கடந்த 2000ம் ஆண்டு சுவிஸ் நாட்டில் பாசல் என்னும் நகரில் வசித்து வந்தவேளை, தனது நண்பியை ஒரு இலங்கையர் கொலைசெய்துள்ளார். அப்போது அப்பெண்னுக்கு வயது 23 ஆகும். பின்னர் இவர் நியூசிலாந்து சென்று அங்கே குடியேறிவிட்டார். கடந்த 14 ஆண்டுகளாக அவர் நியூசிலாந்தில் வாழ்ந்து வந்த நிலையில், அவருக்கு அன் நாட்டில் பிரஜா உரிமை வழங்கப்பட்டும் உள்ளது. அதற்கான உத்தியோகபூர்வ கடிதம், அவருக்கும் 2014ம் ஆண்டே அனுப்பட்டும் உள்ளது. இன் நபரை தற்செயலாக அடையாளம் கண்ட , தமிழர் ஒருவர் நியூசிலாந்து பொலிசாருக்கு கொடுத்த தகவலை அடுத்தே பொலிசார் குறித்த நபரை கைதுசெய்துள்ளார்கள் என்று ஆரம்ப கட்டமாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து நியூசிலாந்து பொலிசார் குறித்த நபரைக் கைதுசெய்து, பின்னர் சுவிஸ் பொலிசாரை தொடர்புகொண்டுள்ளார்கள். அவர்கள் சந்தேக நபர் தொடர்பான புகைப்படங்களை நியூசிலாந்து பொலிசாருக்கு அனுப்பிவைத்துள்ளார்கள். அனுப்பிய புகைப்படம் ஒத்துப்போவதால், நியூசிலாந்து பொலிசார் அவரை தொடர்ந்தும் தடுப்பு காவலில் இட்டுள்ளார்கள். நேற்றைய தினம் அவரை நீதிமன்றில் பொலிசார் நிறுத்தி மேலதிக தடுப்பு காவலுக்கு உத்தரவைப் பெற்றுள்ளார்கள். ஆனால் சந்தேக நபர் இதுவரை பிணைக்கு மனு எதனையும் நீதிமன்றில் சமர்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதேவேளை நீயூசிலாந்து நாட்டிற்கும் சுவிஸ் நாட்டிற்கும் இடையே கைதிகளை பரிமாறும் ஒப்பந்தம் இல்லை என்று கூறப்படுகிறது. இன் நாடுகள் கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக எந்த ஒரு ஒப்பந்தத்தையும் கைச்சாத்திடவில்லை. இதனால் இக் கைதியை எவ்வாறு சுவிசுக்கு நாடு கடத்துவது என்ற சிக்கல் எழுந்துள்ளது. கொலைசெய்யப்பட்ட பெண்ணின் உறவினர்கள், நியூசிலாந்து நாட்டில் வழக்கை நடத்தினால் அன் நாட்டில் அவருக்கு தண்டனை கிடைக்கும்.
Geen opmerkingen:
Een reactie posten