தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 11 september 2014

இந்திய மீனவர்களின் செயல் இலங்கைக்கு மாத்திரமல்ல, இந்தியாவுக்கும் கெடுதல் தரும்: மஹிந்த ராஜபக்ச!

கோத்தபாயவுடன் விவாதிக்கச் செல்லவில்லை: கலாநிதி ஜெஹான்
[ வியாழக்கிழமை, 11 செப்ரெம்பர் 2014, 03:01.25 AM GMT ]
அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதை அறிந்து கொள்ளவே பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை சந்தித்தோம் என இலங்கை தேசிய நீதிச் சபையின் பிரதிநிதி கலாநிதி ஜெஹான் பெரேரா கருத்து வெளியிட்டுள்ளார்.
நேற்று பொதுநலவாய நாடுகள் அமைப்பின் 11 அரச சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் பொதுநலவாய மக்கள் பேரவை ஆகியவற்றின் 11 பிரதிநிதிகள், பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை சந்தித்தனர்.
இந்த சந்திப்பு குறித்து கலாநிதி ஜெஹான் பெரேரா பி.பி.சி. சிங்கள சேவைக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கோத்தபாயவுடன் முதலாவது சந்திப்பு என்பதனால் நாம் அவருடன் விவாதிக்கச் செல்லவில்லை.
அவர் சார்பாக கூறிய கருத்துக்களை நாம் செவிமடுத்தோம். எமது சார்பான சில கருத்துக்களையும் நாம் கூறினோம். எமது பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிந்துகொள்ளவே நாம் விரும்பினோம்.
இந்த நாட்டில் அரச சார்பற்ற நிறுவனங்கள் செயற்படுவதில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அரச ஊடகங்கள், அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராக முன்னெடுக்கும் மோஷமான பிரச்சாரம் அதில் முக்கியமானது.
அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடாத்தக் கூடாது என பாதுகாப்பு அமைச்சினால் எமக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
இவை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்று தெரிந்துகொள்ளவே நாம் விரும்பினோம்.
பல்வேறு விடயங்கள் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் எமக்கு விளக்கம் அளித்தார். அது அவர் சார்பில் வழங்கப்பட்ட விளக்கம். அதற்கு எதிராக நாம் எதுவும் தெரிவிக்கச் செல்லவில்லையெனவும் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSVKUgr5.html
இந்திய மீனவர்களின் செயல் இலங்கைக்கு மாத்திரமல்ல, இந்தியாவுக்கும் கெடுதல் தரும்: மஹிந்த ராஜபக்ச
[ வியாழக்கிழமை, 11 செப்ரெம்பர் 2014, 03:16.58 AM GMT ]
இழுவைப் படகுகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதன் மூலம் இந்திய மீனவர்கள் இலங்கையின் சுற்றலாடலை நாசமாக்குகின்றனர் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
ஒன்று இரண்டு என்றில்லாமல் நூற்றுக்கணக்கான இழுவைப் படகுகள் நாள்தோறும் இலங்கையின் கடற் பகுதிக்கு வந்து தொழிலில் ஈடுபடுகின்றன என்;று ஜனாதிபதி த ஹிந்து நாளிதழுக்கு நேற்று வழங்கிய செவ்வியின்போது குற்றம் சுமத்தினார்.
இந்திய மீனவர்கள் இலங்கையர்களுக்கு கெடுதல் செய்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இது இலங்கையின் சுற்றாடலை மாசுபடுத்தும் காரியம் மட்டுமல்ல. இந்தியாவுக்கு கெடுதல் நினைக்கும் செயலாகும்.
தம்மை பொறுத்தவரை மீன்கள் கரைக்கு வராது மீனவர்களே அவற்றை தேடிச்செல்ல வேண்டும் என்று நம்புவதாக ராஜபக்ச குறிப்பிட்டார்.
இந்தநிலையில் குறித்த விடயத்தை தீவிரமான ஒன்றாக கருதி இரண்டு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSVKUgr6.html

Geen opmerkingen:

Een reactie posten