[ புதன்கிழமை, 03 செப்ரெம்பர் 2014, 08:38.34 AM GMT ]
இதன் முதல் கட்டமாக சுகாதார சேவையின் சிற்றூழியர் சங்கம் என்ற அமைப்பு நேற்று பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சுகாதார துறையில் ஏற்பட்டுள்ள ஊழலான நிலைமையை போக்குவதற்காக அந்த துறையின் கீழ் மட்டத்தில் தொழிற்சங்கம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் பொதுபல சேனா மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாடுகளை கொண்டுள்ளதாக கூறப்படும் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக செயற்படும் நோக்கிலேயே இந்த தொழிற்சங்கம் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்தி- தொழிற்சங்கங்களுக்கு தலைமை தாங்கவுள்ளதாம் பொதுபலசேனா!
http://www.tamilwin.com/show-RUmsyJTXKUkuy.html
முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் இலங்கை வருகை
[ புதன்கிழமை, 03 செப்ரெம்பர் 2014, 08:52.13 AM GMT ]
அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்றுள்ள குமார் குணரட்னம், முன்னிலை சோசலிசக் கட்சி ஆரம்பிக்கப்படுவதற்கு சில காலங்களுக்கு முன்னர் அரசாங்கத்தின் பாதுகாப்பு படையினரால் கடத்திச் செல்லப்பட்டார்.
அவர் அவுஸ்திரேலிய குடியுரிமை பெற்றுள்ளவர் என்ற காரணத்தினால், அந்நாட்டு அரசாங்கத்தின் அழுத்தங்கள் காரணமாக விடுவிக்கப்பட்டதுடன் இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்டார்.
தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் அவர் இலங்கை திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தயாராகி வரும் முன்னிலை சோசலிசக் கட்சியின் வேட்பாளரை தெரிவு செய்தல் மற்றும் ஏனைய பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் குமார் குணரட்னம் இலங்கை வரவுள்ளதாக அவுஸ்திரேலியாவில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் குணரட்னம் இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்ட பின்னர் கருத்து வெளியிட்டிருந்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ,
குமார் குணரட்னம் என்ற பெயரிலோ, அவர் ஏற்கனவே இலங்கை வந்திருந்த நோயேல் முதலிகே என்ற பெயரிலோ மீண்டும் இலங்கைக்குள் வர அனுமதிக்கப்பட மாட்டார் என குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறான சூழ்நிலையில், குமார் குணரட்னம் எப்படி இலங்கைக்கு வருவார் என்பது குறித்து அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
இது சம்பந்தமாக கருத்து வெளியிட்ட இடதுசாரி கட்சி ஒன்றின் அரசியல் சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர்,
முன்னிலை சோசலிசக் கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கம் ஒன்றின் அடிப்படையில் குணரட்னம் இலங்கைக்கு வரக் கூடும் என குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTXKUku0.html
மட்டக்களப்பு வைத்தியசாலையில் தமிழ்க் கொலை
[ புதன்கிழமை, 03 செப்ரெம்பர் 2014, 09:05.34 AM GMT ]
சுகாதார அமைச்சானது மட்டக்களப்பு தமிழ் பேசும் மக்களுக்கு ஆற்றிவரும் சேவைகளுக்காக பொதுமக்கள் நன்றிகளை கூறிக்கொள்வதுடன் இவ் அமைச்சு சிறந்த நேக்கத்துக்காக விழிப்புணர்வு பலகை இடப்பட்டாலும் அதில் காணப்படும் தமிழ் பிழைகளை கண்டு பொதுமக்கள் மனவேதனை அடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டம் 99 வீதம் தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJTXKUku1.html
Geen opmerkingen:
Een reactie posten