முதலமைச்சரின் பாதுகாப்பு தொடர்பில் முறைப்பாடு கிடைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய தினம் யாழ்.பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பில், முதலமைச்சரின் பாதுகாப்பு தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.
குறித்த விடயம் தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
அண்மையில் யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜேர்மன் நாட்டின் தூதுவரிடம் முதலமைச்சர் ஒரு குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
அதாவது, தன்னுடைய நிகழ்வுகளிற்கு வரும் புலனாய்வாளர்கள் தன்னைப் பல கோணங்களில் புகைப்படம் எடுப்பதாக கூறியிருந்தார். இதற்கு பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளையும், தன்னிச்சையாக எடுக்க முடியாது.
காரணம் என்னவென்றால், முதலமைச்சருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், முதலமைச்சரை புகைப்படம் எடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும் பலர் நினைக்கின்றார்கள். அவர்களில் யார் புலனாய்வாளர்கள் என்பதை எம்மால் அடையாளம் காண முடியாது.
மேலும் ஊடகவியலாளர்களும் புகைப்படம் எடுக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் முதலமைச்சருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அந்தவகையில் முதலமைச்சரின் குற்றச்சாட்டு தொடர்பாக தன்னிச்சையாக பொலிஸாரினால் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையில் இருக்கின்றோம்.
எனினும் தன்னுடைய பாதுகாப்பு தொடர்பில் முதலமைச்சர் பொலிஸாருக்கு முறைப்பாடு தெரிவிக்கும் பட்சத்தில் அது தொடர்பில் நடவடிக்கை எடுத்து, தற்பொழுது வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்புக்கு மேலதிகமாக பாதுகாப்பினை வழங்க முடியும் என தெரிவித்துள்ளார்.
இரண்டாம் இணைப்பு
நெடுந்தீவுக் குதிரைகள் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட கருத்துக்கள் உண்மையில்லை
யாழ்.நெடுந்தீவு பகுதியிலிருந்து சட்டத்திற்கு முரணாக காட்டு குதிரைகள் கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன தெரிவித்துள்ளார்.
தீவில் உள்ள பொலிஸ் பாதுகாப்பை மீறி குதிரைகள் கடத்தப்பட வாய்ப்பில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
மேற்படி விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நெடுந்தீவு பகுதியில் மட்டுமே காணப்படும் காட்டு குதிரைகள் தொடர்பில் அண்மையில் யாழ். பல்கலைக்கழகம் மற்றும் வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் ஆகியன இணைந்து ஒரு ஆய்வினை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது காட்டு குதிரைகள் பல, கடற்படையினரால் உல்லாச விடுதிகளுக்காக கடத்திச் செல்லப்பட்டதாக மக்கள் முறைப்பாடு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் மாகாண விவசாய மற்றும் கால்நடைகள் அமைச்சர் நெடுந்தீவுக்குச் சென்று பார்வையிட்டுள்ளதுடன், நெடுந்தீவிலிருந்து 5 குதிரைகள் டத்திச் செல்லப்பட்டு திருகோணமலையில் உள்ள உல்லாச விடுதியில் உல்லாசப் பயணிகளை கவர்வதற்காக வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் குற்றம் சாட்டியதுடன்,
மேற்படி 5 குதிரைகளும் உடனடியாக நெடுந்தீவுக்கு மீளவும் கொண்டுவரப்பட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
நெடுந்தீவில் உள்ள பொலிஸ் பாதுகாப்பினை மீறி குதிரைகளை கொண்டு செல்லும் வாய்ப்பு இருக்காது. எனவே விடயம் தொடர்பாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என்றே நாம் கருதுகிறோம்.
எனினும் கொண்டுசெல்லப்பட்டதாக கூறப்படும் குதிரைகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் நாம் நடவடிக்கை எடுப்போம்.
கொண்டுசெல்லப்பட்டவை சட்டரீதியாக கொண்டு செல்லப்பட்டிருந்தால். அது தொடர்பில் பொலிஸார் எவ்விதமான ந டவடிக்கைகளும் எடுக்க முடியாது என மேலும் கூறினார்.
புலம்பெயர் தமிழர்கள் பொய்யான முறைப்பாட்டினை அளித்து நஷ்டஈடு பெற முயற்சி- யாழ்.பொலிஸ் அத்தியட்சகர்
யாழ்.மாவட்டத்திற்கு புலம்பெயர் நாடுகளிலிருந்து விடுமுறைக் காலத்தில் வருகைதரும் வெளிநாட்டு தமிழர்கள் பலர் பொய்யான முறைப்பாடுகளை தெரிவித்து, இங்குள்ள பொலிஸாரிடமிருந்து முறைப்பாட்டு பதிவினைப் பெற்று தாங்கள் வாழும் நாட்டில் நஷ்டஈடு பெற முயற்சிப்பதாக யாழ்.பொலிஸ் அத்தியட்சகர் குற்றம் சாட்டியுள்ளார்.
அண்மையில் கோண்டாவில் பகுதியில் வீட்டை உடைத்து 200 பவுண் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்திருந்தனர்.
இதன் பின்னர் பொலிஸார் விசரணைகளை மேற்கொண்ட போது முறைப்பாட்டளர்களே, முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறினர்.
அதாவது 200 பவுண் நகைகளை எவ்வாறு விமான நிலையத்தை தாண்டி நாட்டுக்குள் கொண்டுவந்தீர்கள்? என கேட்டதற்கு இல்லையில்லை 100 பவுண்களே காணாமல்போனது, மற்றைய 100 பவுண் தாங்கள் வாழும் நாட்டில் உள்ள வீட்டில் உள்ளதாக கூறியிருக்கின்றனர்.
அதன் பின்னர் மேலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோது, அவ்வாறு நகை எதுவும் காணாமல்போகவில்லை. என்பதுடன், அவர்கள் தாங்கள் வாழும் நாட்டில் நஷ்டஈடு பெறுவதற்காக எமக்கு பொய் கூறினார்கள். என்பதனை முறைப்பாட்டளர்களே ஒத்துக் கொண்டுள்ளனர்.
இதன் பின்னர் முறைப்பாட்டாளர்களை நீதிமன்றில் சட்டத்தின் முன் நிறுத்தியிருக்கின்றோம். இவ்வாறு யாழ்.குடாநாட்டில் பல சம்பவங்கள் இடம்பெற்று விட்டன.
மேலும் வெளிநாட்டில் உள்ள தங்கள் உறவினர்களுக்கு குடியுரிமை பெறுவதற்காகவும், இங்கிருப்பவர்கள் அங்கே செல்வதற்காகவும் கூட சிலர் கடத்தல் நாடகம் செய்கின்றனர்.
பருத்தித்துறை பகுதியில் மகனை காணவில்லை என ஒருவர் பொலிஸாருக்கு முறைப்பாடு கொடுத்தார். பின்னர் நாங்கள் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்தது.
தன்னுடைய மகனை தந்தையே கடந்தி வைத்திருந்து, வெள்ளை வாகன நாடகம் நடத்தினார். என்பது. அவர்கள் எதற்காக அப்படிச் செய்தார்கள் என விசாரித்தபோது, தன்னுடைய மகனை செலவு இல்லாமல் வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதற்காக அவர் இப்படி செய்ததாக கூறியுள்ளார்.
எனவே இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் அவதானமாக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSWKUfq0.html
Geen opmerkingen:
Een reactie posten