[ ஞாயிற்றுக்கிழமை, 07 செப்ரெம்பர் 2014, 02:05.00 PM GMT ]
இலங்கையில் பிரயோகிக்கப்பட்டு வரும் அழுத்தங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐ.நா மனித உரிமைச்சபை புதிய ஆணையாளரது கருத்தினையும் கோடிட்டுக்காட்டி, ஐ.நாவின் அனைத்துலக விசாரணையின் சாட்சியங்களது பாதுகாப்பு தொடர்பில் கூடிய கவனம் செலுத்துமாறு, இலங்கையைச் சென்றடைந்துள்ள ஜப்பானியா பிரதமர் சின்சோ அபே அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இதேவேளை முன்னேஸ்வரம் பத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த வேள்வித் திருவிழாவுக்கு உள்ளூர் அரசசெயலகத்திடம் அனுமதிபெற வேண்டுமென்ற விவகாரம், மற்றும் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி வலி.வடக்கு மக்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டுப் பிரார்த்தனை இரண்டாவது தடவையாக சிறிலங்கா புலனாய்வாளர்களால் நிறுத்தப்பட்ட விவகாரம் ஆகியன தொடர்பிலும், ஐ.நா மனித உரிமைச்சபையின் மத வழிபாட்டு சுதந்திரத்துக்கான சிறப்பு பிரதிநிதி Heiner Bielefeldt கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.
http://www.tamilwin.com/show-RUmsyJTbKUiv1.html
தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 4 பேர் கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 07 செப்ரெம்பர் 2014, 02:33.22 PM GMT ]
தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் தேர்த் திருவிழா நேற்று இடம்பெற்றது.
இதன்போது, ஆலயத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் குறித்த நால்வரும் சுற்றித் திரிந்துள்ளனர்.
இதனை அவதானித்த பொலிஸார், அவர்களின் பின்னால் சென்றவேளை, குறித்த 4 பேரும் சனநெருக்கம் கொண்ட இடங்களை நோக்கி சென்றுள்ளனர்.
இந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் நால்வரையும் பிடித்து விசாரணை செய்துள்ளனர்.
அனைவரும் முன்னுக்கு பின்னான முரணான கருத்துக்களை வழங்கியுள்ளனர். இதனையடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டதாக தெல்லிப்பழைப் பொலிஸார் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTbKUiv3.html
ஜப்பான் வங்கிக்கும் இலங்கை முதலீட்டு சபைக்கும் இடையில் உடன்படிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 07 செப்ரெம்பர் 2014, 02:47.50 PM GMT ]
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இன்று பிற்பகல் விசேட விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று அவரை வரவேற்றனர்.
கட்டுநாயக்க வானூர்தி தளத்தின் இரண்டாவது பயணிகளுக்கான கட்டமைப்பை திறந்து வைக்கும் நிகழ்விலும் ஜப்பான் பிரதமர் கலந்து கொண்டார்.
இதனிடையே, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடையில் இருதரப்பு கலந்துரையாடல் ஒன்றும் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, குறித்த கட்டமைப்பின் மாதிரி கட்டமைப்பை ஜனாதிபதியும், ஜப்பான் பிரதமரும் பார்வையிட்டனர்.
நாடாளுமன்ற கட்டிடத்திற்கு விஜயம் செய்த ஜப்பான் பிரதமர், ஆங்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதனையடுத்து கொழும்பில் பிரதான விருந்தகமொன்றில் நடைபெறும் ஜப்பான் - இலங்கை வர்த்தக சந்திப்பு ஒன்றிலும் கலந்துகொண்டார்.
இலங்கை முதலீட்டு சபை மற்றும் ஜப்பான் மிஷுஹோ வங்கிக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையும், ஜப்பான் பிரதமரின் விஜயத்தின் ஒரு கட்டமாக கைச்சாத்திடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJTbKUiv4.html
படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த காணி உரிமையாளரிடம் கையளிப்பு - மட்டக்களப்பில் மினி சூறாவளி
[ ஞாயிற்றுக்கிழமை, 07 செப்ரெம்பர் 2014, 03:19.50 PM GMT ]
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஓந்தாச்சிமடத்தில் படையினரின் முகாம் அமைக்கப்பட்டிருந்த காணியின் ஒரு பகுதி உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஓந்தாச்சிமடத்தில் உள்ள 18வது சிங்கபாகு படைப் பிரிவின் அலுவலகத்தில், முகாம் பொறுப்பதிகாரி மேஜர் சமன் பெரேரா தலைமையில் இன்று இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன்போது, படைமுகாம் அமைந்திருந்த காணி உரிமையாரான திருமதி இராசமலர் சற்குணானந்ததின் குடும்பத்தினரிடம் காணிக்குரிய ஆவணம் கையளிக்கப்பட்டுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய, கிழக்கு மாகாண கட்டளையிடும் அதிகாரி மேஜர் ஜெனரல் லால் பெரேராவின் வழிகாட்டலில் பொதுமக்களின் காணிகளைக் கையளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதேவேளை, களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் இருந்த பிரதான படைமுகாம் மற்றும் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட வெல்லாவெளியில் அமைந்திருந்த படைமுகாம் என்பன அகற்றப்பட்டுள்ளன.
மட்டு.சின்னவத்தை பகுதியில் சுழல் காற்றினால் ஆலயம் மற்றும் ஒன்பது வீடுகள் சேதம்
மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட சின்னவத்தைப் பகுதியில் இன்று வீசிய சுழல் காற்று காரணமாக ஒன்பது வீடுகள் தேமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 5.00 மணியளவில் சின்னவத்தையின் பல பகுதிகளிலும் சுழல் காற்று வீசியதாகவும் இதன்போது ஆலயம் ஒன்றும் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழு வீடுகள் கடும் சேதங்களுக்குள்ளாகியுள்ளதுடன் இரு வீடுகள் சிறு சேதங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் கிராம சேவையாளர் மற்றும் பிரதேச செயலாளரின் கவனத்துக்கு கொண்டுசென்றுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmsyJTbKUiv6.html
Geen opmerkingen:
Een reactie posten