தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 13 september 2014

ஜனாதிபதி உம்மா கொடுத்து வாக்குகளை பெறுகிறார்!- ஹரின் பெர்ணான்டோ!!

தேர்தலில் போட்டியிட மஹிந்த ராஜபக்சவுக்கு பச்சை விளக்கு சமிக்ஞை
[ சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2014, 09:33.22 AM GMT ]
மூன்றாவது தடவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு பச்சை விளக்கு சமிக்ஞை கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் 18வது அரசியல் அமைப்பு திருத்தச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதில் சட்ட சிக்கல்கள் உள்ளதாக தெரிவித்து அவர் மூன்றாம் முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என்று சட்டவாதிகள் பலரும் வாதிடுகின்றனர்.
இந்த நிலையில் ஜனாதிபதி சட்டத்துறையில் அதியுயர் நிலையில் உள்ள ஒருவரை சந்தித்து தாம் மூன்றாம் முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து வினவியுள்ளார்.
இது கடந்த 10ஆம் திகதியன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது குறித்து அதியுயர் நிலை சட்டவாதி உரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து மூன்றாம் முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும் என்று மஹிந்த ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து எதிர்வரும் ஜனவரி முதல் வாரத்தில் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஆயத்தங்களை மஹிந்த ராஜபக்ச மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை மஹிந்த ராஜபக்ச மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிராக வழக்கை தாக்கல் செய்ய தயாராகி வருவதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJSXKUfuy.html
ரணிலை வீட்டுக்கு அனுப்ப சஜித் திட்டம்!: வீரவன்ஸ- ரணில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் சஜித் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் - ஐ.தே.க
[ சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2014, 10:01.19 AM GMT ]
ரணில் விக்ரமசிங்க செல்ல வேண்டிய இடத்துக்கு தான் அழைத்துச் செல்ல அர்ப்பணிப்புடன் செயற்பட போவதாக சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தமைக்கு அமைச்சர் விமல் வீரவன்ஸ பதிலளித்துள்ளார்.
ரணில் செல்ல வேண்டிய இடம் வீடு தான் என அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட வேண்டும் என பசறையில் நடைபெற்ற கட்சியின் மாநாட்டில் ரணில் விக்ரமசிங்க யோசனை முன்வைத்திருந்தார்.
இது குறித்து ஊவா மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரங்களில் கருத்து வெளியிடும் போதே வீரவன்ஸ இதனை தெரிவித்துள்ளார்.
யானை பின்நோக்கி செல்வதால், அண்மையில் பசறைக்கு வந்தனர். பசறைக்கு வந்து ரணில், சஜித்தை ஏமாற்றினார்.
கட்சியின் பிரதித் தலைவராக மாநாட்டில் அறிவிப்பதாக ரணில், சஜித்திடம் கூறியிருந்தார். இதனை கேட்ட சஜித் உற்சாகத்துடன் பசறைக்கும் வந்தார்.
சஜித் வந்த பின்னர், ரணில் அவரது கையை பிடித்து தூக்கினார். கையை பிடித்து தூக்கிய பின்னர் உரையாற்றிய ரணில், பிரதித் தலைவர் பதவி சஜித் பிரேமதாசவுக்கு கிடைக்க வேண்டும் என தான் செயற்குழுவின் யோசனை முன்வைக்க போவதாக குறிப்பிட்டார். அதனை தன்னால் தனியாக செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
ரணில் யோசனை முன்வைப்பார். செயற்குழு முடியாது என்று கூறும். பிரதித் தலைவர் பதவிக்கு நான் உங்களை பிரேரித்தேன். இவர்கள் முடியாது என்று சொல்லிட்டனரே என்று ரணில், சஜித்திடம் கூறுவார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் பேசிய சஜித் பிரேமதாச, ரணில் செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்துச் செல்ல தான் அர்ப்பணிப்புடன் செயற்பட போவதாக தெரிவித்தார்.
