தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 9 september 2014

தமிழரசு கட்சி மாநாடு முடிந்தபின் கிளிநொச்சி உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ்!



மஸ்கெலியாவில் கல்வி பணிப்பாளர் காரியாலயத்திற்கு எதிராக மகஜர்
[ செவ்வாய்க்கிழமை, 09 செப்ரெம்பர் 2014, 07:47.26 AM GMT ]
மஸ்கெலியா சென். ஜோசப் தமிழ் வித்தியாலயத்தில் சிறுவர் வகுப்பிற்கு அருகில் 1.5 மில்லியன் ரூபா செலவில் புதிய கல்வி பணிப்பாளர் காரியாலயத்தை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாடசாலையின் பழைய மாணவர்கள் இன்று பாடசாலை அதிபரிடம் ஒரு மகஜரை கையளித்துள்ளனர்.
2000ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் இந்த பாடசாலைக்கு கட்டடம் கட்டுவதற்கு வசதிகள் இல்லாமல் இருக்கும் போது பாடசாலைக்குள் உள்ளே இவ்வாறான பணிப்பாளர் காரியாலயத்தின் கட்டடத்தை அமைக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டே மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
மஸ்கெலியா பகுதியில் அரசாங்கத்திற்கு சொந்தமான 8 ஏக்கர் காணி இருக்கும் போது இந்த கட்டடத்தை அவ்விடத்தில் அமைக்காமல் குறித்த பாடசாலை அருகில் கட்டுவதற்கு இடமளிக்கப்போவதில்லையென பழைய மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதை மீறி கட்டடத்தை கட்டுவதாக இருந்தால் இந்த பாடசாலையின் பழைய மாணவர்கள் ஒன்றினைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக அவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
பாடசாலை அதிபருக்கு கொடுத்த மகஜரை நுவரெலியா மாவட்டத்தின் அரசியல்வாதிகளுக்கும் கல்வி அமைச்சருக்கும் மத்திய மகாண சபை முதலமைச்சருக்கும் அனுப்பும் படி பழைய மாணவர்கள் கேட்டுக்கொள்கின்றார்கள்.
அட்டன் கல்வி வலயத்திற்கு சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகள் 150 இருப்பதனால் நிர்வாகத்திற்கு பல சிரமங்கள் ஏற்படுவதனால் மஸ்கெலியா, பொகவந்தலாவ, அப்கட், நல்லதண்ணி பகுதியில் உள்ள சிங்கள, தமிழ் பாடசாலைகளுக்கு மஸ்கெலியா பகுதியில் புதிய கல்வி பணிப்பாளர் காரியாலயத்தை அமைத்து, அதில் கல்வி நிர்வாகத்தை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானம் எடுத்துள்ளதுள்ளமை குறிப்பிடதக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJTdKUht4.html

