[ திங்கட்கிழமை, 15 செப்ரெம்பர் 2014, 01:34.58 AM GMT ]
பாகிஸ்தான் குறிப்பாக இலங்கையில் தமிழ் பேசும் முஸ்லிம்களை பயன்படுத்தி இந்தியா தொடர்பான உளவு நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
இதன் அடிப்படையிலேயே கடந்த 10 மாதங்களுக்குள் இரண்டு இலங்கை முஸ்லிம்கள் தமிழகத்தில் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் வழிகாட்டலில் இந்தியாவுக்கு எதிரான உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டமை கண்டறியப்பட்டது.
இந்தநிலையில் தற்போது இந்துவான அருண் செல்வாராஜாவை பயன்படுத்தி உளவு நடவடிக்கையை பாகிஸ்தான் முன்னெடுத்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது இலங்கையில் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் பாகிஸ்தானின் செயல் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை பாகிஸ்தானின் இந்த செயல், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இன்னும் பிரச்சினையை கொண்டு வரவில்லை.
எனினும் பாகிஸ்தான், மத மற்றும் இனங்களை பயன்படுத்தி தமது பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னெடுப்பது அதன் ஒரு ஆயுதமாகவே கருதப்படுகிறது.
இது வரையறுக்கப்பட்ட பெறுமதியை மாத்திரமே கொண்டிருக்கும் என்றும், டைம்ஸ் ஒப் இந்தியாவுக்கு கருத்துரைத்துள்ள முரண்பாடுகள் தொடர்பான புதுடில்லி நிபுணர் சஹானி என்பவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSZKUeq2.html
ஈழத் தமிழர்களுக்கு விரைவில் நல்லதொரு தீர்வு கிடைக்கும்! ஆஸி.யில் இந்திய பாஜக தலைவர் இல.கணேசன்
[ திங்கட்கிழமை, 15 செப்ரெம்பர் 2014, 01:43.04 AM GMT ]
அவுஸ்திரேலியாவில் நடந்த பாரதி விழாவில் உரையாற்றிய போதே இந்தியா பாஜக தலைவர்களில் ஒருவரான இல. கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வந்திருக்கும் பாரதிய ஜனதா கட்சி (BJP) இல. கணேசன் மற்றும் பாஜக குழு ஏசி முத்துக்கண்ணன் மற்றும் திரு கி.வீரமணி ராஜு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது:
பாரதியின் நிகழ்வில் அரசியல் பேசுவது உகந்தது அல்ல எனத் தெரிவித்த அவர், பாரதியின் கவிதைகள் பாடல்களில் சொல்லப்பட்டது போல இலங்கையில் என்ன நடக்கும் என்பதை மிக தெளிவாக கூறியிருந்தார்.
பாரதியின் வரிகளிலே மிக தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. இலங்கை தீவில் நடைபெற்ற சம்பவங்கள் நடைபெறப் போகின்ற சம்பவங்கள் என பாரதி மிக நன்றாக அவரின் பாடல் வரிகளில் மிக தெட்டத் தெளிவாக கூறியிருக்கிறார்.
அது போன்று இலங்கையில் வாழும் எமது ஈழத் தமிழர்கள் வாழ்வில் மிக விரைவில் மாற்றங்கள் ஏற்படும்.
பிரதமர் மோடி தனது 30 வருடகால நண்பர், அவர் இந்த ஈழத் தமிழர்கள் விடயத்தில் தனது கவனத்தில் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் உள்ள தமிழர் பண்பாட்டு கழகம் ஏற்ப்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வுக்கு அவுஸ்திரேலியா வாழ் தமிழ் சிறுமியர்கள் பாரதியின் பாடல்களும் அவரின் கவிதைகள் என பல்வேறுபட்ட விடயங்களை மிகவும் சிறந்த முறையில் பங்கேற்று நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJSZKUeq3.html
Geen opmerkingen:
Een reactie posten