இது தொடர்பில் இன்று ஜெனீவாவில் ஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவை பேச்சாளர் பாபர் பொலோக் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஜூன் 9ம் திகதியன்று அடைக்கலம் கோரிய அகதிகள் விடயத்தில் ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கை ஆகஸ்ட் 15ம் திகதியன்று நீதிமன்ற தீர்ப்பால் நிறுத்தப்பட்டது.
எனினும் அது செப்டம்பர் 3ம் திகதியன்று இந்த நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி செப்டம்பர் 3ம் திகதிக்கும் 11 ஆம் திகதிக்கும் இடையில் 62 பாகிஸ்தான் அகதிகளும் 3 ஆப்கானிய அகதிகளும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர்.
இதில் 40 பேர் வரை நாடு கடத்தப்பட்டனர்.
இந்தநிலையில் ஜூன் மாதத்தில் இருந்து இன்று வரை 328 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதில் 183 பாகிஸ்தானிய, ஆப்கானிஸ்தானிய அகதிகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் 102 பேர் தடுத்து வைக்கப்படும் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கிறார்கள்.
இந்தநிலையில் அகதிகளின் உண்மை நிலைமையை உணர்ந்து அரசாங்கம் தடுத்து வைத்துள்ள அகதிகளை விடுவிக்க வேண்டும் அத்துடன் அகதிகள் பிரச்சினைக்கு தீர்வைக் காண தமது நிறுவனம் தயாராக இருப்பதாக ஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவை தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJSWKUfq1.html
Geen opmerkingen:
Een reactie posten