இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது: 16ம் திகதி சீன அதிபர் இலங்கை செல்லவுள்ளார் !
[ Sep 10, 2014 03:26:53 PM | வாசித்தோர் : 10145 ]
சீன ஜனாதிபதியின் இலங்கை விஜயமானது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என இலங்கை அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் பல புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 28 ஆண்டுகளில் சீன ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்யும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். சீன ஜனாதிபதி ஜின்பிங், இந்தியா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கும் விஜயம் செய்ய உள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/973.htmlகுருநகர் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட கொன்சலிற்றாவின் மரணம் இன்னும் குழப்பத்தில் !
[ Sep 10, 2014 03:33:47 PM | வாசித்தோர் : 9825 ]
கொன்சலிற்றாவின் வழக்கு தொடர்பான இறுதி அறிக்கை வாசிக்கப்படுவதற்காக நேற்று செவ்வாய்க்கிழமை (09) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கொன்சலிற்றாவின் மரணத்திற்கு ஆயர் இல்லத்து பாதிரியார்கள் இருவரே காரணம் என்பதற்குரிய ஆதாரம் நிரூபிக்கப்படாத நிலையில், பொலிஸாரின் மேலதிக விசாரணை அறிக்கை மன்றில் சமர்பிக்கப்படுவதாக இருந்தது. இருந்தும், தமது விசாரணைகள் முடிவடையவில்லை எனவும், அதற்கு கால அவகாசம் வழங்கவேண்டும் எனவும் பொலிஸார் இன்று, மன்றில் கேட்டதிற்கிணங்க நீதவான் காலஅவகாசம் வழங்கி வழக்கை ஒத்திவைத்தார்.
யாழ்.குருநகர்ப் பகுதியை சேர்ந்த ஜெரோம் கொன்சலிற்றா கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி குருநகர் சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின் புறமாக இருந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இந்த நிலையில் இவருடைய மரணத்திற்கு ஆயர் இல்லத்தில் இருக்கும் இரண்டு பாதிரியார்களே காரணம் என கொன்சலிற்றாவின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களினால் தெரிவிக்கப்பட்டது. இருந்தும், நீதிமன்ற விசாரணைகளின் போது, பாதிரியார்கள் தான் காரணம் என்பது நிரூபிக்கப்படவில்லை. கொன்சலிற்றா, யாழ்.ஆயர் இல்லத்தில் மறைக்கல்வி போதித்து வந்த ஆசிரியை என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.athirvu.com/newsdetail/974.html
Geen opmerkingen:
Een reactie posten