[ சனிக்கிழமை, 06 செப்ரெம்பர் 2014, 05:54.42 AM GMT ]
இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், '
மனித குல வரலாற்றில் மன்னிக்க முடியாத இனப்படுகொலையை ஈழத்தமிழர்கள் மீது ஏவிய சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்ச, அனைத்துலக நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி ஆவார்.
நெஞ்சை நடுநடுங்கச் செய்யும் கோரப் படுகொலைகளை பச்சிளம் குழந்தைகள், பாலகர்கள், வயது முதிர்ந்தோர், தாய்மார்கள், ஆயுதம் ஏந்தாத பொதுமக்கள் அனைவர் மீதும் கட்டவிழ்த்து விட்டு, கணக்கிட முடியாத வகையில் எண்ணற்ற தமிழ்ப் பெண்களை நாசமாக்கிப் பேரழிவு நடத்தியது சிங்கள அரசு என்பதை, ஐ.நா. மன்றத்தின் மூவர் குழு அறிக்கை, 2010ம் ஆண்டிலேயே ஆதாரங்களோடு வெளியிட்டது.
லண்டன் சனல் 4 தொலைக்காட்சி ஊடகம் வெளியிட்ட இசைப்பிரியா படுகொலைக் காட்சியும், 8 இளம் தமிழ் இளைஞர்கள் அம்மணமாகக் கட்டி இழுத்து வரப்பட்டு உச்சந்தலையில் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சியும், பச்சிளம் குழந்தை பாலச்சந்திரன் படுகொலையும், மனசாட்சி உள்ள இதயங்களை உலுக்கி விட்டன.
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் இந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதிக் கட்டப் போரின்போது நடைபெற்ற படுகொலைச் சம்பவங்களை, மனித உரிமை மீறல்களை விசாரிக்க சுதந்திரமான அனைத்துலக விசாரணை நடைபெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது.
அந்த அடிப்படையில் ஐ.நா.வின் மனித உரிமை ஆணையம், மார்ட்டி அட்டிசோரி உள்ளிட்ட மூவர் விசாரணைக் குழுவை அறிவித்தது. ஆனால், ஐ.நா. விசாரணைக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்கமாட்டேன் என்று ஆணவத்தோடு ராஜபக்ச கொக்கரிக்கிறார்.
2009ல் ஈழத்தமிழரைப் படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை, முன்னைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, தமிழர்கள் சிந்திய ரத்தம் உலர்வதற்குள்ளாகவே, இந்தியாவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கும், உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கும் சிறப்பு விருந்தினராக வரவேற்றபோது அதை எதிர்த்துப் போராடினோம்.
மத்தியப் பிரதேசம் சாஞ்சிக்கு ராஜபக்ச வந்தபோது, சாஞ்சிக்கே அணிவகுத்துச் சென்று அறப்போர் நடத்தினோம். மீண்டும் டெல்லியில் அன்றைய பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங்கை சந்திக்க வருவதை அறிந்து, பிரதமர் இல்ல முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். ராஜபக்சே திருப்பதிக்கு வந்தபோது, ஆயிரக்கணக்கான தோழர்கள் அங்கும் சென்று கருப்புக் கொடிப் போராட்டம் நடத்தினோம்.
அண்மையில் மே மாதம், நரேந்திர மோடி பிரதமர் பதவி ஏற்பு விழாவின்போது, ராஜபக்சே பங்கேற்றதை எதிர்த்துத் தலைநகர் டெல்லியில் கருப்புக்கொடிப் போராட்டம் நடத்தினோம். ஐ.நா. மன்றத்தில் ராஜபக்ச பேச அனுமதிக்கக் கூடாது; ஐ.நா. மன்றம் அமைத்த விசாரணைக் குழுவை இந்தியாவில் தமிழ்நாட்டில் விசாரணை மேற்கொள்ள இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுதந்திரத் தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு ஈழத்தமிழர்களின் பூர்வீகத் தாயகத்திலும், புலம் பெயர்ந்தோர் வாழும் நாடுகளிலும் நடத்தப்பட வேண்டும். சிங்களக் குடியேற்றங்கள் அகற்றப்பட வேண்டும். சிறையில் வதைபடும் ஈழத்தமிழர்கள் விடுவிக்கப்பட வேண்டும். தமிழக மீனவர்களுக்கு நாளும் கேடு செய்யும் சிங்கள அரசின் கொட்டத்தை ஒடுக்க வேண்டும்.
ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டெம்பர் 9ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று, காலை 11.00 மணி அளவில், தலைநகர் சென்னையில், வள்ளுவர் கோட்டத்திற்கு அருகில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். கழகக் கண்மணிகளும், தமிழ் உணர்வாளர்களும் பெருமளவில் பங்கேற்க அன்புடன் வேண்டுகிறேன்.
http://www.tamilwin.com/show-RUmsyJTaKUip0.html
நாட்டின் சுதந்திரத்தை முழுமைப்படுத்தவே சுதந்திரக் கட்சி உருவானது: ஜனாதிபதி
[ சனிக்கிழமை, 06 செப்ரெம்பர் 2014, 05:55.19 AM GMT ]
பதுளையில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 63வது தேசிய மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க உரிமைகள் இருப்பதன் காரணமாகவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டை நடத்த ஊவா மாகாணத்தை தெரிவு செய்தோம்.
நாட்டின் சுதந்திரத்திற்கான வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் போராட்டத்தை நடத்திய ஊவா மாகாணத்தில் மாநாட்டை நடத்துவது மிகவும் பொருத்தமானது என நம்பினோம்.
1818 ஆம் ஆண்டு வீரகெப்பட்டிபொல ஊவா வெல்லஸ்ஸவில் ஆரம்பித்த போராட்டம் அன்று தோல்வியடைந்தாலும் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தின் வெற்றியை நோக்கி சுதந்திரக் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் கொண்டு சென்றன.
ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே.வி.பியும் பெண்களை மறந்து போயின. எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்றும் பெண்களை மறந்ததில்லை.
நாட்டின் சுதந்திரத்தை முழுமையடைய செய்யவே 1951 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாட்டில் உருவாகியது என நான் கருதுகிறேன்.
சுதந்திரக் கட்சி பொதுமக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுத்தது. இதன் காரணமாகவே சிங்களம் மற்றும் தமிழ் பேசும் பொதுமக்களின் பிள்ளைகள் எம்முடன் கைகோர்த்தனர் எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTaKUip1.html
கூட்டமைப்பின் நிலைப்பாடுகள் குறித்து சிங்கள மக்களுக்கு தெளிவுப்படுத்தப்படும்: சுமந்திரன்
[ சனிக்கிழமை, 06 செப்ரெம்பர் 2014, 06:20.42 AM GMT ]
கூட்டமைப்பின் நிலைப்பாடுகள் பற்றி இதற்கு முன்னர் சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்தாத காரணத்தினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது சிங்கள மக்கள் கொண்டுள்ள தவறான புரிதலை சரி செய்யும் நோக்கில் இந்த திட்டத்தை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிளவுபடாத ஐக்கிய இலங்கைக்குள் தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்ற கூட்டமைப்பின் நிலைப்பாடு பற்றி செய்தியை சிங்கள மக்களுக்கு வழங்குவதற்காக இந்த வேலைத்திட்டத்தை ஒழுங்கு செய்துள்ளதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கோ வன்முறையை உள்ளடக்க வேண்டும் என்பதில் எந்த விருப்பமும் இல்லை என்பதை சிங்கள மக்களுக்கு புரிய வைக்கப்படவேண்டும்.
சிங்கள மக்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறித்து அரசாங்கம் பொய் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றது இதற்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுப்பதால், தென் பகுதி மக்கள் மத்தியில் கூட்டமைப்பு தொடர்பில் தவறான புரிதல் ஏற்பட்டுள்ளதாகவும் சுமந்திரன் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTaKUip2.html
Geen opmerkingen:
Een reactie posten