தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 10 september 2014

வடக்கில் தடை செய்யப்பட்ட மீன்பிடியில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

முல்லைத்தீவில் இருவர் கைது
[ புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2014, 01:47.39 PM GMT ]
முல்லைத்தீவில் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இருவரை நேற்றைய தினம் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முள்ளியவளை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த குறித்த இருவரும் கசிப்பு உற்பத்தி தொடர்பான வழக்குகளுக்கு சமூகமளிக்காமையினாலேயே இருவரையும் கைது செய்யுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கட்டிருந்தது.
இதனடிப்படையில் நேற்றைய தினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இருவரும் இன்று புதன்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர் என முள்ளியவளை பொலிஸார் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJSUKUgp4.html
வடக்கில் தடை செய்யப்பட்ட மீன்பிடியில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
[ புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2014, 03:44.09 PM GMT ]
வடமாகாணத்தில் தடை செய்யப்பட்ட முறையில் கடற்றொழிலில் சிங்கள மீனவர்கள் அதிகளவில் ஈடுபடுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுவதாக சுட்டிக்காட்டியிருக்கும் மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன், எதிர்காலத்தில் அவ்வாறானவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து இன்றைய தினம் யாழ்.மாவட்டத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த சந்திப்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
வடக்கு மாகாணத்திலுள்ள மீனவர்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகைள் மற்றும் மீன்பிடி அபிவிருத்தி தொடர்பில் ஆராயும் நோக்கில் மாகண முதலமைச்சரின் ஆலோசனைகளுக்கு அமைய மீன்பிடி அமைச்சினால் குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண மீனவர்கள் பல்வேறு அழிவுகளைச் சந்தித்து வந்திருந்தநிலையிலும் தற்போதும் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர். இத்தகைய பாதிப்புக்கள் தொடர்பில் அமைச்சர் என்ற ரீதியில் என்னிடம் பலமுறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இத்தகைய முறைப்பாடுகள் தொடர்பில் நாம் ஆராய்ந்து வருகின்றோம். ஆனால் இத்தனை பிரச்சினைகளைத் தீர்ப்பதில் சிலசட்டச் சிக்கல்களும் இருந்து வருகின்ற அதேவேளையில், எம்மால் மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடக்கு முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் மாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனை மற்றும் மீன்பிடி அபிவிருத்தியை விருத்தி செய்யும் நோக்கில் வடக்கு மாகாண மீன்படி அமைச்சிற்கு ஆலோசனை வழங்கும் குழுவொன்று அமைக்கப்பட்டு அந்தக் குழுவினூடாகவே தொடர் நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளோம்.
இந்தக் குழுவினர் வடக்கின் அனைத்து கிராமங்களுக்கும் சென்று அங்குள்ள தொழிலாளர்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகள் மற்றும் பாதிப்புக்களை இணம் கண்டு அவற்றைத் தீர்த்து வைப்பதுடன் மீன்பிடிதுறையை அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கும் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய தடை செய்யப்பட்ட தொழிலை மேற்கொள்பவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமற்ற முறையில் உடனடி நடவடிக்கை எடுக்க உள்ளோம்.
அதேநேரம் இவ்வாறு இதுவரை காலமும் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு மாற்றுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுடன் நிவாரணத்தையும் வழங்க உள்ளோம்.
இவ்வாறு மாகாணத்தின் மீன்பிடி அபிவிருத்திக்கு மாகாண அமைச்சு முன்னெடுக்கும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு மத்திய மீன்பிடி அமைச்சும் ஆதரவு வழங்கி உள்ளதுடன் எதிர்காலத்தில் இங்கு வடக்கு மீன்பிடி அமைச்சுடன் இணைந்து செயற்பட உள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றனார்.
இவ்வாறு உண்மையாகவே தெரிவித்திருப்பார்களாயின் அதனை நாம் வரவேற்கின்றோம் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSUKUgp7.html

Geen opmerkingen:

Een reactie posten