சுவாமியின் கொடும்பாவி எரிப்புப் போராட்டம்
பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி, இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இலங்கைக்கு நான் சென்ற போது மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து தமிழக மீனவர்களின் படகுகளை சிறைபிடித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். அதைத்தான் இலங்கை அரசு தற்போது செய்து வருகிறது என்று கூறியிருந்தார்.
சுப்பிரமணிய சாமியின் இந்த பேச்சுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் இன்று காலை கோயம்பேடு பஸ்நிலையம் அருகே சுப்பிரமணியசாமியின் கொடும்பாவியை தீவைத்து கொளுத்த திரண்டு வந்தனர்.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் ´‘எச்சரிக்கிறோம், எச்சரிக்கிறோம் சுப்பிரமணிய சாமியை எச்சரிக்கிறோம்’, ‘மீனவர்களுக்கு எதிராக பேசிய சுப்பிரமணியசாமியை எச்சரிக்கிறோம்’ என்று கோஷமிட்டதாக தமிழக ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன. பின்னர் சுப்பிரமணிய சாமியின் உருவபொம்மையை துடைப்பம், செருப்பால் அடித்து தீவைத்து கொளுத்த முற்பட்டனர்.
இதை பார்த்த கோயம்பேடு பொலிசார், அவர்களைக் கைது செய்தனர். இவ்வாறு கைதான 60 பேரையும் அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதேபோல் விருகம் பாக்கம் வேம்புலியம்மன் கோவில் அருகே ‘இந்திய தேசிய ரியல் எஸ்டேட் லேண்ட் டெவலப்பர்ஸ்’ நிலத்தரகர் சங்கம் சார்பில் சுப்பிரமணியசாமிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தின் போது சுப்பிரணியசாமிக்கு எதிராக கோஷம் எழுப்பப் பட்டது. அவரது கொடும் பாவியையும் எரித்தனர். மேலும் எழும்பூரில் தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில பொருளாளர் அக்ரம்கான் தலைமையில் நடந்த போராட்டத்தில் சுப்பிரமணியசாமி கொடும்பாவியை எரித்தனர்.
http://www.jvpnews.com/srilanka/80897.html
மகிந்தருக்கு பாட்டா எடுக்கும் அதிகாரி… உண்மைகள் அம்பலம்…
இது தொடர்பில் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கும் பல பல பாதுகாப்பு அதிகாரிகள் இதனை யாரிடம் கூறி தீர்வு பெறுவது என தெரியாமல் உள்ளதாக கூறியுள்ளதுடன் அன்மைய நிகழ்வு ஒன்றில் நிகழ்வு முடிந்து வரும் ஜனாதிபதிக்கு பாதணி எடுத்துக் கொடுக்கும் பரிதாபத்திற்கு உள்ளான அதிகாரி பலர் மத்தியில் சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளார். இவ்வாறான அசவ்கரியத்திற்கு தீர்வு உண்டா என பலரும் ஆதங்கப் படுகின்றனர்.
http://www.jvpnews.com/srilanka/80900.html
Geen opmerkingen:
Een reactie posten