[ புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2014, 04:05.03 PM GMT ]
இலங்கை மாலைதீவு இணைக்குழு கூட்டம் இன்று இடம்பெற்ற போது இந்தக்கோரிக்கையை இலங்கை விடுத்தது.
எனினும் முன்கூட்டிய கோரிக்கையின்றி தமது கடற்பரப்பில் வெளிநாட்டு மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்று மாலைதீவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஏற்கனவே இலங்கை கோரிக்கை விடுத்தபோதும் அதனை தாம் நிராகரித்து விட்டதாக மாலைதீவின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க தமது கடலில் இலங்கை மீனவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் அவை பொய்யானவை என்று மாலைதீவின் வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJSUKUgqy.html
ஊவாவில் வன்முறைகளை கட்டுப்படுத்த பொலிஸ் மா அதிபருக்கு அதிகாரம் இல்லை: ஜேவிபி
[ புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2014, 04:15.59 PM GMT ]
இலங்கையின் பொலிஸ் மா அதிபருக்கு இந்த சவால் விடுக்கப்பட்டுள்ளது.
ஊவாவில் சட்டவிரோத கட்சி அலுவலங்கள் அமைக்கப்பட்டுள்ளமையே அங்கு வன்முறைகள் இடம்பெறுவதற்கான காரணங்கள் என்று பொலிஸ் மா அதிபர் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே அநுர குமார பொலிஸ்மா அதிபருக்கு சவால் விடுத்துள்ளார்.
ஊவாவில் அரசாங்கத்தின் ஆதரவுடனேயே வன்முறைகள் இடம்பெறுகின்றன என்றும் அநுர குமார குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியது பொலிஸாரின் கடமை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொலிஸ் மா அதிபரை பொறுத்தவரையில் அவர் வன்முறைகளை தடுக்கும் அதிகாரத்தை கொண்டிருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கபே அமைப்பின் தகவல்படி ஊவா மாகாணத்தில் தேர்தல் தொடர்பான வன்முறைகளின் எண்ணிக்கை 317ஆக உயர்ந்துள்ளது
http://www.tamilwin.com/show-RUmsyJSUKUgqz.html
வளம் மிக்க நாடுகள் சிறிய நாடுகளை பயமுறுத்துகின்றன: இலங்கை குற்றச்சாட்டு (செய்தித் துளிகள்)
[ புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2014, 04:24.46 PM GMT ]
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இந்த குற்றச்சாட்டை இலங்கை இன்று முன்வைத்தது.
உலகின் சக்திமிக்க நாடுகள் பொருளாதாரத்தில் தளர்வான மற்றும் சிறிய நாடுகளை பயமுறுத்தி வழிக்கு கொண்டு வரும் உத்தியை பயன்படுத்தி வருவதாக இலங்கை குறிப்பிட்டுள்ளது.
இது உலகின் ஜனநாயக மற்றும் சமவுரிமை என்பவற்றுக்கு எதிரான நடவடிக்கை என்றும் இலங்கை சுட்டிக்காட்டியுள்ளதாக கொழும்பின் ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு பங்கு சந்தையின் சந்தை மூலதனம் முதல் தடவையாக 3 ரில்லியன் ரூபாய்களை கடந்தது
கொழும்பு பங்குசந்தை வரலாற்றில் முதல் தடவையாக சந்தை மூலதனம் 3 ரில்லியன் ரூபாய்களை கடந்துச் சென்றதாக நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பு பங்குசந்தை இன்று இது அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
இந்த அறிவித்தலின்படி கொழும்பு பங்கு சந்தையின் சந்தை மூலதனம் 3,006,7 பில்லியன் ரூபாய்கள் பெறுமதியான வர்த்தக பரிமாற்றங்கள் இன்று இடம்பெற்றுள்ளன.
சிங்கப்பூர், லண்டன் மற்றும் நியூயோர்க் போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டாளர்களை கவரும் நடவடிக்கைகள் காரணமாகவே இன்று இந்த உயர்ச்சி ஏற்பட்டுள்ளது.
தேர்தல்களை நிறுத்தும் அளவுக்கு வன்முறைகள் இடம்பெறவில்லை: பெப்ரல்
ஊவா மாகாணசபை தேர்தல் ஒத்தி வைக்கப்படலாம் என்ற ஊகங்கள் சொல்லப்படுகின்ற நிலையில் தேர்தலை ஒத்திவைக்கும் அளவுக்கு அங்கு வன்முறைகள் இடம்பெறவில்லை என்று தேர்தல் கண்காணிப்பு நிலையங்களில் ஒன்றான பெப்ரல் தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவை இன்று சந்தித்த பின்னர் அந்த அமைப்பு தமது கருத்தை வெளியிட்டுள்ளது.
அமைப்பின் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இந்தக்கருத்தை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் வரலாற்றில் மிகவும் மோசமான வன்முறைகள் இடம்பெற்ற போதும் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படவில்லை.
இந்தநிலையில் தேர்தலை ஒத்திவைக்கும் அளவுக்கு ஊவாவில் வன்முறைகள் இடம்பெறவில்லை என்று ஹெட்டியராச்சி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை வன்முறைகளை பொறுத்தவரை அவை மொனராகலை மாவட்டத்திலேயே இடம்பெறுகின்றன என்று கபே அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJSUKUgq0.html
18வது அரசியல் அமைப்பு திருத்த விளக்கம்: இரகசியமாக விசாரித்த உயர்நீதிமன்றம்
[ புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2014, 04:46.44 PM GMT ]
இந்த விசாரணை நேற்று பிரதம நீதியரசர் தலைமையில் இரகசியமாக விசாரணைக்கு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எந்த ஒரு வெளியாரின் பங்கேற்பும் இன்றி இந்த விசாரணை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதன்போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.
இந்தநிலையில் குறித்த விசாரணை, பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், நீதியரசர் பிரியந்த ஜெயவர்த்தன மற்றும் ஈவா வணசுந்தர ஆகியோரின் முன்னிலையில் இடம்பெற்றதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyJSUKUgq1.html
Geen opmerkingen:
Een reactie posten