கோத்தாபயவின் பின்னால் ஒழிந்து கொண்டுள்ள NGO க்கள்: வன்னிப் போரில் என்ன செய்தார்கள் !
[ Sep 10, 2014 01:43:59 PM | வாசித்தோர் : 9725 ]
மனிதஉரிமை பாதுகாவலர் சுனிலா அபயசேகர நினைவுப்பேரூரையை நேற்று கொழும்பில் ஆற்றிய வேளையே அவர் இதனை தெரிவித்தார். அண்மையில் மார்கா அமைப்பும், இலங்கையின் மனித நேயஅமைப்புகளின் கூட்டமைப்பும் இணைந்து வெளியிட்ட அறிக்கை தொடர்பாகவே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். தேர்ட் நரேட்டிவ் என்ற இந்த அறிக்கை பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு புலிகளை குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
http://www.athirvu.com/newsdetail/970.htmlபுலிகளை விடவும் முஸ்லிம் கடும்போக்குவாதம் ஆபத்தானது – பொதுபலசேனா !
[ Sep 10, 2014 02:21:46 PM | வாசித்தோர் : 4110 ]
தமிழீழ விடுதலைப் புலிகளை விடவும் முஸ்லிம் கடும்போக்குவாதம் ஆபத்தானது என பொதுபல சேனா இயக்கம் தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடனான 30 ஆண்டுகால யுத்தத்தில் ஏற்பட்ட இழப்புக்களை விடவும் அதிகளவு இழப்புக்கள் முஸ்லிம் கடும்போக்குவாதத்தின் ஊடாக ஏற்படக் கூடுமென பொதுபல சேனா இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் விதாரான்தெனிய நந்த தேரர் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் முஸ்லிம் கடும்போக்குவாதம் பரவுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் கடும்போக்குவாத சக்திகள் சஹரிய சட்டத்தை அமுல்படுத்த முயற்சித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கையின் சில வங்கிகளில் சஹரிய சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் இதனை தடுத்த நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார். நாட்டில் சஹரிய சட்டத்தை அமுல்படுத்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், அசாத் சாலி, மிலிந்த மொரகொட, அலவி மௌலானா போன்றவர்கள் ஆதரவளித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/971.htmlகிழக்கில் எந்தப் பிரச்சனையும் இல்லை: ஆனால் வடக்கிற்காக 9,000 போராளிகளை இழந்தோம் !
[ Sep 10, 2014 02:32:29 PM | வாசித்தோர் : 14645 ]
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முதலைக்குடாவில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 'ஒரு கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் பொது விளையாட்டு மைதான புனரமைப்பு வேலைகள் செவ்வாய்க்கிழமை (09.09.14) ஆரம்பமாகியது. இதன்போது உரையாற்றுகையிலேயே கருணா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஆனால் இவர் ஒரு விடையத்தை மறந்து விட்டார். அது என்னவென்றால், இவர் சொல்லும் கிழக்கு மாகாணப் போராளிகள் எவரும் கருணாவுக்காக போராடவில்லையே. அவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து, தேசிய தலைவரின் வழிநடத்தலில் போராடினார்கள். இன்றுவரை வடக்கத்தையான் , கிழக்கத்தையான் என்று பிரதேசம் பேசி தமிழர்களை பிரித்து வருவது கருணா தான்.
அது தான் சிங்களத்தின் தேவையாகவும் உள்ளது. இதனையே கருணா கோட்டபாயவுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறார்.
http://www.athirvu.com/newsdetail/972.html
Geen opmerkingen:
Een reactie posten