தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 3 september 2014

படையினருக்கு எதிரான புத்தகமொன்று கிளிநொச்சி மாணவர்களுக்கு விநியோகம்!



கூட்டமைப்பின் பிரமுகர்களால் தீவகத்திற்கு மருத்துவ உபகரணங்கள் கையளிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 02 செப்ரெம்பர் 2014, 05:01.08 PM GMT ]
வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான கே.என்.விந்தன் கனகரத்தினம், அ.பரஞ்சோதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தரான ஹென்றி மகேந்திரன் ஆகியோர் இன்று யாழ் தீவுப் பகுதியில் மக்கள் சந்திப்பில் ஈடுபட்டனர்.
அங்கு நிலவும் குடிநீர்ப் பிரச்சினை, பிரதேச வைத்தியசாலைகளில் உள்ள குறைபாடுகள் தொடர்பாகவும் ஆராய்ந்தனர்.
அதனை தொடர்ந்து ஒரு லட்சம் ருபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையில் வைத்து, நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு, புங்குடுதீவு போன்ற பிரதேச வைத்தியசாலைகளுக்கு அந்தந்த பிரதேச வைத்திய அதிகாரிகளிடம் அன்பளிப்பாக வழங்கினர்.
குறித்த உபகரணங்கள் யாவும் அந்தந்த பிரதேச வைத்திய அதிகாரிகளின் விருப்பத்திற்கு அமைவாகவே கொள்வனவு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.
பொருட்கள் கொள்வனவிற்கான நிதியினை வடக்கு மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினத்தின் பாடசாலை நண்பரும் உறவினருமான லண்டனில் வசிக்கும் நலன்விரும்பி ஒருவர் மூலம் நன்கொடையாக கிடைக்கப்பெற்றது குறிப்பிடத்தக்கது.
இன்றைய உதவி வழங்கும் நிகழ்வில், வடக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டு மருத்துவ உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட வைத்திய அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக கூறும்போது,
புங்குடுதீவு, நயினாதீவு, வேலணை, மண்டைதீவு போன்ற வைத்தியசாலைகளில் தற்பொழுது குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக குறிப்பிட்டதோடு இவற்றை உடன் நிவர்த்தி செய்து தரும்படி கோரிக்கை விடுத்தனர்.
அனலைதீவு வைத்தியசாலைக்கு அவசரமாக அம்புலன்ஸ் படகு ஒன்று தேவை என கோரிக்கை விடுத்ததோடு, அனலைதீவு மருத்துவமனையிலிருந்து அனலைதீவு துறைமுகத்திற்கு நோயாளிகளை கொண்டு வருவதற்கு ஒரு முச்சக்கரவண்டி கூட இல்லை என தெரிவித்துள்ளனர்.
மேலும், நயினாதீவு வைத்தியசாலையில் இருந்த ஒரு முச்சக்கரவண்டியும் பழுதடைந்ததால் மருத்துவமனையிலிருந்து நோயாளிகளை துறைமுகத்திற்கு கொண்டுவரமுடியாமல் அவஸ்தைப்படுவதாகவும் கூறினர்.
இவற்றுக்கு பதிலளித்த வடக்கு மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம்,
உங்கள் வைத்தியசாலையின் குறைபாடுகள் அவசர தேவைகள் தொடர்பாக வடக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சர் சத்தியலிங்கம் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்படும் என தெரிவித்ததோடு, எதிர்வரும் காலங்களில் மாகாணசபை உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலமும் இக்குறைகளை தீர்க்க முடியுமென தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTWKUkr0.html
இலஞ்சத்துடன் கூடிய அரசியல் செல்வாக்கும், சாலைப் போக்குவரத்து அனுமதி பத்திரமும்! - கலங்கும் யாழ். பேரூந்து உரிமையாளர்கள்
[ செவ்வாய்க்கிழமை, 02 செப்ரெம்பர் 2014, 06:42.05 PM GMT ]
சாலைப் போக்குவரத்து அனுமதிப் பத்திரமின்றி சேவையில் ஈடுபடும் பேரூந்துக்களை பொலிஸார் வழிமறித்து சோதனை செய்யும் நடவடிக்கை தற்போது யாழ் பேரூந்து உரிமையாளர்களுக்கு பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
யாழில் இருந்து கொழும்பு செல்வதற்கென கிட்டத்தட்ட 100 பேரூந்துக்கள் சேவையில் இருப்பினும் அனைத்துக்கும்  தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட சாலைப் போக்குவரத்துக்கான அனுமதிப் பத்திரம் இல்லை. ஆனாலும் ஒரு சில பேரூந்து உரிமையாளர்கள் அவ் அனுமதிப் பத்திரத்தினை வைத்துள்ளனர்.

