[ புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2014, 02:26.49 PM GMT ]
முழங்காவில் கிருஸ்ணாநகர் பகுதியில் நாளை வடமாகாண சபையின் ஏற்பாட்டில் நிகழவிருக்கும் அடிக்கல் நாட்டு நிகழ்விற்கு வடமாகாண சபை முதல்வர், அமைச்சர்கள், த.தே.கூட்டமைப்பின் பா.உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த நிலையில் இலங்கை அரச படைகளும் ஈ.பி.டி.பி ஒட்டுக் குழுவைச் சேர்ந்த அடிவருடிகளும் ஜெயபுரம் முழங்காவில் பகுதி மக்களின் வீடுகளுக்குச் சென்று மக்களை வடமாகாண சபையின் நிகழ்விற்கு செல்லவிடாது தடுக்கும் முயற்சியில் மக்களை அச்சுறுத்தி வருவதாக தெரியவருக்கின்றது.
நாளை முழங்காவில் கிருஸ்ணா நகர் பகுதியில் வடமாகாண சபையின் நிகழ்வு நடக்கும் சம நேரத்தில் திடீரென்று சந்திப்புக்களையும் கடன் வழங்கப் போகிறோம் என்ற அறிவித்தல்களையும் செய்து வருவதாக அந்தப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றார்கள்.
கிளிநொச்சியில் இருந்து நெடுந்தொலைவுகளில் காடுகளை அண்டிய பிரதேசங்களாக இருக்கும் ஜெயபுரம், முழங்காவில் போன்ற கிராமங்களில் சர்வதேச நிறுவனங்களின் பார்வைகள் ஊடகங்களின் பார்வைகள் நேரடியாக இல்லாத நிலையை கருதிக்கொண்டு, அப்பிரதேசங்களில் காவலரங்களும் சோதனைச் சாவடிகளும் நிறுவி மிகமோசமான அடக்குமுறைகளை நேரடியாக இராணும் செய்து வருவதாக அப்பகுதி மக்கள் அச்சத்துடன் தெரிவித்து வருக்கின்றனர்.
மக்களின் அமோக வாக்குகளால் வடமாகாண சபையை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றிய நிலையில், அதை இயங்க விடாது இராணுவ ஆளுனர் சந்திரசிறி தொடக்கம் இராணுவச் சிப்பாய்கள் வரை அடக்குமுறைகளை மக்கள் மீது மேற்கொண்டு வருகின்றனர்.
வடமாகாண சபையில் பாதீடுகள் தயாரிக்கப்பட்டு அமைச்சர்களும் உறுப்பினர்களும் தமக்கு ஒதுக்கப்பட்ட நிதியை கொண்டு கிராமங்களுக்குள் வேலை செய்ய ஆரம்பித்துள்ள நிலையில், தமது கோளித்தனமான இராணுவ நிர்வாக விடயங்களில் இருந்து மக்கள் விலகிச் செல்லப் போகிறார்கள் என்ற அச்சத்தில் இராணுவம் வடமாகாண சபையால் கிராமங்களில் மக்களுக்காக மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களை மக்கள் அறிந்து தடுக்கும் நோக்கில் இராணுவமும் ஈ.பி.டி.பி ஒட்டுக்குழுவும் கிராமங்களில் மக்களை அச்சுறுத்தி வருகின்றனர்.
இதுவே தற்போது நாளை முழங்காவில் கிருஸ்ணா நகரில் வடமாகாண முதல்வரால் அடிக்கல் நாட்டு வைபவத்திற்கு மக்களை செல்லவிடாது இராணும் தடுப்பதாக தெரிவிக்கப்படுவது.
http://www.tamilwin.com/show-RUmsyJSUKUgp5.html
இராணுவத்தின் நடவடிக்கைகளை கண்காணிக்குமாறு இளைஞர்களிடம் கோரிய விக்னேஸ்வரன்? ஆங்கில ஊடகம்
[ புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2014, 02:48.21 PM GMT ]
வவுனியாவில் அண்மையில் இடம்பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் உரையாற்றும்போது அவர் இந்தக் கோரிக்கையை வெளியிட்டுள்ளதாக அவ் ஊடகம் தெரிவித்துள்ளது.
வட மாகாணத்தில் இலங்கை இராணுவத்தினரின் நடவடிக்கைகள் பற்றி கண்காணித்து தகவல்களை திரட்டுமாறு கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.
வடக்கில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கை, அவர்கள் ஆக்கிரமித்துள்ள காணியின் அளவு மற்றும் இராணுவத்தினர் ஈடுபடும் நடவடிக்கைகள் உள்ளிட்ட விபரங்களை திரட்டுமாறு கோரியுள்ளார்.
வடக்கு வாழ் மக்களின் அன்றாட நடவடிக்கைகள், ஏனைய செயற்பாடுகளை இராணுவத்தினர் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் பிராந்திய வலயத்தின் இராணுவத்தினரின் நடவடிக்கைகளை கண்காணிக்குமாறு முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எனினும் வன்முறைகளோ பிரிவினைவாதமோ உசிதமானதாக அமையாது எனவும், இவ்வாறான நடவடிக்கைகள் கடந்த காலங்களில் தோல்வியைத் தழுவியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மகா பாரதத்தில் வீர அபிமன்யூ எவ்வாறு கொல்லப்பட்டாரோ அதேபோன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை கொல்லப்பட்டதாக விக்னேஸ்வரன் ஒப்பீட்டு கூறியிருந்தார் எனவும் அவ் ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJSUKUgp6.html
Geen opmerkingen:
Een reactie posten