தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 2 september 2014

ஐ நா மனிதவுரிமைக்கு புதிய ஆணையாளர் வந்தாலும் கொள்கையில் மாற்றமிருக்காது: ஐ.தே.க

தொழிற்சங்கங்களுக்கு தலைமை தாங்கவுள்ளதாம் பொதுபலசேனா!
[ செவ்வாய்க்கிழமை, 02 செப்ரெம்பர் 2014, 12:46.23 PM GMT ]
நாட்டில் உள்ள தொழிற்சங்கங்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் அவற்றை தலைமை தாங்கும் பொறுப்பை ஏற்கவுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பு, கிருளப்பனை பிரதேசத்தில் அமைந்துள்ள பொதுபல சேனா அமைப்பின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கையில் உள்ள தொழிற்சங்கங்களை நல்வழியில் கொண்டு நடத்த வேண்டும்.
தர்ம போதனைகளை இனி வழங்க வேண்டியது இல்லை.அக்காலம் முடிந்துவிட்டது. போதனைகளில் உள்ளவற்றை பின்பற்ற வேண்டிய காலமே தற்போது மலர்ந்துள்ளது.
இதனால், தூங்கிக் கொண்டிருப்பவர்களை எழுப்புவதற்கு பொதுபல சேனா அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTWKUkq1.html
ஐ நா மனிதவுரிமைக்கு புதிய ஆணையாளர் வந்தாலும் கொள்கையில் மாற்றமிருக்காது: ஐ.தே.க
[ செவ்வாய்க்கிழமை, 02 செப்ரெம்பர் 2014, 11:36.46 AM GMT ]
ஐ நா மனித உரிமை ஆணையாளராக புதியவர் நியமிக்கப்பட்டுள்ளதால் மனித உரிமை ஆணையகத்தின் இலங்கை தொடர்பான கொள்கையில் மாற்றங்கள் எற்படாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கையில் புதிய அரசாங்கம் அல்லது அமைச்சர் பதவியேற்கும் போது கொள்கை மாற்றங்கள் நிகழ்வது போன்று சர்வதேச அளவில் நடைபெறுவதில்லை. இதுவே ஐ.தே.க.வின் நிலைப்பாடு என்றார்.
ஐ.நாவின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை குறித்து இலங்கை அரசாங்கம் வெளியிட்ட கரிசனைகளை புதிய ஆணையாளர் சையத் அல் ஹுசைன் கருத்திலெடுத்து பக்கச்சார்பற்ற விதத்தில் செயற்படுவார் என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்று நம்பிக்கை வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
http://www.tamilwin.com/show-RUmsyJTWKUkq0.html

Geen opmerkingen:

Een reactie posten