வடக்கில் உள்ள அரசாங்க நிறுவனங்களில் சிங்கள அதிகாரிகளை நியமிக்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனடிப்படையில் வடக்கில் உள்ள அரச காரியாலயங்கள், திணைக்களங்கள் போன்றவற்றில் பணியாற்றும் தமிழ் அதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அவர்களின் பதவிகளுக்கு துரிதகதியில் தென்னிலங்கையில் இருந்து சிங்கள அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வடமாகாணத்தை சிங்களவர்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே கிழக்கு மாகாணத்தின் அரச காரியாலயங்களில் இவ்வாறு அதிக அளவில் சிங்கள அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJTWKUkqz.html
Geen opmerkingen:
Een reactie posten