இவ் அனுமதிப் பத்திரத்தை அனைத்து பேரூந்து உரிமையாளர்களும் பெற்றுக்கொள்ளாமைக்கான காரணம் அரசியல் செல்வாக்கே  என பல பேரூந்து வாகன உரிமையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அரசியல் செல்வாக்கிலும், இலஞ்சம் கொடுத்தும் சாலைப் போக்குவரத்துக்கான அனுமதியினைப் பெற்ற பேரூந்துகளே தற்போது சேவையில் ஈடுபட்டு வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர். 

இவ்வாறு அனுமதிப் பத்திரமின்றி சேவையில் ஈடுபட்டுவரும் பேரூந்துக்களை கண்காணிப்பதற்காக விசேடமாக வீதிப் பாதுகாப்பு பொலிஸாரை கடமையில் அமர்த்தி கடந்த சனிக்கிழமை 6 சாரதிகளைக் கைது செய்து அவர்களுக்கு தலா 15000 ரூபா குற்றப் பணம் அறவிட்டதோடு, அனுமதிப் பத்திரமின்றி சேவையில் ஈடுபடக்கூடாதென அறிவுறுத்தி விடப்பட்டுள்ளனர்.

ஆனால் இவ்வாறான சாரதிகளுக்கு சாலைப் போக்குவரத்துக்கான அனுமதிப் பத்திரத்தினை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கொடுக்க மறுக்கின்றது. காரணம் ஏற்கனவே குறிப்பிட்ட ஒரு சில வாகன உரிமையாளர்களுக்கு மட்டும் அதாவது இலஞ்சத்துடன் அரசியல் செல்வாக்குள்ளவர்களுக்கு மட்டும் அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது என ஏனைய பேரூந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை 6 சாரதிகள் கைதானதை அடுத்து  ஏனைய சாரதிகள், ஞாயிற்றுக்கிழமை அனுமதி உள்ள பேரூந்துகளையும் செல்ல விடாது பண்ணை பேரூந்து தரிப்பிடத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். 

இதனையடுத்து நேற்று யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் அத்தியட்சகருக்கும் பேரூந்து உரிமையாளர்களுக்கும்  இடையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. அதன்போது எதிர்வரும் புதன்கிழமை வரை பொறுமையாக இருக்குமாறும் போக்குவரத்து அமைச்சருக்கு குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீர்வு கிடைக்கும் என டி.ஐ.ஜி உறுதியளித்திருந்தார்.
 
எனினும்  நேற்று இரவு தங்களையும் சேவையில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் என்று கோரியதுடன் பேரூந்து ஒன்றும் இனந்தெரியாதாவர்களால் கல்வீச்சுக்கு இலக்காகி அதில் ஒருவர் காயமடைந்த நிலையில்  போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

குறித்த நடைமுறை  தொடர்கின்ற நிலையில் இன்றும் போக்குவரத்து பொலிஸாரும் மற்றும் சாதாரண பொலிஸாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் தேவையற்றவர்களின் பிரசன்னத்தை தவிர்ப்பதற்கு கம்பி வேலியும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அனுமதிப்பத்திரம் உள்ள பேரூந்துகள் மட்டும்  தரிப்பிடத்திற்குள்  எடுக்கப்பட்டதுடன் 10 பேரூந்துகள் மாத்திரமே இன்று சேவையில் ஈடுபட்டுள்ளன.

