தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 15 september 2014

அரசாங்கத்துக்கும் பொதுபலசேனாவுக்கும் தொடர்பு எதுவும் இல்லை!- கிழக்கு இராணுவ தளபதி!

நாளை வரும் சீன ஜனாதிபதிக்கு செங்கம்பள வரவேற்பு! விமான நிலையத்தில் மகிந்த வரவேற்பார்!
[ ஞாயிற்றுக்கிழமை, 14 செப்ரெம்பர் 2014, 11:57.16 PM GMT ]
சீன ஜனாதிபதி ஹிஜின் பிங் நாளை இலங்கைக்கு வருகை தருகிறார். இவருக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட இருப்பதோடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வரவேற்க இருப்பதாக ஜனாதிபதியின் சர்வதேச விவகார பணிப்பாளர் அநுராதா ஹேரத் தெரிவித்தார்.
28 வருடங்களின் பின்னர் சீன ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு வருகை தருகிறார்.
அவரின் விஜயத்துடன் இரு நாடுகளுக்குமிடையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட இருப்பதாக வெளிவிவகார அமைச்சு கூறியது.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 2ம், 3ம் கட்டங்கள் சீன மற்றும் இலங்கை ஜனாதிபதிகளினால் நாளை திறந்துவைக்கப்பட உள்ளன.
சீன ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தின் போது 500 ஏக்கர் துறைமுக நகரத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவும் இடம்பெறும். இந்த திட்டம் 1400 மில்லியன் அமெரிக்க டொலர் சீன கடனுதவியுடன் முன்னெடுக்கப்பட இருப்பதோடு அது தொடர்பான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட இருப்பதாக துறைமுக, நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்தது.
கடலை நிரப்பி காலிமுகத்திடலுக்கு அப்பால் இந்த துறைமுக நகரம் உருவாக்கப்பட இருப்பதோடு சைனா கொன்ஸ்ட்ரக்சன் கொமுயுனிகேசன் கம்பனி பிரதான முதலீடு மேற்கொள்கிறது.
சீன ஜனாதிபதி இங்கு தங்கியிருக்கும் இரு நாட்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பிரதமர் டி. எம். ஜயரத்ன, சபாநாயகர் சமல் ராஜபக்ச ஆகியோரை சந்திகிறார்.
இதேவேளை சீன ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தின் போது இரு நாடுகளுக்குமிடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட வாய்ப்பு இருப்பதாக பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகம கூறினார்.
சீன ஜனாதிபதி 23 மணித்தியாலங்களே இலங்கையில் தங்கியிருப்பார்
சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் 23 மணித்தியாலங்களே இலங்கையில் தங்கியிருப்பார்.
நாளை முற்பகல் 11.30 அளவில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள சீன ஜனாதிபதி, நாளை மறுதினம் 10.30 அளவில் இலங்கை விஜயத்தை முடித்து கொள்ள உள்ளார்.
கடந்த 14ம் திகதி மாலைதீவிற்கு விஜயம் செய்த சீன ஜனாதிபதி, நாளை வரையில் மாலைதீவில் தங்கியிருப்பார்.
மாலைதீவு சுற்றுலாத்துறையில் முதலீடு செய்வது குறித்து சீன ஜனாதிபதி கூடுதல் கவனம் செலுத்துவார் என தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyJSYKUeqy.html
அரசாங்கத்துக்கும் பொதுபலசேனாவுக்கும் தொடர்பு எதுவும் இல்லை!- கிழக்கு இராணுவ தளபதி
[ திங்கட்கிழமை, 15 செப்ரெம்பர் 2014, 01:16.10 AM GMT ]
அரசாங்கத்துக்கும் பொதுபலசேனாவுக்கும் இடையில் எவ்விதமான தொடர்பும் இல்லை. அரசின் மீது முஸ்லிம் மக்கள் எந்தவிதமான சந்தேகமோ, அச்சமோ கொள்ளத் தேவையில்லை என கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேரா தெரிவித்துள்ளார். ே
திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள வறிய குடும்பத்துக்கு, இராணுவத்தினரின் உதவியுடன் நிரந்தர வீடொன்றை கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
பொதுபல சேனாவுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக முஸ்லிம் மக்களிடம் ஒரு சந்தேகம் இருக்கின்றது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது தொடர்பில் உங்கள் கருத்து என்ன? என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளித்த கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேரா, இது தொடர்பிலான பல சந்தேகங்களுக்கு முஸ்லிம் மக்கள் தெளிவு பெறும் வகையில், அண்மையில் பாதுகாப்பு செயலாளர், ஊடகங்கள் மூலமாக, விரிவான விளக்கம் ஒன்றினை தெரியப்படுத்தி உள்ளார்.
எனவே, அரசாங்கம் மக்களின் பாதுகாப்பிலும் அபிவிருத்தி விடயங்களிலும் கரிசனையுடன் உள்ளது. பொய் பிரச்சாரங்களின் மூலம் முஸ்லிம் மக்கள் அரசாங்கம் மீது அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSZKUeq1.html

Geen opmerkingen:

Een reactie posten