இலங்கையின் ஜனாதிபதியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பது குறித்து பல்வேறு ஊகங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே நியூயோர்க்கில் இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்வின்போது அதற்கு புறம்பாக மோடியும் ராஜபக்சவும் சந்திப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்பின்னர் பொதுச்சபைக் கூட்டத்துக்கு இணையாக பொதுநலநவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டம் நியூயோர்க்கில் செப்டம்பர் 25 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் இடம்பெறும் போது அங்கு மோடியும் ராஜபக்சவும் சந்திக்கலாம் என்று எதிர்வு கூறப்பட்டிருந்தது.
எனினும் அதிலும் தற்போது குழப்பநிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச செப்டம்பர் 25ஆம் திகதியன்று பொதுச்சபை அமர்வில் உரையாற்றவுள்ளார்.
அதே நாளன்றே பொதுநலவாய நாடுகளின் தலைவர்களது கூட்டம் நடைபெற்று 2015ஆம் ஆண்டுக்கான பணிகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளன.
எனினும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 26ஆம் திகதியன்றே நியூயோர்க் செல்கிறார். அவர் 27ஆம் திகதியன்று பொதுச்சபை அமர்வில் உரையாற்றவுள்ளார்.
இதனையடுத்து 29ஆம் மற்றும் 30ஆம் திகதிகளில் அமரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை மோடி சந்திக்கவுள்ளார்.
எனவே அவர் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
இதேவேளை பொதுநலவாய மாநாட்டில் நாட்டின் தலைவர் கலந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்ற வகையில் அதில் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜ் பங்கேற்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் இலங்கை ஜனாதிபதி எப்போது வரைக்கும் நியூயோர்க்கில் தங்கியிருப்பார் என்ற விடயம் இன்னும் வெளியாகவில்லை. எனவே அதுவரை மோடி ராஜபக்ச சந்திப்பு ஊகமாகவே இருக்கும் என்று இந்திய செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJSXKUfu1.html
Geen opmerkingen:
Een reactie posten