[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 03:12.36 PM GMT ]
வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தினையொட்டி ஆற்றின் ஊடான மண்பாலம் இன்று மாலை 4.00 மணிக்கு சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இப்பாலமானது ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் முறையே 2012.2013. என்றவாறாக இம்முறையும் மிகவும் சிறப்பான முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டு சந்நதியான் அடியவர்களின் சிரமங்களை தணிக்கும் வகையில் நடைபாதைப் போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டுள்ளது.
இப்பாலமானது 30 வருடங்களுக்கு முன்னதாக வருடாந்த உற்சவத்தையொட்டி வருடாவருடம் அமைக்கப்பட்டு வருவது வழமையானதாகும்.
குறித்த பாலமானது வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் எல்லைக்குள் காணப்படுகின்ற காரணத்தினால் குறித்த பாலத்தினை வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் ஊழியர் நலன்புரிச்சங்கம் பலதரப்பட்டவர்களின் ஒத்துழைப்புடன் 2012 ம் ஆண்டில் இருந்து அமைத்து அடியவர்களின் இலகுபயணத்தை செவ்வனே நிறைவேற்றி வருகின்றனர்.
கடந்த வருடங்களில் மண்பாலம் அமைக்கும் போது பற்பல இடர்களை சபையின் ஊழியர் நலன்புரிச்சங்கம் எதிர்நோக்கியிருந்தது. அரசியல் ஆதாயம் தேடும் ஒரு சில குழுக்களினாலேயே பல தடைகள் ஏற்படுத்தப்பட்டன.
குறிப்பாக நன்னீர்த் திட்டத்துக்காக அமைக்கப்பட்ட உவர்நீர்த் தடுப்பணையை திறந்து விடல், பொலிஸ் நிலையங்களில் தேவையற்ற அநாவசியமான முறைப்பாடுகளை செய்தல் போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளை கடந்த காலங்களில் முடுக்கிவிட்டிருந்தனர்.
ஆனால் சந்நிதியான் தோற்றுப் போகமாட்டான் என்பதை இத்தகைய தீய சக்திகள் உணரத் தலைப்படாமை அவர்களின் முட்டாள்தனத்தையே வெளிப்படுத்தியுள்ளது.
இம்முறை வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையினால் சந்நிதியானுக்கு மண்பாலம் அமைப்பது தொடர்பில் பல இழுபறிகள் நடந்தேறியுள்ளன.
இறுதியாக தவிசாளரால் விசேட கூட்டம் 28.08.2014 கூட்டப்பட்டிருந்தது. அக் கூடடத்தில் எதிர்க்கட்சியான ஈ.பி.டி.பி கூட்டம் ஆரம்பிக்கும் ஒருசில மணித்துளிகளுக்கு முன்பாக சபையில் இருந்து வெளியேறியிருந்தது.
அதனையடுத்து எஞ்சிய உறுப்பினர்களின் முழு ஒத்துழைப்புடன் சபை நடவடிக்கைகள் திருப்திகரமாக முன்னெடுக்கப்பட்டு சந்நிதியானுக்கு மண்பாலம் அமைப்பது தொடர்பில் உறுதியான முடிவு எட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து முழுவீச்சில் பாலம் அமைக்கும் பணிகள் ஆரம்பமாகின.
அதன் போது சகித்துக் கொள்ள முடியாதவர்களினால் வல்வெட்டித்துறை பொலிஸார் மூலம் தடைகள் ஏற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து வடமாகாணசபை உறுப்பினரூடாக (க.சர்வேஸ்வரன்) அரச அதிபரின் கவனத்திற்கு குறித்த விடயம் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து நிலைமை சீராக்கப்பட்டு துரித கதியில் தற்போதைய தவிசாளர், முன்னாள் தவிசாளர், சபை உறுப்பினர்கள் ஊழியர்கள், இராணுவத்தினர், பொதுமக்கள், வாசிகசாலை மன்ற உறுப்பினர்கள், எனப் பலரின் அயராத உழைப்பினால் வெற்றிகரமாக மண்பாலம் திறக்கப்பட்டுள்ளது.
இன்றைய மண்பாலம் திறக்கும் நிகழ்வில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் க.துரைசிங்கம், முன்னாள் தவிசாளர் அ.உதயகுமார், பிரதேசசபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரும், வட மாகாணசபை உறுப்பினர் க.சர்வேஸ்வரன அவர்களும், அக்கரை இராணுவ முகாம் மேஜர் தர அதிகாரி ஆகியோரும் பிரதேசசபையின் ஊழியர்கள், பொதுமக்கள், இராணுவத்தினர் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTVKUlwy.html
புதிய ஆணையாளருடன் இணைந்து பணியாற்ற இலங்கை விருப்பம்
[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 03:32.45 PM GMT ]
இன்று கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், புதிய ஆணையாளரை இலங்கைக்கு அழைப்பது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு தீர்மானிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை பக்கச்சார்பாக முடிவுகளை எடுத்திருப்பதாக குற்றம் சாட்டிய அமைச்சர், புதிய ஆணையாளர் அவ்வாறு நடந்து கொள்ளமாட்டார் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த 6 வருடங்களாக ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளராக பணியாற்றி வந்த நவநீதம்பிள்ளை நேற்று பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.
இதனையடுத்து, புதிய ஆணையாளராக ஜோர்தான் நாட்டின் இளைவரசர் சையத் அல் ஹுசைன் தனது பணிகளை இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTVKUlwz.html
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் யாழ்ப்பாணம் சென்றார்
[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 03:51.15 PM GMT ]
இதன்போது அவர் முகமாலையில் நிலக்கண்ணி அகற்றல் நடவடிக்கைகளை பார்வையிட்டார்.
இந்த நிலக்கண்ணி அகற்றல் நடவடிக்கைகள் பிரித்தானிய அரசாங்கத்தின் உதவியுடனேயே இடம்பெற்று வருகிறது.
இதன்போது கருத்துரைத்த ரங்கீன், வடக்கின் நிலக்கண்ணி வெடி அகற்றல் நடவடிக்கைகளில் நீண்ட காலமாக பிரித்தானியா செயற்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார்.
2010 முதல் 2014ஆம் ஆண்டுகளுக்காக மாத்திரம் தமது நாடு நிலக்கண்ணி வெடி அகற்றல் நடவடிக்கைளுக்காக 3.5 மில்லியன் பவுண்ஸ்களை வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அடுத்த 18 மாதங்களுக்காக 1.6 மில்லியன் பவுண்ஸ்களை பிரித்தானியா வழங்கவுள்ளதாகவும் ரங்கீன் தெரிவித்தார்.
ஹலோ ட்ரஸ்ட் நிறுவனமே பிரித்தானிய ஆதரவுடன் நிலக்கண்ணி வெடி அகற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இ;ந்த விஜயத்தின் போது உயர்ஸ்தானிகர் தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனையும் சந்தித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTVKUlw0.html
Geen opmerkingen:
Een reactie posten