தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 11 september 2014

வடக்கு மக்களை கண்காணிக்கவில்லை: விக்கியின் குற்றச்சாட்டை மறுத்த இராணுவம்

வடக்கு, கிழக்கில் வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கை, சூழல் உட்பட சகலவற்றையும் கண்காணித்து வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு பொய்யானது என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையை இலங்கை இராணுவம், இஸ்ரேல் தொழிற்நுட்ப புலனாய்வு சேவையின் மூலம் கண்காணித்து வருவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியிருந்தார்.
கடந்த ஞாயிறுக்கிழமை நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியிருந்தார்.
வடக்கு, கிழக்கில் வாழும் மக்களின் நடத்தை, பழக்க வழக்கங்கள் உட்பட சகலவற்றையும் இராணுவம் கண்காணித்து வருகிறது.
இது பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதாகவும் இவ்வாறு புலனாய்வு செய்து அந்த தகவல்களை அரசாங்கத்திற்கு வழங்கி வருவதாகவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் வடக்கில் இருக்கும் இராணுவத்தினரின் எண்ணிக்கை ஆராயுமாறும் அவர்கள் வடக்கில் ஈடுபட்டு வரும் பணிகள் குறித்து தேடிப்பார்த்து அது பற்றி தனக்கு அறிய தருமாறும் விக்னேஸ்வரன் தமிழ் இளைஞர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இராணுவப் பேச்சாளர்,
வடக்கு பிரதேசத்தின் பாதுகாப்புக்காக பொலிஸ் நிலையங்கள் இருப்பதாகவும் முதலமைச்சரின் பாதுகாப்புக்காகவோ, அவர் சென்று வரும் இடங்கள் பற்றி தேடவோ இராணுவத்தினர் இரகசியமாகவோ அல்லது பகிரங்கமாவோ ஈடுபடுத்தப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
அரச புலனாய்வாளர்கள், தன்னை பின் தொடர்வதுடன் புகைப்படங்களை எடுத்து, தகவல்களை திரட்டி வருவதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.
எனினும் அப்படியான எந்த தேவையும் இராணுவத்திற்கு இல்லை என இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSVKUgt3.html

Geen opmerkingen:

Een reactie posten