கிளிநொச்சி, தர்மபுரம் பிரதேசத்தின் புளியம்பொக்கனை பகுதியில் இந்த வருடம் மார்ச் மாதம் 13 ஆம் திகதி பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து விட்டு தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர், அங்கிருந்த வீடொன்றில் இருந்து தப்பியோடியதாக கூறி அந்த வீட்டில் இருந்த பெண்ணொருவர் மற்றும் அவரது 14 வயது மகளும் கைது செய்யப்பட்டனர்.
தமது பிள்ளைகள் இராணுவத்தினரால் காணாமல் போக செய்யப்பட்ட காரணத்தினால், அவர்களை தேடி தருமாறு கோரி வடக்கில் மாத்திரமல்ல தென் பகுதியில் நடைபெற்ற காணாமல் போனவர்கள் சம்பந்தமான சகல ஆர்ப்பாடங்களிலும் கலந்து கொண்ட பாலேந்திரன் ஜெயக்குமாரி மற்றும் அவரது மகளான விபூஷிகா ஆகியோரே இந்த சம்பவத்தை எதிர்நோக்கினர்.
விடுதலைப் புலிகளுக்கு மீண்டும் உயிரூட்ட முயற்சித்த கோபி என்பவருக்கு தமது வீட்டில் பாதுகாப்பு வழங்கியமை மற்றும் ஆர்ப்பாட்டங்களில் தொடர்ந்தும் கலந்து கொண்டமையே இவர்கள் கைது செய்யப்படுவதற்கான காரணம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தி தெரிவித்திருந்தார்.
இதன் பின்னர், மிகவும் இரகசியமான இராணுவ நடவடிக்கை ஒன்றில் கோபி என்பவர் கொல்லப்பட்டார். இந்த இராணுவ நடவடிக்கையில் இராணுவத்தில் பணியாற்றிய குருணாகல் பிரதேசத்தை சேர்ந்த தமிழர் பங்குபற்றியிருந்தார்.
எவ்வாறாயினும், கோபி கைது செய்யப்பட்டமை, ரகசியங்கள் கண்டறியப்பட்டமை, கொலை செய்யப்பட்டமை என தொடர்க்கதை செய்தியாக இருந்தன.
எனினும் இந்தச் சம்பவத்தின் முக்கிய நபர்களான கோபியின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகஸ்தர் மற்றும் கோபியுடன் ஆயுதங்களை காண்பிக்க சென்று கொல்லப்பட்ட இராணுவத்தை சேர்ந்த தமிழர் ஆகிய பாத்திரங்கள் மறைக்கப்பட்ட ரகசியமான கதாபாத்திரங்களாக உள்ளன.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகஸ்தர் குறித்து எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்திருந்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன, அவர் இருப்பதாகவும் அவர் இருக்கும் இடம் மற்றும் அவர் சம்பந்தமான விடயங்களை வெளியிட முடியாது எனக் கூறியிருந்தார்.
இதனடிப்படையில், குறித்த கொலை சம்பவங்களின் பின்னணியில் வேறு கதைகள் இருப்பதாக கடந்த காலத்தில் அவ்வப்போது இது பேசப்பட்டு வந்ததது.
எது எப்படி இருந்தாலும் இந்த சம்பவங்களின் பொறியாக மாற்றப்பட்டுள்ள ஜெயக்குமாரி வேறுவிதமான வகையில் பாதிக்கப்பட்ட பெண்ணாவார்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படாமல் அவர் பூசா முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு நேரும் உடல் ரீதியான துன்பங்கள் சம்பந்தமாக பல்வேறு தரப்பினர் தகவல்களை வெளியிட்டாலும் அது பற்றி கேள்வி எழுப்புவது வரையறுக்கப்பட்டுள்ளது.
ஜெயக்குமாரி பெரும் துயரங்களை அனுபவித்து வந்தாலும் அதற்கு எதிராக அவருக்கோ, மனித உரிமை ஆர்வலர்களுக்கோ செயற்படும் இயலுமை இல்லை. சகலரும் துப்பாக்கியின் அதிகாரத்திற்குள் அடக்கப்பட்டுள்ளனர்.
ஜெயக்குமாரிக்கு தனது இளம் வயது மகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய அத்தியாவசியமான காலம் அவருக்கு இல்லாமல் போயுள்ளது. விபூஷிகா 14 வயதே ஆன சிறுமி.
இந்த சிறுமி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவரை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும் இந்த சிறுமியை பொறுப்பேற்க உறவினர்கள் எவரும் இருக்கவில்லை.
இதனால், சிறுவர் காப்பகம் ஒன்றிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். அந்த காப்பகம் கூட ஒரு வகையில் தடுப்பு முகாம்தான்.
ஜெயக்குமாரியின் மூத்த மகன் மற்றும் விபூசிகாவின் சகோதரன் இராணுவத்தினரால் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் போக செய்யப்பட்டதன் காரணமாக அவரை தேடி தருமாறு வீதி வீதியாக புகைப்படத்தை தாங்கியவாறு ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டதால் இவர்கள் இப்பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர்.
ஒரு தாய் மற்றும் மகளின் ஆர்ப்பாட்டங்கள் இந்தளவு பலமானது எப்படி என்பது சாதாரண மக்களுக்கு கேள்வியாக இருந்தலும் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் அது பாரதூரமான தலையிடியாக இருந்தது.
தாம் கடத்தி காணாமல் போக செய்தவரை எப்படி திருப்பி தருவது என்பது அரசாங்கத்திற்கு ஒரு பிரச்சினையாக இருந்தாலும் இவர்களின் துயரத்தால் சர்வதேசம் குழப்பமடைந்திருந்தமை இன்னுமொரு காரணமாக இருந்தது.
இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் வந்திருந்ததுடன் இந்த தாயும் மகளும் அவரிடம் தமது துயரத்தை தெரியப்படுத்தினர்.
இது பாதுகாப்பு அமைச்சுக்கு பேரிடியாக இருந்தது. இவர்களை அமைதிப்படுத்த பாதுகாப்பு தரப்பினர் ஏற்கனவே மேற்கொண்டிருந்த திட்டத்திற்கு அமைய இவர்களுக்கு எதிரான பொறி வைக்கப்பட்டது.
ஜெயக்குமாரியை கைது செய்ததன் மூலம் அரசாங்கம் காணாமல் போனவர்களின் உறவினர்களின் ஆர்ப்பாட்டங்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தது. இது அரசாங்கம் எதிர்பார்த்த முடிவு.
ஆனால், அரசாங்கம் ஜெயக்குமாரி போன்றவர்களை கைது செய்து சிறையில் அடைத்து சித்திரவதைகளை மேற்கொண்டு வடக்கில் பிள்ளைகள் இல்லாத பெற்றோரின் கண்ணீரை மறைக்க முயற்சிப்பதானது வடக்கில் சிவில் நிர்வாகத்தில் யுத்த சூழல் இன்னும் இருக்கின்றது என்பதை உலகத்திற்கு எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.

Geen opmerkingen:
Een reactie posten