பவள விழா காணும் கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி
[ செவ்வாய்க்கிழமை, 09 செப்ரெம்பர் 2014, 07:54.41 AM GMT ]
கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி சமூகத்தின் அர்ப்பணிப்பும் விடாமுயற்சியுமே பவளவிழா வெற்றிக்கு காரணமென வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் புகழாரம் சூட்டியுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் மருதநில அழகின் இடையில் கல்வி செல்வமாய் 1939ம் ஆண்டு அமரர் கணபதிப்பிள்ளை பொன்னையா அவர்களால் உயரிய எண்ணத்துடன் ஆரம்பிக்கப்பட்டு,
பல்வேறு சவால்கள் இன்னல்கள் இழப்புக்கள் சாதனைகள் உயரிய ஈகங்களை தன்னுள்ளே கொண்டு கிளிநொச்சி மாவட்டத்திற்கு புகழ்சேர்க்கும் பள்ளிகளில் ஒன்றாக திகழும் கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி தன்னுடைய பவள விழாவை நேற்று வெகுசிறப்பாக பெருமையுடன் கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றது.
அதிபர் ரி.வரதன் தலைமையில் நிர்வகிக்கப்படும் இந்தக் கல்லூரியின் பவளவிழா, கல்லூரியின் பழைய மாணவனும் பொறியியலாளருமான ந.கிருஸ்ணரூபன் தலைமையில் புளியம்பொக்கணை நாகதம்பிரான் பிரதமகுரு மற்றும் அருட்தந்தை யாவீஸ் அடிகளார் ஆகியோரின் நல்லாசியுடன் நடைபெற்றது.
இதில் முதன்மை விருந்தினராக வடமாகாண முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ள, மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, பா.உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாணசபை உறுப்பினர் அரியரத்தினம், சாவகச்சேரி பிரதேசபை தவிசாளரும் பள்ளியின் முன்னாள் அதிபருமான துரைராஜா, பழைய மாணவனும் நீதிபதியுமான கஜநிதிபாலன், கனடாவில் வசிக்கும் பழைய மாணவர் நாகலிங்கம் கணபதிப்பிள்ளை உட்பட,
கல்லூரியின் முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், அயல்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கல்லூரியின் பாடசாலை அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், கல்லூரியில் கற்று பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்கள், சாதனை மாணவர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
முரசுமோட்டை முருகானந்தா கல்லூரி பவளவிழா காணும் இவ்வேளையில், இக்கல்லூரியின் தற்போதைய வளர்ச்சியிலும் பௌதீக நிமிர்விலும் கனடா வாழ் கண்டாவளை முரசுமோட்டை மக்கள் ஒன்றியத்தின் பங்கு மிகமுக்கியமானது.
இந்த ஒன்றியம் கல்லூரியின் திறந்த வெளி அரங்கு அமைவதற்கும் தற்போது பவளவிழா ஞாபகார்த்தமாக விளையாட்டு உபகரணங்களுக்கான களஞ்சிய அறையும் விளையாட்டு அறை அமைவதற்கும் பெருமளவு நிதியுதவியை நல்கி காரணமாக இருக்கின்றார்கள்.
அவர்களுக்கு பவளவிழா நன்றியையும் புகழாரத்தையும் சூட்டியிருக்கின்றது.
இதே வேளை பவள விழா ஞாபகார்த்தமாக பவளவிழா மலர் ஒன்றை கல்லூரி நேற்று வெளியிட்டு வைத்தது.
இதில் பள்ளியின் வரலாறு உட்பட கடந்த கால தடங்கள் பா.உறுப்பினர்கள் மற்றும் கல்வி அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள் மாவட்ட தலைமை நிர்வாக பீடங்களின் தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பிரமுகர்களின் செய்திகள் வாழ்துக்கள்
மற்றும் பள்ளிச் சமூகத்தின் படைப்புக்கள், சாதனை மாணவர்களின் விபரங்கள், கல்லூரியின் கடந்த கால அதிபர்களின் குறிப்புக்கள், புலம்பெயர் சமூகத்தின் பங்களிப்புக்கள் வாழ்த்துச் செய்திகள் உட்பட பல்வேறு துறைசார் விடயங்கள் உள்ளடக்கப்பட்டு திருமதி ஜோதீஸ்வரனை இதழாசிரியராக கொண்டு வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
இந்த பவள விழாவில் முன்னாள் அதிபர்களான கா.சந்திரபாலன், சி.துரைராசா, ம.பத்மநாதன், வீ.இராசகுலசிங்கம், கஸ்பர் மதுரநாயகம், எம்.சி.எல்.மனுவேல், திருமதி.மீனலோஜினி, இதயசிவதாஸ் ஆகியோர் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் கல்லூரியில் கற்று பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களும் மதிப்பளிக்கப்பட்டனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTdKUht5.html
தாய்லாந்திலிருந்து அந்தூரியம் பூக்கன்றுகளுடன் வந்தவர் கைது
[ செவ்வாய்க்கிழமை, 09 செப்ரெம்பர் 2014, 08:20.46 AM GMT ]
தாய்லாந்தில் இருந்து அந்தூரியம் பூக்கன்றுகளை இலங்கைக்கு கொண்டுவந்த நபர் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு கைது செய்யப்பட்ட குறித்த நபர், மினுவாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
31,600 ரூபா பெறுமதியான 158 அந்தூரியம் பூக்கன்றுகளை சந்தேக நபர் கொண்டு வந்ததாக சுங்கப் பிரிவு ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.
இரண்டு பயணப் பொதிகளில் இந்த அந்தூரியம் பூக்கன்றுகள் கொண்டுவரப்பட்டதாக தெரிவித்த அவர், இலங்கையின் சட்டத்திற்கு அமைய வெளிநாடுகளில் இருந்து அந்தூரியம் கொண்டுவர முடியாது என குறிப்பிட்டார்.
மேலும் குறித்த சந்தேகநபர் 10,000 ரூபா அபராதத்தில் விடுவிக்கப்பட்டதாகவும், மீட்கப்பட்ட அந்தூரியம் பூக்கன்றுகள் தாவரவியல் திணைக்களப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTdKUht6.html
தமிழரசு கட்சி மாநாடு முடிந்தபின் கிளிநொச்சி உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ்
[ செவ்வாய்க்கிழமை, 09 செப்ரெம்பர் 2014, 09:32.54 AM GMT ]
கடந்த 5ம் 6ம் 7ம் நாட்களில் இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு  அனைவரினதும் எதிர்பார்ப்பில் வவுனியாவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆயினும் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த பலருக்கு இன்றுதான் தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த மாவை.சேனாதிராசாவின் கையொப்பத்துடன் அழைப்பிதழ்கள் வந்து சேர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியில் கட்சி ஆரம்பிக்கப்பட்ட போது இணைந்துகொண்ட மூத்த உறுப்பினர்கள் தமக்கு தாமதமாக அழைப்பிதழ்கள் அனுப்பபட்டதையிட்டு அவமானம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTdKUht7.html

Geen opmerkingen:

Een reactie posten