சிங்களத்தின் கடும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இலங்கையில் இருந்து சென்றார் கஜேந்திரகுமார் !
[ Sep 26, 2014 01:12:57 PM | வாசித்தோர் : 3425 ]
கடந்த மார்ச் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் விளக்க அறிக்கையின் தொடர்ச்சியாக இந்த அறிக்கை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழின அடையாளத்தை அழிக்கும் நோக்கத்தோடு, ஆட்சியமைத்த சிறிலங்கா அரசுகள் செயல்பட்டு இருக்கின்றன. அந்தவகையில் தமிழ் என்ற அடையாளத்தை அழிக்கும் நோக்கத்தோடு தான் செயற்பாடுகள் அமைந்திருந்தன என கூட்டிக்காட்டப்படவில்லை என அறிக்கையில் பதிவு செய்யவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/1083.htmlமியான்மாரில் உள்ள புத்த பிக்குவை அழைத்து முஸ்லீம்களை தாக்க ஆலோசனை ?
[ Sep 26, 2014 01:24:06 PM | வாசித்தோர் : 1690 ]
மகிந்த ராஜபக்சவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்ட அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. மியன்மாரில் முஸ்லீம்களுக்கு பெரும் வன்முறைகளை தூண்டிவிட்ட குறிப்பிட்ட மதகுரு இலங்கை வருவது இலங்கையின் சமாதான சகவாழ்விற்க்கு ஆபத்தாக அமையும் என குறிப்பிட்ட கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இஸ்லாமின் வளர்ச்சி பௌத்தத்திற்க்கும் மியன்மார் கலாச்சாரத்திற்க்கும் ஆபத்தான விடயம் என்ற தீவிர பிரச்சாரம் மூலமாக அந்த நாட்டின் முஸ்லீம் சிறுபான்மையினரின் மீது வன்முறைகளை தூண்டிவிட்டவர் விராது என சர்வதேச அளவில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அவரது பிரசன்னம் முஸ்லீம்களுக்கு எதிராக மேலும் வன்முறைகளை தூண்டலாம், அளுத்தகமவில் ஞானசாராதேரரின் உரை ஏற்படுத்திய விளைவுகளை இது ஏற்படுத்தலாம். குறிப்பிட்ட தேரரிற்க்கு விசா வழங்கப்பட்டால் இலங்கையில் சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிராக வெறுப்புணர்வு பிரச்சாரத்திற்க்கு இலங்கை அரசாங்கத்திற்க்கு தொடர்பிருப்பதாக மேலும் குற்றச்சாட்டு எழலாம் என அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அசின் விராது பௌத்த தேரர் இலங்கை விஜயம் செய்வதற்கு முஸ்லிம் அமைப்புக்கள் எதிர்ப்பு மியன்மாரின் கடும்போக்கு பௌத்த அமைப்பின் தலைவராக கருதப்படும் அசின் விராது பௌத்த தேரர் இலங்கை விஜயம் செய்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை முஸ்லிம் பேரவை தெரிவித்துள்ளது. 969 என்ற பௌத்த கடும்போக்கு அமைப்பின் தலைவரான விராது தேரரை டைம்ஸ் சஞ்சிகை பௌத்த பயங்கரவாதி என அடையாளப்படுத்தி அட்டைப்படத்தில் புகைப்படமொன்றை வெளியிட்டிருந்தது. எதிர்வரும் 28ம் திகதி பொதுபல சேனா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாட்டில் விராது தேரர் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. பொதுபல சேனா அமைப்பின் அழைப்பிற்குஅமைய இவ்வாறு விராது தேரர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
எனினும், விராது தேரரின் இலங்கை விஜயம் நாட்டின் இன நல்லிணக்கம் மற்றும் மத சகாவாழ்வினை பாதிக்கும் எனத் தெரிவித்து முஸ்லிம் பேரவை, ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. மியன்மாரில் அப்பாவி முஸ்லிம் மக்களுக்கு எதிராக பௌத்த மக்களை தூண்டி பாரியளவில் வன்முறைகள் இடம்பெறுவதற்கும் முஸ்லிம்கள் இழப்புக்களை எதிக்நோக்கவும் விராது தேரர் பின்புலத்தை ஏற்படுத்திக் கொடுத்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. விராது தேரரின் இலங்கை விஜயமும் மாநாட்டில் ஆற்றவுள்ள உரையும் மேலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை தூண்டக் கூடிய வகையில் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விராது தேரரின் விஜயத்திற்கு அரசாங்கம் அனுமதியளித்தால் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் கடும்போக்குவாத அமைப்பிற்கு ஆதரவாகவும் அரசாங்கம் செயற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழக் கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன.
சில மாதங்களுக்கு முன்னதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் மியன்மாருக்கு விஜயம்செய்தது முதல், விராது தேரரின் 969 அமைப்பிற்கும் பொதுபல சேனாவிற்கும் இடையிலான உறவுகள் வலுப்பெற்றுள்ளன. மியன்மாரி விராது தேரர் நாட்டுக்குள் பிரவேசிக்க வீசா வழங்குவதனை ஜனாதிபதி தடுத்து நிறுத்த வேண்டுமென இலங்கை முஸ்லிம் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
http://www.athirvu.com/newsdetail/1084.html
Geen opmerkingen:
Een reactie posten