தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 11 september 2014

படுகொலையாளிகளை கூண்டில் ஏற்ற முருகதாசன் திடலில் அணிதிரளுங்கள்: பழ.நெடுமாறன் அழைப்பு!

என்னைப் பல பெண்கள் காதலித்தனர்- பா.உறுப்பினர்களை நாடு கடத்துவேன்: ஞானசார தேரர்
[ வியாழக்கிழமை, 11 செப்ரெம்பர் 2014, 01:45.13 AM GMT ]
அழகான பெண்களை பார்த்த இரசிப்பதுண்டு என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
அழகான பெண்களை பார்த்தால் ரசிப்பதுண்டு. எனினும் அதனை மனதில் ஆழமாக போட்டுக் குழப்பிக்கொள்வதில்லை.
உங்களுக்கு தோன்றும் உணர்வுகள் எனக்கும் உருவாகும். காமம், ஆசை, இச்சை போன்ற உணர்வுகள் எனக்கும் ஏற்படுவதுண்டு ஏனெனில் நானும் மனிதனே.
எனினும் ஒரு விடயத்தில் மனதை ஒருநிலைப்படுத்துவதன் மூலம், இவ்வாறான இச்சைகளை கட்டுப்படுத்த முடிகின்றது.
இவ்வாறான சூழ்நிலையில் பெண் ஒருவரை நெருங்கவோ, காதலிக்கவோ சந்தர்ப்பம் கிடையாது. இந்த உணர்வுகள் எல்லாம் செத்துப் போய்விட்டன.
ஒருபோதும் மது அருந்தியதோ, புகைப்பிடித்ததோ கிடையாது.
துறவறம் பூண்டதன் பின்னர் என்னைப் பல பெண்கள் காதலித்திருக்கின்றார்கள்.
இது ஓர் சாதாரண விடயமாகும். இவ்வாறான நிலைமைகளின் போது எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்து பௌத்த மதத்தில் போதிக்கப்பட்டுள்ளது.
2004ம் ஆண்டில் யுவதியொருவர் என்னை தொடர்ச்சியாக பின் தொடர்ந்தார். பின்னர் அவர் என்னை காதலிக்கின்றார் என்பதை உணர்ந்தேன்.
பெண்களை எனது சகோதரி, தாய், மகள் போல நினைத்துக்கொள்ளுமாறு புத்தர் போதித்துள்ளார்.
துறவறம் பூணுவதற்கு முன்னதாக பெண்கள் பின்னால் சுற்றித் திரிந்திருக்கின்றேன்.
12, 13 வயது முதல் இவ்வாறு யுவதிகளின் காதலை பெற்றுக் கொள்ள முயற்சித்திருக்கின்றேன்.
பௌத்த பிக்குவாக மாறியதன் பின்னர் இந்த உணர்வுகள் தண்ணீரில் கரைந்து போய்விட்டது.
பாடசாலை காலத்தில் நான் கலை இலக்கிய துறைகளில் சிறந்து விளங்கினேன்.
இதனால் ஒரு காதலி இருந்தார் என சொல்ல முடியாது. பலர் என்னை நேசித்தார்கள்.
அரசாங்கத்தில் எனக்கு பிடித்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க. பிடிக்காதவர்கள் டிலான், ராஜித, வாசுதேவ நாணயக்கார ஆகியோராகும். ஜே.வி.பி.யில் அனுரகுமார திஸாநாயக்கவை பிடிக்கும்.
இறைச்சி, மீன் சாப்பிடுவேன், புத்த பிரான் எந்த இறைச்சி சாப்பிடலாம் எதனைச் சாப்பிடக் கூடாது என குறிப்பிட்டுள்ளார்.
வாசனைத் திரவியங்களுக்கு போட்டுக்கொள்ள எனக்கு அலாதிப் பிரியம் உண்டு.
அரசாங்கம் எமக்கு ஆதரவளிப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சிங்கள சஞ்சிகையொன்றுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களை நாடு கடத்துவேன்: ஞானசார தேரர்
பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரில் நான்கு பேரைத் தவிர மற்ற எல்லோரையும் நாடு கடத்துவேன் என பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்று நடாத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு தேவையில்லை எனக் கருதும் அமைச்சர்களை நாடு கடத்துவதற்கு தங்களுக்கு ஒர் அவகாசம் கிடைக்கப் பெற்றால் நீங்கள் எந்த அமைச்சரை முதலில் நாடு கடத்துவீர்கள் எனக் கேட்கப்பட்டதற்கே தேரர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
மேலும், தூர உள்ள நாடொன்றுக்கே நாடு கடத்துவேன். சகல வசதிகளையும் அங்கே அவர்களுக்கு வழங்குவேன் எனவும் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSVKUgr2.html