சஜித்திற்கு அமைய ரணில் செல்ல வேண்டிய இடம் வீடு. ரணிலை ஜனாதிபதி பதவியில் அமர்த்த தான் அர்ப்பணிப்புடன் செயற்பட போவதாக சஜித் கூறவில்லை. இதனால், சஜித் எண்ணுவது போல் ரணில் செல்ல வேண்டிய இடம் வேறு எதுமில்லை வீடு.
இவர்கள் இருவரும் கத்தியை இடுப்பில் சொருகி கொண்டே கைக்குலுக்கி கொள்கின்றனர் என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது.
ரணில் இடது கையிலும் சஜித் வலது கையிலும் கத்திகளை வைத்து கொண்டு கைகளை உயர்த்தினர். இந்த கத்திகள் எந்த சந்தர்ப்பத்தில் வெளியில் வரும் என்பதை கூறமுடியாது எனவும் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.
ரணில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் சஜித் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் - ஐ.தே.கட்சி நடவடிக்கை
எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய மாநாட்டில், அந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அறிவிக்கப்பட்ட பின்னர், புதிய இளைய அணியுடன் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்க அந்த கட்சி தீர்மானித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்பு நாடு முழுவதும் சென்று அவரது வெற்றிக்காக பாடுபட போவதாக சஜித் பிரேமதாச கட்சிக்கு அறிவித்துள்ளார்.
தேசிய தேர்தல் ஒன்றுக்காக ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பிக்கும் தேர்தல் பிரச்சாரத்தை முதலாவது பிரச்சாரக் கூட்டம் அம்பாந்தோட்டையில் ஆரம்பிக்கப்பட உள்ளதுடன் அந்த பிரச்சாரங்களை சஜித் பிரேமதாச நாடு முழுவதும் முன்னெடுக்க உள்ளார்.
ஊவா மாகாண சபைத் தேர்தல் முடிந்த பின்னர், சஜித் பிரேமதாசவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவி வழங்கப்பட உள்ளது.
இதனை தவிர ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக மத தலைவர்களை ஒன்றிணைக்கும் பணிகள் தனியாக மேற்கொள்ளப்பட உள்ளன.
அத்துடன் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மேற்பார்வையில், 30 ஆயிரம் உறுப்பினர்களை கொண்ட வாக்குச்சாவடிகளை பாதுகாக்கும் படையணியும் ஆரம்பிக்கப்பட உள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJSXKUfu0.html
சந்தேகத்திற்கு இடமான வாக்குச்சாவடிகளின் பாதுகாப்பு அதிகரிக்கப்படும்: பொலிஸ் (செய்தித் துளிகள்)
[ சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2014, 10:33.42 AM GMT ]
ஊவா மாகாண சபைத் தேர்தலில் வன்முறைகள் மற்றும் தேர்தல் முறைகேடுகள் இடம்பெறக் கூடும் என சந்தேகிக்கப்படும், வாக்கெடுப்பு நிலையங்களின் பாதுகாப்பை அதிகரிக்க பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தேர்தல் பாதுகாப்பு பணியில் பொலிஸ் அதிரடிப்படையினர் உட்பட 8 ஆயிரத்து 200 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காமினி நவரட்ன தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடைபெறும் தினத்தில் வீதி சோதனை சாவடிகளை அமைத்து சந்தேகத்திற்குரிய நபர்கள் மற்றும் வாகனங்களை சோதனையிட நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன் வன்முறைகள் ஏற்படக் கூடும் என சந்தேகிக்கப்படும் இடங்களில் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான இணைப்பு பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க உட்பட 40 பொலிஸ் உயர் அதிகாரிகள் ஊவா மாகாணத்திற்கு சென்றுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொனராகலையில் வன்முறைகள் இல்லை - வெறும் வதந்திகளேயாகும்: முன்னாள் முதலமைச்சர்
ஊவா மாகாணசபை தேர்தல் பிரசாரங்களின் போது மொனராகலையில் வன்முறைகள் அதிகரித்து வருவதாக தொடர்ந்தும் தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
