தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 26 september 2014

ஐஎஸ்ஐ உளவாளிகளான இலங்கையர்களின் விளக்கமறியல் நீடிப்பு (செய்தித் துளிகள்)

ஆப்கான் புதிய ஜனாதிபதியை வாழ்த்திய மகிந்த
[ வெள்ளிக்கிழமை, 26 செப்ரெம்பர் 2014, 01:28.04 PM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய மக்கள் குடியரசின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கலாநிதி அஷ்ரப் கானி அஹமட்சாய்க்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதி தனது பதவிக்காலத்தை வெற்றிகரமான முறையில் பூர்த்தி செய்ய வேண்டும் என பிரார்த்தித்துள்ள ஜனாதிபதி, இலங்கை அரசும் மக்களும் வாழ்த்துக் கூறுவதில் தன்னுடன் இணைந்து கொள்வதாக கூறியுள்ளார்.
“நீங்கள் அரசியல், பொருளாதார துறைகளில் பெரும் அறிகை கொண்டவர்.
ஆப்கானிஸ்தானில் ஸ்திர நிலைமையை ஏற்படுத்தும் செயற்பாடுகளுடன் உங்களது நீண்டகால தொடர்புகள் மற்றும் ஜனநாயகத்திற்கான உங்களது அர்ப்பணிப்பு என்பன உங்களது நாட்டின் வரலாற்றின் இந்த முக்கியமான தருணத்தில் நாட்டிற்கு மகந்தான ஒன்றாக அமையும் என்பது திண்ணம்” என ஜனாதிபதி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
சார்க் அமைப்பு உட்பட சா்வதேச மேடைகளில் இலங்கையும் ஆப்கானிஸ்தானும் ஒன்றிணைந்து பணியாற்றுவது அண்மைய காலத்தில் அதிகரித்துள்ளது.
ஆப்கானிஸ்தானுடனான உறவுகளை மேலும் விரிவுபடுத்த அந்நாட்டின் புதிய ஜனாதிபதியுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJRaKVit1.html
ஐஎஸ்ஐ உளவாளிகளான இலங்கையர்களின் விளக்கமறியல் நீடிப்பு (செய்தித் துளிகள்)
[ வெள்ளிக்கிழமை, 26 செப்ரெம்பர் 2014, 01:37.28 PM GMT ]
பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ இற்காக செயற்பட்டபோது கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கையர்கள் உட்பட்ட ஐந்து பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
அருண் செல்வராஜா, சகீர் ஹுசைன், சிவபாலன், மொஹமட் சலீம் மற்றும் ரபீக் ஆகியோர் நேற்று பூந்தமல்லி விசேட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் புழல் சிறையில் அவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.
ஏற்கனவே அருண் செல்வராஜாவை தேசிய புலனாய்வு பிரிவினர் ஆறு நாட்களாக விசாரணை செய்தனர். தற்போது அவர் மேலும் அவரை விசாரணை செய்ய திட்டம் வகுத்துள்ளனர்.
எனினும் தமது நடவடிக்கை குறித்து அவர்கள் தகவல்களை வெளியிடவில்லை.
இதேவேளை இந்து முக்கியஸ்தர்களின் கொலைகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் நேற்று விசேட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு அவர்களின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டது.
மின்னேரிய காட்டில் சிக்கிய இந்தியர்கள்! கடும் பிரயத்தனத்தில் மீட்பு
மின்னேரிய வனாந்திரத்தினுள் சுற்றுலா மேற்கொண்டிருந்த நான்கு இந்தியா்கள் வழிதவறியதால் காட்டுக்குள் சிக்கிக் கொண்டுள்ளனர்.
இலங்கையில் சுற்றுலா மேற்கொண்டுள்ள இந்தியக் குடும்பம் ஒன்று தனியாக ஜீப் வண்டியொன்றை வாடகைக்கு அமர்த்தி, மின்னேரியக் காட்டினுள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்கள் தங்களுடன் ஒரு கைக்குழந்தையையும் கூட்டிச் செனறுள்ளனர்.
தற்போது நாட்டில் நிலவும் பலத்த மழை கொண்ட வானிலை காரணமாக இவர்கள் வழி தப்பி ஒருநாள் முழுவதும் மின்னேரியக் காட்டினுள் சிக்கிக் கொண்டுள்ளனர். பின்னர் இது குறித்து தங்கள் தங்கியிருந்த ஹோட்டல் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு விபரம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இன்று காலை பலத்த மழைக்கு மத்தியிலும் வனப்பாதுகாவல் துறையினர் மற்றும் ராணுவத்தினர் இணைந்து இவர்களை மீட்டுள்ளனர்.
இதனையடுத்து இந்தியக் குடும்பத்தினர் தங்கள் சுற்றுலாவை இடைநடுவில் கைவிட்டு நாடு திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிங்கப்பூரிலிருந்து தங்கக் கட்டிகளைக் கடத்தி வந்தவர் கைது
நாற்பத்தி ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான தங்கக் கட்டிகளை கடத்தி வந்த கொழும்பைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை நேற்றிரவு சுங்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தில் மின்சார கருவிகளை விற்பனை செய்யும் வர்த்தகமொன்றைக் கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் சிங்கப்பூர் சென்று திரும்பிய இவர், தான் எடுத்து வந்திருந்த 30 ஆயிரம் ரூபா பெறுமதியான எல்.இ.டி. மின் விளக்குகளுக்கு சுங்க வரியைக் கட்டிவிட்டு வெளியேறிச் செல்ல முயன்றுள்ளார்.
எனினும் அவரது பயணம் மற்றும் எடுத்து வந்துள்ள பொருட்கள் தொடர்பில் சந்தேகம் கொண்ட சுங்கத்துறையினர், அவரை கடுமையாக விசாரித்துள்ளனர்.
இறுதியாக அவரை எக்ஸ்ரே பரிசோதனைக்கு உட்படுத்த முயன்றபோதே அவர் தனது ஆசனவாய் பகுதியில் மறைத்து வைத்திருந்த ஒன்பது தங்கக் கட்டிகளை வெளியே எடுத்துள்ளார்.
இவை சுமார் 900 கிராம் எடை கொண்டவை என்று தெரிவிக்கப்படுகின்றது. இவற்றின் சந்தை மதிப்பு சுமார் 45 லட்சம் ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை மீனவர்கள் 5 பேர் இந்திய கடற்படையினரால் கைது
இந்திய பொருளாதார வலயத்;தில் மீன்பிடித்த குற்றத்துக்காக 5 இலங்கை மீனவர்கள் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய கரையோர கப்பலான ஐசிஜிஎஸ் சாரங் கப்பலால் மாமல்லபுரத்தில் இருந்து 80 மைல்கல்லுக்கு அப்பால் உள்ள கடலில் வைத்து இவர்கள் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டனர்.
இதன்போது குறித்த மீனவர்களின் படகில் இருந்து 1000 கிலோ மீன்கள் கைப்பற்றப்பட்டன. இதேவேளை குறித்த 5 பேரும் இன்று தமிழக பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டனர்.
இந்த வருடத்தில் மாத்திரம் இலங்கை மீனவர்கள் 181பேர் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJRaKVit2.html

Geen opmerkingen:

Een reactie posten