தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 10 september 2014

இலங்கை அகதி மாணவர்களுக்கான சலுகைகள் என்ன?: தமிழக அரசிடம் விளக்கம் கோரும் நீதிமன்றம்!

ஊவா மாகாணத்தில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு ரணில் கோரிக்கை- வறட்சியின் பெயரில் குடும்பத்திற்கு 2500 ரூபா நிதி
[ புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2014, 05:06.57 AM GMT ]
ஊவா மாகாண தேர்தலின் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்துமாறு எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
நாள்தோறும் ஊவா மாகாணத்தில் இடம்பெற்றுவரும் வன்முறைகளை அடுத்தே இந்தக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை சர்வதேச ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாடு நடத்தப்படவுள்ளது.
இந்தநிலையிலேயே ஊவாவில் வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன.  எனவே அங்கு பாதுகாப்பை பலப்படுத்துமாறு ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளார்.
இதேவேளை ரணில் விக்கிரமசிங்கவுக்கு பதில் வழங்கும் வகையில் கருத்துரைத்துள்ள அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, ஊவாவில் அரசாங்கத்தின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
வரட்சியின் பெயரில் குடும்பத்திற்கு 2500 ரூபா நிதி
ஊவா மொனராகலை மாவட்டத்தில் தற்பொழுது தேர்தல் வன்முறைகள் அதிகரித்து செல்லும்  நிலையில் அரசு வறட்சி நிவாரணம் என்ற பெயரில் குடும்பத்திற்கு தலா 2500 ரூபாய் நிதி உதவி வழங்க ஏற்பாடுகள் செய்திருப்பதை தேர்தல் கண்கானிப்பு அமைப்பான “பெப்ரல்” தனது கடும் எதிர்ப்பை அரசுக்கு தெரிவித்துள்ளது.
வடமராட்சியில் சுமார்  ஒன்பது மாவட்டங்கள்  கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் இவ்வேளையில் ஊவாவில் தேர்தல் நடைபெறும் மாவட்டமான   மொனராகலைக்கு மாத்திரம் இந்த நிதி உதவி கொடுப்பது தேர்தல் சட்டத்தை மீறும் ஒரு பாரிய குற்றமாகும் என்றும் உடனடியாக இது நிறுத்தப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJSUKUhx2.html
இலங்கை அகதி மாணவர்களுக்கான சலுகைகள் என்ன?: தமிழக அரசிடம் விளக்கம் கோரும் நீதிமன்றம்
[ புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2014, 05:57.21 AM GMT ]
இந்தியாவில் பிறந்த இலங்கை அகதிகளின் பிள்ளைகளுக்கான சலுகைகள் தொடர்பான நிலைப்பாடுகளை, தமிழக அரசாங்கம் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடவேண்டும் என்று சென்னை மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதி எஸ்.கே கௌல் இதற்கான உத்தரவை நேற்று பிறப்பித்துள்ளார்.
ஈரோடு அராச்சலூர் அகதி முகாமில் வசிக்கும் நந்தினி என்ற இலங்கை அகதி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது சென்னை நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமது 197.5 வெட்டுப்புள்ளியை பெற்ற பின்னர் எம்பிபிஎஸ் கற்கைக்காக விண்ணப்பித்த போதும், அகதி என்ற காரணத்தினால் தமது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக குறித்த அகதி மாணவி தமது மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் அகதிகளுக்கு மனித உரிமைகள் காக்கப்படுகின்றது என்பதை எவ்வாறு கூறமுடியும் என்றும் மனுதாரர் கேள்வி எழுப்பியிருந்தார்.
எனினும் அரசாங்க மருத்துவக் கல்லூரிகளுக்கான வெட்டுப்புள்ளி 199.25 என்ற அடிப்படையிலேயே குறித்த மாணவியின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படவில்லை என்று அரசாங்கத்தின் சார்பில் ஆஜரான சுகாதார செயலாளர் ஜே ராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
இதனையடுத்து இலங்கை அகதி மாணவர்களுக்கான சலுகைகள் குறித்து தமிழக அரசாங்கம் தமது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது
http://www.tamilwin.com/show-RUmsyJSUKUhx4.html

Geen opmerkingen:

Een reactie posten