படுகொலையாளிகளை கூண்டில் ஏற்ற முருகதாசன் திடலில் அணிதிரளுங்கள்: பழ.நெடுமாறன் அழைப்பு
[ வியாழக்கிழமை, 11 செப்ரெம்பர் 2014, 02:26.18 AM GMT ]
உலகத் தமிழர்களின் ஒன்றுபட்ட குரல் ஐநா திடலில் ஓங்கி ஒலிக்க வேண்டும். மாபெரும் இப் பேரணியில் தமிழ் மக்கள் கலந்து கொள்வது தங்கள் கடமையாக எடுத்துக் கொள்ளவேண்டும். உலகத் தமிழர்களின் ஒவ்வொருவரிடமும் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அப்பாவி தமிழ் மக்கள் பதைக்க பதைக்க படுகொலை செய்தவர்களை கூண்டில் ஏற்றி பன்னாடு விசாரிக்க வேண்டும் என்பதற்காக ஜெனீவா முன்றலில் முருகதாசன் திடலில் எதிர்வரும் 15ஆம் நாள் அணிதிரளுமாறு அனைத்து புலம்பெயர் மக்களையும் பழ நெடுமாறன் அழைப்பு விடுத்துள்ளார்.
வெல்லும் வரை செல்வோம்- 8வது நாளாக தொடரும் நீதிக்கான ஈருருளிப் பயணம்
கடந்த 3ம் திகதி தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப் பயணம் இன்று 8 வது நாளாக சுவிஸ் நாட்டை வந்தடைந்தது. மாலை 7 மணிக்கு Basel நகரை வந்தடைந்த மனிதநேய செயற்பாட்டாளர்களை Basel நகர மக்கள் வரவேற்றினர்.
துயரத்தின் கடலில் மூழ்கி தவிக்ககூடிய தமிழர்களை கரையேற்றுவதற்காக உலக சமுதாயம் அந்த முயற்சியில் உடனடியாக ஈடுபட்டாக வேண்டும் என்பதற்காக இந்த போராட்டம் ஐ.நா முன்றலை நோக்கி நடைபெறுகின்றது.
இதில் அனைத்து புலம்பெயர் தமிழர்களும் கலந்து கொண்டு எங்கள் குரலினை ஓங்கி ஒலிக்க செய்ய வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு. அந்த கடமையினை செய்ய எதிர்வரும் 15 ஆம் நாள் ஜெனீவா நகருக்கு அனைத்து மக்களும் அணிதிரள வேண்டும்.
ஐ.நா முன்றலில் அலை அலையாக கூடுங்கள். உரக்க குரல் கொடுத்து தமிழர்களின் கோரிக்கையினை உலகிற்கு தெரிவிக்கும் முகமாக ஈருருளிப் பயணம் செல்லும் வழிகளில் உள்ள நகரபிதா மற்றும் ஊடகவியாளர்களை சந்தித்து செல்கின்றது.
ஒற்றுமையின் மூலம் துயரக்கடலில் மூழ்கியிருக்கும் தமிழ் மக்களின் விழிகளில் பெருகும் நீரினை துடைக்க முடியும் என்ற நம்பிக்கையில் திரண்டு வாருங்கள் என்று ஈருருளிப் பயணத்தை மேற்கொள்ளும் மூவரும் தமிழ் மக்களுக்கான வேண்டுகோளாக வைத்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJSVKUgr3.html

Geen opmerkingen:

Een reactie posten