தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 11 september 2014

பாகிஸ்தானுக்காக உளவு பணியில் ஈடுபட்ட இலங்கை தமிழர் கைது - யாழில் இந்தியர் கைது

ஊழல் மோசடிகள் காரணமாகவே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வருவதில்லை: ஐ.தே.க
[ வியாழக்கிழமை, 11 செப்ரெம்பர் 2014, 12:22.33 AM GMT ]
நேரடி ஊழல் மோசடிகள் காரணமாகவே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வருவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் சத்தம் போடுவதனாலோ அல்லது ஊடகங்களில் ஊழல் பற்றி செய்தி வெளியிடப்படுவதனாலோ வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய தயங்கவில்லை.
நாட்டில் இடம்பெற்று வரும் பாரியளவிலான நேரடி மோசடிகள், ஊழல்களே முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய தயங்குவதற்கான காரணமாகும்.
போரின் பின்னர் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்திருக்க வேண்டும்.
வியட்நாம் போன்ற நாடுகளைப் போன்று இலங்கையில் ஏன் முதலீடுகளை அதிகரிக்க முடியாது.
வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்க முடியாமைக்கு சட்டம் ஒழுங்கு நிலைமை சீர்குலைவும் ஓர் பிரதான காரணியாகும்.
விரைவில் நாம் ஆட்சியை அமைப்போம் அதன் பின்னர் நேரடி முதலீடுகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம் என எரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSVKUgry.html
சுகாதாரத்துறையை விடவும் ஜனாதிபதியின் பணியாளர்களுக்கு அதிகம் செலவிடப்படுகின்றது: ஜே.வி.பி.
[ வியாழக்கிழமை, 11 செப்ரெம்பர் 2014, 12:30.21 AM GMT ]
நாட்டின் சுகாதாரத்துறையை விடவும் ஜனாதிபதியின் பணியாளர்களுக்கு அதிகம் செலவிடப்படுவதாக ஜே.வி.பி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் மொத்த சனத்தொகை இரண்டு கோடியாகும். சுகாதாரத்துறைக்கு 1100 கோடி ரூபா பணம் செலவிடப்படுகின்றது.
ஜனாதிபதியின் பணியாளர்களது எண்ணிக்கை 1348 பேர். அவர்களுக்கான செலவு 1340 கோடி ரூபாவாகும்.
ஜனாதிபதி செயலணியின் தலைவர் வேறும் ஆறு அரச நிறுவனங்களில் முக்கிய பதவிகளை வகித்து வருகின்றார்.
நபர் ஒருவரினால் இத்தனை பதவிகளை வகித்து தமது கடமைகளை ஆற்ற முடியுமா என்பது கேள்விக்குறியே என அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றில் நேற்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதியின் செயலாளர் உள்ளிட்ட பணியாளர்கள் தமது கடமையை சிறந்த முறையில் ஆற்றி வருவதாக ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSVKUgrz.html
சாட்சியாளர்கள், குற்றச் செயல்களில் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க தேசிய அதிகாரசபை
[ வியாழக்கிழமை, 11 செப்ரெம்பர் 2014, 12:42.57 AM GMT ]
சாட்சியாளர்கள் மற்றும் குற்றச் செயல்களில் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கு தேசிய அதிகாரசபை ஒன்றை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தேசிய அதிகார சபை மற்றும் விசேட பொலிஸ் பிரிவு ஆகியவற்றின் ஊடாக சாட்சியாளர்களையும்ää சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்ளையும் பாதுகாக்கும் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது.
சாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டமூலம் நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
நீதி அமைச்சின் செயலாளர், சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர், மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் அல்லது பிரதிநிதி, மனித உரிமை ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் முதலானவர்கள் சாட்சியாளர்களை பாதுகாக்கும் அதிகாரசபையில் அங்கம் வகிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையிலான பிரிவினர் சாட்சியாளர்ளுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாதுகாப்பு வழங்குவர்.
சாட்சியாளர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக பிரயோகிக்கப்படும் அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள், பழிவாங்கல் நடவடிக்கைகள் தொடர்பில் இந்த விசேட பொலிஸ் குழு விசாரணை நடத்தும் என உத்தேச சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தேச சட்டமூலம், அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJSVKUgr0.html

[ வியாழக்கிழமை, 11 செப்ரெம்பர் 2014, 01:20.55 AM GMT ]
பாகிஸ்தானுக்காக உளவுப்பணிகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கை தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இந்தியாவில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அருண் செல்ராஜன் என்ற இலங்கையர், பாகிஸ்தானுக்கான உளவுப்பணிகளில் ஈடுபட்டிருந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த இலங்கையர் கைது செய்யப்படும் போது அவரிடம் இரண்டு கடவுச்சீட்டுக்கள் இருந்துள்ளன.
குறித்த இலங்கையர் எங்கே வைத்து கைது செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. எனினும் அவர் பல முக்கிய இடங்கள் குறித்து தகவல்களை சேகரித்தார் என்று இந்திய புலனாய்வு சேவை குற்றம் சுமத்தியுள்ளது.
இணையத்தள தொடர்பின் அடிப்படையில் செல்வராஜன் தகவல்களை பரிமாறியமை தொடர்பான சாட்சியங்கள், அவர் கைது செய்யப்பட்ட போது மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை குறித்த சந்தேக நபருக்கு இலங்கையிலும் குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இவருக்கு உளவுப்பணிகளுக்காக கொழும்பிலுள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரகமே நிதிகளை வழங்கியுள்ளது.
முகாமைத்துவ நிறுவனம் ஒன்றின் நிகழ்வுக்காக 2011ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சென்ற அருண், இந்தியாவின் பல துறைமுக காவல் பணிமனைகளுக்கும் அதிகாரிகளின் பயிற்சியகங்களுக்கும் விஜயம் செய்துள்ளார்.
இந்தநிலையில் ஏற்கனவே பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் 2012ஆம் ஆண்டு செப்டெம்பர் 16ஆம் திகதி தமிழகத்தில் கைது செய்யப்பட்ட தமீன் அன்சாரியுடன் அருண் தொடர்பு கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
அன்சாரி, வெலிங்டன் இராணுவ முகாம், காரைக்கால், நாகப்பட்டிண துறைமுகங்கள் மல்லிப்பட்டிணம் கடற்படை முகாம் போன்றவற்றின் புகைப்படங்களை வெளிநாட்டவர் ஒருவருக்கு மின்னஞ்சலில் அனுப்பும் போது கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழில் தங்கியிருந்த இந்தியர் கைது
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்திய பிரஜை ஒருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
குறித்த இந்திய பிரஜை வீசா அனுமதியின்றி யாழ்ப்பாணத்தில் உள்ள ஹொட்டல் ஒன்றில் இருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார். 
39 வயதான சந்தேக நபர் தமிழ் நாட்டை சேர்ந்தவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.
சந்தேக நபர் இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSVKUgr1.html

Geen opmerkingen:

Een reactie posten