்.
அரசே முதலில்  தீர்வுத்  திட்டமொன்றை முன்வைத்து பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும். அதை விடுத்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பை  பாராளுமன்ற தெரிவிற்குழுவிற்கு பங்கேற்க அழைப்பதால் எதுவிதமான பிரயோசனமும் கிடையாது.
மக்கள் விடுதலை முன்னணியை பொறுத்தவரை இலங்கையில் வாழும் அனைத்தின மக்களும் சமத்துவத்துடன் வாழ்வதையே விரும்புகின்றது என்றும் தமது அறிக்கையில் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSUKUhx5.html
உலக தற்கொலை தடுப்பு தினம் இன்று- விழிப்புணர்வு நிகழ்விற்கு மக்களை பலவந்தமாக அழைத்து வந்த படையினர்
[ புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2014, 06:20.15 AM GMT ]
தற்கொலையை தடுப்பதற்கு உலகளாவிய ரீதியில் அர்ப்பணிப்பை ஏற்படுத்துதல் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வதை இலக்காக கொண்டு இந்த தினம் ஒவ்வொரு வருடமும் செம்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி நினைவுகூரப்படுகின்றது.
தற்கொலை தடுப்புக்கான சர்வதேச அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் உலக சுகாதார ஸ்தாபனம் ஆகியன இணைந்து 2003ஆம் ஆண்டில் இந்தத் தினத்தை பிரகடனப்படுத்தியிருந்தன.
ஒவ்வொரு ஆண்டும் 8 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் தற்கொலை மூலம் உயிரிழப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்தாபனத்தின் இந்த அறிக்கையின் மூலம் 40 செக்கன்களுக்கு ஒருவர் தற்கொலை செய்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளிலேயே தற்கொலை மூலமான உயிரிழப்புக்கள் அதிகளவில் பதிவாகியுள்ளன.
தற்கொலைக்கு எந்தவொரு வயதினரும் தூண்டப்படலாம் என்பதுடன் உலகளாவிய ரீதியில் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களே அதிகளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
அண்மையில் உலக சுகாதார ஸ்தாபனம் நடத்திய ஆய்வொன்றில் இலங்கை தற்கொலை வீதத்தில் உலகிலேயே நான்காவது இடத்தில் உள்ளமை தெரியவந்துள்ளது.
இலங்கையில் வருடாந்தம் மூவாயிரம் பேர் தற்கொலை செய்துகொள்வதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாக அமையாது என விசேட உளநல வைத்திய அதிகாரி எம்.கணேசன் சுட்டிக்காட்டுகின்றார்.
தற்கொலைக்கான காரணங்கள் என்று பார்க்கும் போது தற்பொழுது அதிகளவில் சமூக வலைத் தளங்களின் உடாக ஏற்படும் நட்பு, காதல் போன்றவற்றால் ஏற்படும் மனக்கசப்புக்கள் தற்கொலை செய்யத் தூண்டுகின்றன. 
சமூக வலைதளங்களில் முகம் தெரியாதவரிடம் நட்பு பாராட்டி, அன்பை வாரி இறைத்து அதில் ஏமாற்றம் மிஞ்சும்போதும், சிறு சிறு குடும்பச் சண்டைகளுக்கு உணர்ச்சி வசப்பட்டும் இளைஞர்கள் மத்தியில் தற்கொலைகள் நடக்கின்றன. ஆனால், அதைவிட முதியவர்கள் தற்கொலை செய்துகொள்வதுதான் பரிதாப நிலை ஆகும்.
அடுத்த நொடி, ‘உயிருடன் இருக்க மாட்டோம்’ எனத் தெரிந்தும் தற்கொலை செய்துகொள்ள துணி வோருக்கு, வாழ்க்கையில் எது எதிர்வந்தாலும், ‘போராடி வெல்வோம்’ என்ற தைரியத்தை கொடுக்கக் கூடிய வாழ்வியல் போக்கு இல்லாமல் இருப்பதும் இந்தத் தற்கொலைகளுக்கு காரணமாகிறது.
முதியோர்களை மதித்து பாதுகாக்கும் பொறுப்பு ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் உள்ளது. குழந்தையாக இருக்கும் போது வாரி அணைத்து வழிகாட்டிய பெற்றோரை, முதுமை காலத்தில் அவர்களை குழந்தையாக பாவித்து, காத்தால் தற்கொலை எண்ணிக்கை குறையும் என்பதுதான் யதார்த்தமான உண்மை.
விழிப்புணர்வு நிகழ்விற்கு மக்களை பலவந்தமாக அழைத்து வந்த படையினர்
யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட தற்கொலை விழிப்புணர்வு தொடர்பான நிகழ்வில் மக்கள் பலவந்தமாக அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.  
 இன்று காலை 10மணியளவில் படையினரால் தற்கொலை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டவர்கள், தங்களை பலவந்தமாக தற்கொலை விழிப்புணர்வுக்கு படையினர் அழைத்து வந்துள்ளனர் எனவும் இது தற்கொலை விழிப்புணர்வு என்று தமக்கு தெரியாது எனவும் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJSUKUhx6.html

Geen opmerkingen:

Een reactie posten