தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 15 september 2014

நவனீதம்பிள்ளையைப் போன்றே அல் ஹுசைனையும் அரசாங்கம் விமர்சிக்கும்!- சுஜீவ சேனசிங்க!

வெள்ளைக்காரனைப் போன்றே அரசாங்கம் மக்கள் மீது அழுத்தங்களை சுமத்துகின்றது!– ஹேமகுமார நாணயக்கார
[ ஞாயிற்றுக்கிழமை, 14 செப்ரெம்பர் 2014, 01:31.21 AM GMT ]
வெள்ளைக்காரனைப் போன்றே அரசாங்கம் மக்கள் மீது அழுத்தங்களை பியோகித்து வருவதாக மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஊவா மாகாணசபைத் தேர்தல் மிகவும் அசாதாரண ஓர் சூழ்நிலையில் நடைபெறுகின்றது.
அரசாங்கத்தின் அனுசரணையுடன் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்படுகின்றது.
ஒட்டுமொத்த ஊவா மக்களையும் அரசாங்கம் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது.
காலனித்துவ வெள்ளைக்காரர்கள் ஊவா மக்கள் மீது பிரயோகித்த அழுத்தங்களைப் போன்றே அரசாங்கமும் அப்பாவி மக்கள் மீது அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றது.
மனித உரிமைகளை மீறியே அரசாங்கம் இவ்வாறு தேர்தலை நடத்த முயற்சிக்கின்றது.
மக்களின் வாக்குரிமையை கொள்ளையிடும் முயற்சிகளே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு அவர் தெரிவித்துள்ளார்
http://www.tamilwin.com/show-RUmsyJSYKUfw0.html
சிறைக் கைதிகள் தொடர்பிலான தகவல்கள் கணனிமயப்படுத்தப்பட உள்ளன
[ ஞாயிற்றுக்கிழமை, 14 செப்ரெம்பர் 2014, 01:36.31 AM GMT ]
இலங்கையில் உள்ள சிறைக்கைதிகள் தொடர்பிலான தகவல்கள் கணனிமயப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் பற்றிய பூரண விபரங்கள் திரட்டப்பட்டு அவற்றை பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கைதிகளின் கைவிரல் அடையாளங்கள், புகைப்படங்கள், குற்றத்தின் தன்மை, தண்டனை போன்ற விபரங்கள் திரட்டப்படட உள்ளது.
அடுத்த ஆண்டு முதல் இந்த தகவல்களை திரட்டி பேணும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு சிறைச்சாலையிலிருந்து ஏனைய சிறைச்சாலைகளுடன் தொடர்புகளைப் பேணக்கூடிய வகையில் இந்த வலையமைப்பு உருவாக்கப்பட உள்ளது.
29 சிறைச்சாலைகள் இவ்வாறு ஒரே வலையமைப்பின் கீழ் கொண்டு வரப்பட உள்ளன.
இதன் மூலம் சுமார் 22000 கைதிகள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyJSYKUfw1.html

நவனீதம்பிள்ளையைப் போன்றே அல் ஹுசைனையும் அரசாங்கம் விமர்சிக்கும்!- சுஜீவ சேனசிங்க
[ ஞாயிற்றுக்கிழமை, 14 செப்ரெம்பர் 2014, 01:23.41 AM GMT ]
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவனீதம்பிள்ளையைப் போன்றே புதிய ஆணையாளர் அல் ஹுசைனையும் அரசாங்கம் விமர்சிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த யார் வந்தாலும் சென்றாலும் எவ்வித பயனும் இல்லை.
அரசாங்கத்தின் கொள்கைகள் என்ன என்பதே அரசாங்கத்திற்கு முக்கியமானதாக காணப்படுகின்றது.
அரசாங்கத்தின் வங்குரோத்து நிலைமையே இதற்கான காரணமாகும்.
நவனீதம்பிள்ளையை திட்டித் தீர்த்தவர்கள், இளவரசர் அல் ஹுசைனையும் திட்டுவார்கள்.
எம்மவருக்கு எல்லோரையும் திட்டுவதனைத் தவிர வேறு எதுவும் தெரியாது அல்லவா என சுஜீவ சேனாசிங்க குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு அவர் இந்தக் கருத்தினை வெளியிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSYKUfwz.html

Geen opmerkingen:

Een reactie posten