இதேவேளை, போக்குவரத்து அமைச்சரை நாளைய தினம் சந்திக்கும்  நோக்குடன் பேரூந்து உரிமையாளர்கள் பலர் ஒன்றுகூடி  இன்று இரவு கொழும்புக்கு செல்கின்றனர் எனவும், நாளை கொழும்பில் அமைந்துள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அலுவலகம் முன்றலில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்கள் சிலர் லங்காசிறியைத் தொடர்புகொண்டு தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTWKUkr1.html
சின்ன முன்னேஸ்வரம் கோயிலின் பிரதான பூசகர் கடத்தப்பட்டார்!
[ செவ்வாய்க்கிழமை, 02 செப்ரெம்பர் 2014, 11:42.06 PM GMT ]
நீர்கொழும்பு, பிரதேசத்தில் அமைந்துள்ள சின்ன முன்னேஸ்வரம் கோயிலின் பிரதான பூசகர் மோட்டர் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களால் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் கடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்று நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு, ஆண்டி அம்பலமவில் அமைந்துள்ள புஞ்சி முன்னேஸ்வரம் கோயிலின் பிரதான பூசாரியான வர்ணகுலசூரிய கம்கானாம்லாகே மனோஜ் துலாஞசன் என்பவரே கடத்தப்பட்டவராவார்.
இது தொடர்பாக பூசாரியின் மனைவியான மல்காந்தி என்பவர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டில் மேலும் தெரிய வருவதாவது,
தேவாலய வேலைகள் முடிவடைந்தும் எங்களது இரண்டு குழந்தைகளுடன் நானும் கணவரும் எங்கள் வாகனத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தோம்.
அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடி அணிந்திருந்த நபர்கள் வாகனத்தை இடைநடுவில் வைத்து மறித்தனர். அதன்போது எனது கணவர் ( பூசகர்)  வாகனத்தின் கதவை திறந்தார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் கறுப்பு நிற உடை அணிந்திருந்தனர். அவ்விருவரும் எனது கணவனை பிடித்து வாகனத்திற்கு வெளியே இழுத்தனர். நாங்கள் கூச்சலிட்டோம். எங்களையும் அச்சுறுத்திவிட்டு தாம் வந்த மோட்டார் சைக்கிளிலேயே அவர்கள் கணவனை கடத்திச் சென்றுவிட்டனர் என்று தெரிவித்துள்ளார்.
கடத்தப்பட்ட நபருக்கு, காணி மற்றும் பணம் தொடர்பான பிரச்சினைகள் இருப்பதாகவும், விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது என்று தெரிவித்த நீர்கொழும்பு பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTWKUkr2.html
படையினருக்கு எதிரான புத்தகமொன்று கிளிநொச்சி மாணவர்களுக்கு விநியோகம்!
[ செவ்வாய்க்கிழமை, 02 செப்ரெம்பர் 2014, 11:56.54 PM GMT ]
படையினருக்கு எதிரான புத்தகமொன்று கிளிநொச்சி பாடசாலை மாணவர்களுக்கு அண்மையில் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் சங்காரம் என்ற பெயரிலான நூல் ஒன்றே இவ்வாறு பாடசாலை மாணவர்களுக்கு அதிபரினால் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மாணவர்களுக்கு நூல்களை வழங்கிய மூன்று அதிபர்களிடம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் அண்மையில் விசாரணை நடத்தியுள்ளனர்.
மதகுரு ஒருவரினால் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவ, மாணவியர் மத்தியில் படையினர் தொடர்பில் பிழையான பிரச்சாரத்தை மேற்கொள்ளும் நோக்கில் இவ்வாறு நூல் விநியோகிக்கப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிiயொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJTWKUkr3.html

Geen opmerkingen:

Een reactie posten