[ செவ்வாய்க்கிழமை, 02 செப்ரெம்பர் 2014, 02:47.27 PM GMT ]
இந்தநிலையில் குறித்த தாக்குதல்களுடன் எதிர்கட்சி; அலுவலங்கள் மீதான தாக்குதல்கள் 55ஆக உயர்ந்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பகமான கபே தெரிவித்துள்ளது.
கபேயின் அறிக்கை ஒன்றின்படி, ஊவா மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே வி பியின் அலுவலகங்களே தாக்குதல்களுக்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஊவா மாகாண முதலமைச்சர் வேட்பாளர் ஹரின் பெர்னாண்டோவின் பதுளை நெலுங்கம என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த அலுவலகம் தாக்கப்பட்டது.
இந்தநிலையில் ஊவா மாகாண சபை தொடர்பிலான வன்முறைகள் 164 எண்ணிக்கையை அடைந்துள்ளன.
இதில் மொனராகலையில் மாத்திரம் 120 வன்முறைகள் இடம்பெற்றுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyJTWKUkq3.html
த.தே.கூட்டமைப்பை பலவீனப்படுத்தவே சங்கரி செயற்படுகிறார்: யோகேஸ்வரன் எம்.பி குற்றச்சாட்டு
[ செவ்வாய்க்கிழமை, 02 செப்ரெம்பர் 2014, 01:53.50 PM GMT ]
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கல்குடாத் தொகுதிக் கிளை புனரமைப்பு கூட்டம் வாழைச்சேனை லயன்ஸ் கழக மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை மாலை நடைபெற்றபோது இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் சரித்திரத்திலே நீண்டகால வரலாற்றை கொண்ட தமிழ் மக்களின் கட்சியாக இலங்கை தமிழரசுக் கட்சி இருந்திருக்கின்றது. 1949ம் ஆண்டு தந்தை செல்வா அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கட்சி 1972ம் ஆண்டு தமிழ் மக்களின் ஒற்றுமையை கட்டியெழுப்பும் வகையில் தமிழர் கூட்டணியில் இணைக்கப்பட்டதன் நிமிர்த்தம் இலங்கை தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி பின்னர் 2004ம் ஆண்டு தொடக்கம் இன்று வரை தமிழரசுக் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை கட்சியாக மாறியுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி செய்த பாரிய அகிம்சை வழிப் போராட்டங்கள் தான் முதலாவதாக இந்த நாட்டிலே நாங்கள் நீதிமன்றத்திலோ அல்லது அரச திணைக்களத்திலோ தமிழ் மொழியை ஒரு அரச கரும மொழியாக இணைத்துக் கொண்டு சேவையாற்ற வழிவகுத்தது.
அது இலங்கைத் தமிழரசுக் கட்சி கொண்டு வந்த ஒரு பெரும் சாதனையாகும். மொழிக்காக அவர்கள் சத்தியாக்கிரக போராட்டங்கள் உட்பட்ட அகிம்சை போராட்டங்களை நடாத்தினார்கள்.
அந்தப் போராட்டங்களினால் தான் இலங்கை அரசாங்கம் ஆட்டம் கண்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக் காலத்தில் பண்டாரநாயக்க அவர்கள் தந்தை செல்வாவை அழைத்து அவரோடு பேச்சுவார்த்தை நடாத்தி 1957ம் ஆண்டு பண்டா செல்வா ஒப்பந்தத்தை உருவாக்கிக் கொண்டார்கள்.
ஆனால் சிங்கள மக்களின் எதிர்ப்பும், ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகள் காரணமாக அந்தத் திட்டம் நிராகரிக்கப்பட்ட போதும் 1965ம் ஆண்டு டட்லி சேனநாயக்கவோடு, டட்லி-செல்வா ஒப்பந்தத்தை செய்து தமிழ் மக்களுக்காக காணிகளின் பிரச்சனை உட்பட சில விடயங்களில் உடன்பாட்டுக்கு வந்தன.
இதன் நிமிர்த்தம் 1965ம் ஆண்டு இலங்கை தமிழரசுக் கட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்த கட்சியாக மாறியது. மூன்று வருடம் இலங்கை அரசாங்கத்திலே இலங்கைத் தமிழரசுக் கட்சி அங்கம் வகித்திருக்கின்றது. ஆனால் அங்கு நடந்தவையெல்லாம் இவர்களை இணைத்து விட்டு ஏமாற்றிய செயற்பாடுதான்.
சிங்கள பேரினவாத அரசுகள் காலம் காலமாக ஏற்படுத்திக் கொண்ட அனைத்து விடயங்களும் பின்னர் ஏமாற்றத்திற்கு தள்ளப்பட்ட விடயங்கள் தான் இதனால் இலங்கை தமிழரசுக் கட்சி இவ் அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றியது.
ஆனால் அதன் பிற்பாடு சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்கள் கூட 1970ம் ஆண்டு இலங்கையில் புதிய குடியரசு யாப்பை கொண்டு வருவதற்கு ஐக்கிய முன்னனி அரசாங்கம் மூலம் அரசியல் நிர்ணய சபையை உருவாக்கியவேளை இதில் இலங்கை தமிழரசுக் கட்சியும் அந்தக் குழுவிலே உள்வாங்கப்பட்டது.
அவர்களும் தமது முன்மொழிவுகளை அரசியலமைப்புக்கு வழங்கியிருந்தார்கள். ஆனால் பெரும்பான்மையை காட்டி அந்த அரசியலமைப்பிலே இலங்கை தமிழரசுக் கட்சி முன்மொழிவுகள் அப்போதைய சிங்கள பேரினவாத அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டதால் தான் இலங்கை தமிழரசுக் கட்சி தனியாக இல்லாமல் சகல தமிழ் கட்சிகளையும் இணைத்து தான் தமிழர் கூட்டணியை உருவாக்கி 1972ம் ஆண்டு செயற்படுத்தி வந்தார்கள். இதன் தலைவராக தந்தை செல்வா விளங்கினார்.
1976ம் ஆண்டு வரை தமிழர் கூட்டணியாக இருந்து பின் வட்டுக்கோட்டை மாநாட்டின் பின் தமிழர் விடுதலைக் கூட்டணியாக மாறியது. இதில் தந்தை செல்வா, சௌமியன் தொண்டமான், ஜீ.ஜீ.பொன்னம்பலம் போன்ற தலைவர்கள் கூட்டு தலைமையாக விளங்கியது.
1977ம் ஆண்டிலே இத்தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தலில் இறங்கினார்கள். ஏன் சொல்கின்றேன் என்றால், சிலர் கேட்கின்றார்கள். இலங்கை தமிழரசுக் கட்சி தன்னால் முடியாமல் போன காரணத்தினால் தால் தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கிக் கொண்டது. அப்போதே ஒதுக்கப்பட்டு விட்டது என்று. எங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கின்ற ஆனந்த சங்கரி போன்றவர்கள் ஊடகங்களுக்கு குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இவர் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சிக்குள் இருந்து கொண்டே அந்தக் கட்சியை பலவீனப்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தார். அவருக்கு மாத்திரம் விசேட பாதுகாப்பு, விசேட சலுகைகளை அரசாங்கம் கொடுப்பதால் தான் அரசாங்கத்தின் கையாளாக இருந்து கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைப்பதற்கு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
இதனால் இவர் அடிக்கடி ஜனாதிபதிக்கு நீண்ட கடிதம் எழுதிக் கொண்டிருக்கின்றார் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTWKUkq2.html
Geen opmerkingen:
Een reactie posten