தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 1 september 2014

கோட்டபாயவின் அடுத்த கொள்ளை என்ன தெரியுமா ?

அமெரிக்க தூதரக நீச்சல் தடாகத்தில் அல்கைடா தீவிரவாதிகள் துள்ளி விளையாடுகிறார்கள் !

[ Sep 01, 2014 06:20:35 PM | வாசித்தோர் : 8490 ]
அமெரிக்காவின் தூதரகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் அல்கைடா தீவிரவாதிகள், எகிறிக் குதிக்கும் காட்சிகள் புகைப்படமாக வெளியாகியுள்ளது. அட இது எப்படி சாத்தியம் என்று நினைப்பீர்கள் அல்லவா ? ஆம் லிபியா நாட்டில் உள்ள அல்கைடா தீவிரவாதிகள், தற்போது அன் நாட்டில் உள்ள பல நகரங்களை கைப்பற்றி வருகிறார்கள். அமெரிக்காவின் 2ம் நிலை தூதரக் ஒன்று அன் நாட்டில் உள்ளது. குறித்த நகரத்தை அவர்கள் தற்போது கைப்பற்றிவிட்டார்கள். இன் நகரம் அல்கைடாவின் கைகளில் விழும் என்று, அறிந்த அமெரிக்கார்கள் அந்த தூதரகத்தில் உள்ள அனைத்து ஆவணங்களையும் அழித்துவிட்டு அங்கிருந்து 1 மாதத்திற்கு முன்னதாகவே வெளியேறிவிட்டார்கள். அங்கே ஒரு நீச்சல் தடாகவும் இருந்ததாம்.
தற்போது அமெரிக்கவின் தூதரகத்தை கைப்பற்றியுள்ள தீவிரவாதிகள், அங்கே துள்ளிவிளையாடி வருகிறார்கள். அங்கே உள்ள நீச்சல் தடாகத்தில் அவர்கள் குதித்து விளையாடுகிறார்கள். மேல் மாடியில் இருந்து நீச்சல் குளத்தினுள் தாம் குதிக்கும்போது எடுத்த பங்களை அவர்கள் இன்ரர் நெட்டில் வெளியிட்டு, அமெரிக்காவை கடுப்பேத்தி வருகிறார்கள். இதேவேளை இந்த இயக்கத்தில் உள்ள பெண் உறுப்பினர் ஒருவர், தாமும் நீச்சல் தடாகத்தில் குதிப்பதை போட்டோ எடுத்து வெளியிட்டு பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளார். அமெரிக்காவால் என்ன தான் செய்ய முடியும் ? அப்படியே இருந்து இவர்கள் வெளியிடும் வீடியோவை வேடிக்கை தான் பார்க முடியும்.

http://www.athirvu.com/newsdetail/911.html

கோட்டபாயவின் அடுத்த கொள்ளை என்ன தெரியுமா ?

[ Sep 01, 2014 03:56:10 PM | வாசித்தோர் : 11110 ]
2009ம் ஆண்டுக்கு பின்னர், கொழும்பில் உள்ள தமிழ் வர்தகர்களை கடத்தி அவர்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை கொள்ளையடித்தது கோட்டபாயவின் கும்பல். பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு ஆட்கடத்தலிலும் ஈடுபட்டது. அது போக தற்போது மேலும் பணத்தை சம்பாதிக்க புதிய யுக்தியையும் வகுத்துள்ளார் அவர். அது என்னவென்றால் வெளிநாட்டு தமிழர்களின் இரட்டை பிரஜாவுரிமை மோகத்தை வைத்து பெரும் பணத்தை சம்பாதிப்பது ஆகும். பல்வேறு நாடுகளில் சென்று குடியேறியுள்ள ஈழத் தமிழர்கள், அன் நாடுகளின் குடியுரிமை பெற்று வெளிநாட்டு பாஸ்போட்டை வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களில் பலருக்கு இலங்கை பாஸ்போட்டையும் எடுத்துவிட வேண்டும் என்ற மோகம் உள்ளது.
இதனால் அவர்கள் இலங்கை பாஸ்போட்டையும் பெற விண்ணப்பிக்கிறார்கள். ஆனால் அது அவ்வளவு சுலபமாக கிடைப்பது இல்லை. பல ஈழத் தமிழர்களது விண்ணப்பங்கள் கிடப்பில் உள்ளது. தமது பாஸ்போட்டுக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் பலர் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஒரு விடையம் தெரியவில்லை. இதுவே சிங்களவர் ஒருவர் வெளிநாட்டு குடியுரிமை பெற்றுவிட்டு பின்னர் இலங்கை பாஸ்போட் விண்ணப்பித்தால் சில வாரங்களில் அவர்களுக்கு இலங்கை பாஸ்போட் கிடைத்து விடும். தமிழர்களின் விண்ணப்பங்களை மாத்திரமே இவ்வாறு இலங்கை அரசு கிடப்பில் போடுகிறது. இதற்கு பாதுகாப்பு அமைச்சே காரணம். இதில் நேரடியாக கோட்டபாய ராஜபக்ஷ சம்பந்தப்பட்டுள்ளார்.
தாம் விண்ணப்பித்தும் நீண்ட நாட்களாக தமது விண்ணப்பம் கிடப்பில், இருப்பதால் தமிழர்கள் இது குறித்து என்ன செய்வது என்று மற்றவர்களோடு கலந்து ஆலோசிக்கிறார்கள். இதன்போது கோட்டாவின் ஏஜண்டுகளா செயல்படும் சிலர், தம்மால் விரைவாக எடுத்து தர முடியும் என்று கூறி அதற்காக பெருந்தொகைப் பணத்தையும் பெற்றுக்கொள்கிறார்கள். இவர்களுக்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சோடு நெருங்கிய தொடர்புகள் உள்ளது. 5 லட்சம் முதல் 10 லட்சம்(5,000 பவுன்ஸ்) வரை பணம் கறக்கப்படுகிறது. சுமார் ஒரு 100 பேர் இவ்வாறு விண்ணப்பித்தால் கோட்டபாயவுக்கு எவ்வளவு கோடி கிடைக்கும் என்று எண்ணிப்பாருங்கள். வருடா வருடம் இலங்கை செல்லும் வேளை விசா பணத்தை கட்டுவதை விட இவ்வாறு பாஸ்போட்டை எடுத்தால் நல்லது என்று சிலர் தப்புக்கணக்கு போடுகிறார்கள்.
ஆனால் இவ்வாறு காசு கட்டி எடுக்கப்படும் பாஸ்போட்டுகளின் ஆயுள் காலம் குறைவாகவே உள்ளது. எனவே அவை சீக்கிரம் காலாவதியாகிவிடும். பின்னரும் நீங்கள் 10 லட்சம் கொடுக்கவேண்டி தான் வரும். எனவே இலங்கை பாஸ்போட் எடுக்கவேண்டும் என்று மோகம் கொண்ட தமிழர் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது நல்லது.
http://www.athirvu.com/newsdetail/906.html

Geen opmerkingen:

Een reactie posten