தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 10 september 2014

ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கு: சுப்பிரமணியன் சுவாமிக்கு நீதிமன்றம் அழைப்பாணை

அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் - கோத்தபாய சந்திப்பு
[ புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2014, 06:26.47 AM GMT ]
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் 11 அரச சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் பொதுநலவாய மக்கள் பேரவை ஆகியவற்றின் 11 பிரதிநிதிகள் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை சந்தித்துள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தின் லலித் சந்திரதாஸ இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்.
இந்தநிலையில் குறித்த சந்திப்பு அரசாங்கத்துக்கும் அரசசார்பற்ற அமைப்புக்களுக்கும் இடையில் நிகழ்த்தப்பட்ட ஆரம்ப கலந்துரையாடலாக அமைந்ததாக தேசிய சமாதான சபை தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின்போது அரசசார்பற்ற அமைப்புக்கள் அதிகாரப்பகிர்வு, காணாமல் போனோர் விடயங்கள் தொடர்பில் ஈடுபடும் போது அரசாங்கம் மேற்கொள்ளும் கண்காணிப்புக்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டன.
அத்துடன் அரச சார்பற்ற செயலகமும் அரச சார்பற்ற அமைப்புக்களும் ஒழுங்கின் அடிப்படையில் கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டும் என்ற விடயம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அத்துடன் அரச சார்பற்ற அமைப்புக்கள் முன்கொண்டு வந்த பிரச்சினைகள் ஒவ்வொன்றுக்கும் பாதுகாப்பு செயலாளர் விளக்கங்களை வழங்கினார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSUKUhx7.html
யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு- குளவி கொட்டுக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில்
[ புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2014, 07:07.50 AM GMT ]
யாழ்.புன்னாலைக்கட்டுவன் பிரதேசத்தைச் சேர்ந்து 25 வயது இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
புன்னாலைக்கட்டுவான் தெற்கு, ஈவினைப் பகுதியில் நேற்று இரவு 9 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிவசுப்பிரமணியம் அச்சுதன் (வயது 25) என்ற இளைஞனே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வீட்டில் உள்ளவர்கள் ஆலயத்திற்கு சென்ற பின்னர் இவர் தூக்கில் தொங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுன்னாகம் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
குளவி கொட்டுக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில்
பொகவந்தலாவ லெட்சுமி தோட்டம் மத்திய பிரிவு தோட்டத்தில் தவறணையில் தொழில் புரிந்து கொண்டிருந்த 03பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக வைத்தியசாலையில் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் இன்று காலை 09 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதில் ஒரு ஆண் தொழிலாளி சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதோடு மேலும் இரண்டு ஆண்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்றைய தினத்தோடு தொடர்ந்தும் ஐந்தாவது நாளாகவும் பொகவந்தலாவ பிரதேசத்தில் தொழிலாளாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJSUKUgoy.html
67வது சுதந்திர தின நிகழ்வுகள் மஹிந்தவின் சொந்த ஊரில்- மாளிகாவத்தையில் தீ விபத்து
[ புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2014, 07:19.42 AM GMT ]
இலங்கையின் 67வது சுதந்திர தின தேசிய நிகழ்வை ஜனாதிபதியின் ஊரான தங்காலையில் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் இந்த அறிவித்தலை இன்று விடுத்துள்ளது.
இதன்படி 67வது சுதந்திரதின தேசிய நிகழ்வுகள் தங்காலை வீரக்கெட்டிய மத்திய மகா வித்தியாலத்தில் நடைபெறவுள்ளன.
மாளிகாவத்தையில் தீ விபத்து
கொழும்பு மாளிகாவத்தையில் உள்ள தனியார் வர்த்தக நிலைய மின் கம்பத்திற்கு அருகில் இன்று காலை தீ  விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை  கட்டுப்படுத்த போராடி வருவதாகவும், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணமும், தீ விபத்தில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விபரங்களும் இன்னும் வெளியாக வில்லையென அங்கிருந்து கிடைக்கப்பெற்ற செய்திகள் தெரிவித்துள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyJSUKUgoz.html

வடமாகாண சபை பேரவையின் செயலாளராக சிவபாதம் நியமனம்
[ புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2014, 07:33.43 AM GMT ]
வடமாகாண சபை பேரவையின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவைகள் தரம் 1ஐச் சேர்ந்த அ.சிவபாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.
வடமாகாண சபையின் மாதாந்த கூட்டத்தொடர் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டிடத்தொகுதியில் இன்று இடம்பெற்று வருகின்றது.
இதன்போது, இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் கடமையாற்றி வந்த கே.கிருஸ்ணமூர்த்தி என்பவரின் ஒப்பந்தக் காலம் முடிவுற்றதையடுத்து, அப்பதவி வெற்றிடத்துக்கு அ.சிவபாதம் நியமிக்கப்பட்டுள்ளார் என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். 
இன்று சிவபாதம் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாகவும் சிவஞானம் தெரிவித்தார்.
இதேவேளை, வடமாகாண சபை உறுப்பினர், தங்கள் பிரேரணைகள், கருத்துக்கள் தொடர்பில் மின்னஞ்சல் அனுப்பும் போது, உறுப்பினரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி மூலம் மின்னஞ்சலை அனுப்புமாறு அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிவாஜிலிங்கத்தின் திருத்திய பிரேரணை, சிவாஜிலிங்கத்தின் மின்னஞ்சல் முகவரியில் இருந்து அனுப்பப்படாமல் வேறொரு நபரின் மின்னஞ்சலில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. இதனை ஏற்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
உறுப்பினர்கள் தங்களின் பெயர்களில் பதிவு செய்த மின்னஞ்சல் முகவரிகளின் ஊடாகவே பிரேரணைகள், கருத்துக்களை தெரிவிக்க முடியும்.
மின்னஞ்சல் முகவரிகளை மாற்றம் செய்தால் அது தொடர்பில் சபைக்கு அறிவிக்க வேண்டும் எனவும் சிவஞானம் மேலும் கேட்டுக்கொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSUKUgo0.html
ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கு: சுப்பிரமணியன் சுவாமிக்கு நீதிமன்றம் அழைப்பாணை
[ புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2014, 07:56.24 AM GMT ]
இந்திய இலங்கை மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு தமிழ்நாடு நீதிமன்றம் இன்று புதன்கிழமை அழைப்பாணை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஒக்டோபர் 10ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு சுப்பிரமணியன் சுவாமிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
மீனவர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல், கடிதம் மட்டும் எழுதுவதாக தமிழக முதலமைச்சரை விமர்சித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு சுப்பிரமணியன் சுவாமி பேட்டி அளித்திருந்தார்.
அதில் தமிழக மீனவர்களின் படகுகள் ஜெயலலிதாவுடன் இருக்கும் சசிகலா நடராஜன் மற்றும் திமுக தலைவர் ரி.ஆர். பாலு ஆகியோருக்குச் சொந்தமானதென சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJSUKUgo2.html

Geen opmerkingen:

Een reactie posten