எனினும் மொனராகலையில் வன்முறைகள் என்பது வெறும் வதந்திகள் என்று மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட சிலர் தமக்கு வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளவும் அரசாங்கத்துக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தவும் என்று இவ்வாறான வதந்திகள் பரப்பப்படுவதாக சசீந்திர குறிப்பிட்டுள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு செவ்வியளித்துள்ள அவர், சிறு சம்பவங்கள் இடம்பெறுகின்றபோதும் அவை பாரிய வன்முறைகளாக உருக்காட்டப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்
அண்மையில் ஜேவிபியினால், இவ்வாறான பெரிதுப்படுத்தல் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டன
இந்தநிலையில் தேர்தல்கள் ஆணையாளரும் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டியேற்பட்டதாக சசீந்திர சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை ஐக்கிய தேசியக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் ஹரின் பெர்ணான்டோ தமக்கு போட்டியானவர் இல்லை என்று குறிப்பிட்ட சசீந்திர, ஹரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மாத்திரம் அல்ல. ஊவா மாகாண முதமைச்சர் பதவியையும் இழப்பார் என்று குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலையில் யானை தாக்கி ஒருவர் பலி
திருகோணமலை சேருநுவர பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பிரதேசத்தில் உள்ள வயல் காணியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போது அவரை யானை தாக்கியுள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த அவர் சேநுவர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளார்.
கிளிவெட்டி லிங்கபுரம் பிரதேசத்தை சேர்ந்த 51 வயதான நபரே இவ்வாறு உயி்ரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹொரணை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் பலி
ஹொரணை இலிப பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் நடந்துள்ளது.
கொல்லப்பட்ட நபர் முச்சக்கர வண்டியில் சென்றுக் கொண்டிருந்த போது இரண்டு இனந்தெரியாத நபர்கள் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
35 வயதான நபரே இந்த துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
எந்த காரணத்திற்காக யார் இந்த கொலை செய்தனர் என்பது குறித்த தகவல்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.
http://www.tamilwin.com/show-RUmsyJSXKUfu2.html
ஜனாதிபதி உம்மா கொடுத்து வாக்குகளை பெறுகிறார்!- ஹரின் பெர்ணான்டோ
[ சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2014, 11:08.18 AM GMT ]
உம்மா கொடுக்கும் தலைவர்கள் நாட்டிற்கு தேவையில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் ஊவா மாகாண முதலமைச்சர் வேட்பாளர் ஹரின் பெர்ணான்டோ கூறியுள்ளார்.
பதுளையில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி உம்மா கொடுத்து வாக்குகளை பெறுகிறார். நாட்டுக்கு தேவை உம்மா கொடுக்கும் தலைவர்கள் அல்ல.
எம்மிடமும் தலைவர் இருக்கிறார். அவர் உம்மா கொடுக்காது மக்களின் வயிற்று பசியை போக்குவார்.
ஊவா மாகாண முதலமைச்சர் பதவி கிடைக்காது போனாலும் பரவாயில்லை. கட்சிக்காக அர்ப்பணிப்புகளை செய்வது அதனை விட முக்கியமானது.
முதலமைச்சர் பதவி கிடைக்காது போனாலும் ஐக்கிய தேசியக் கட்சிக்காக செய்த அர்ப்பணிப்பு, சேவை, கட்சியின் ஐக்கியம் என்பன அதனை விட முக்கியமானது.
சின்ன ராஜபக்சவை தோற்கடித்து காட்டுமாறு எனக்கு சவால் விடுக்கப்பட்டால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தேர்தலிலுக்கு வந்து சவாலை ஏற்றுக்கொண்டுள்ளேன்.
வெளியில் இருந்து வந்து இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிக்க முடியாது. ராஜபக்ஷ அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதே எமது நோக்கம்.
ரணிலையும் சஜித்தையும் முடிந்தால் ஒரே மேடைக்கு அழைத்து வருமாறு எனக்கு பலர் சவால் விட்டனர். அந்த சவாலை ஏற்று அதனை பசறையில் செய்து காண்பித்தேன் எனவும் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSXKUfu4.html

Geen opmerkingen:

Een reactie posten