[ திங்கட்கிழமை, 08 செப்ரெம்பர் 2014, 06:53.36 AM GMT ]
பதுளையில் இரண்டு தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மேளனக் கூட்டத்தில் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சஜித் பிரேமதாஸ மற்றும் ஊவா முதலமைச்சர் வேட்பாளர் ஹரின் பெர்ணான்டோ ஆகியோர் ஒரே மேடையில் அமர்ந்திருந்தமையை கண்ட பின்னரே தயாசிறி தமது ஒரு காதை வெட்டிக் கொண்டதாக காட்டும் படங்கள் சமூக இணையங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
அதில் முதலமைச்சர் ஜெயசேகர தமது காதில் கட்டுப்போட்டிருப்பதை போன்ற காட்சி காட்டப்பட்டுள்ளது, இது மின்னஞ்சல்களிலும் அனுப்பப்பட்டுள்ளது.
எனினும் இது போலியான படங்கள் என்று முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே சஜித் பிரேமதாஸ ஹரின் பெர்ணான்டோவின் பிரசார மேடையில் தோன்றினால் தமது காதை வெட்டிக் கொள்வதாக தயாசிறி ஜெயசேகர சவால் விடுத்திருந்தார்.
இந்நிலையில் மேடையில் சஜித்தும் ஹரினும் ஒன்றாக தோன்றியமையானது கட்சியின் சம்மேளனக் கூட்டத்தில் மாத்திரமே என்று முதலமைச்சரின் அலுவலகம் நியாயம் கூறியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJTcKUho0.html
தூத்துக்குடி துறைமுகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: இலங்கை அகதி கைது
[ திங்கட்கிழமை, 08 செப்ரெம்பர் 2014, 07:06.21 AM GMT ]
தமிழகத்தில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இலங்கை அகதியொருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் மாலையில் வந்த தொலைபேசி அழைப்பில்,
தூத்துக்குடி மீன்பிடித்துறை முகத்தில் வெடிகுண்டு வைக்கப் போவதாக நபர் ஒருவர் மிரட்டல் விடுத்து விட்டு அழைப்பை துண்டித்து விட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதனையடுத்து, தென்பாகம் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முதல் கட்ட விசாரணையில், தொலைபேசியில் பேசிய நபர் தூத்துக்குடி தெர்மல் நகரில் உள்ள சுங்கத்துறை அலுவலகம் அருகேயுள்ள தொலைபேசிக் கோபுரத்துக்குட்பட்ட பகுதியில் இருந்து பேசியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனடிப்படையில் பொலிஸார் நடத்திய விசாரணையில், தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர், விளாத்திகுளம் அருகேயுள்ள தாப்பாத்தி இலங்கைத் தமிழர்கள் அகதிகள் முகாமைச் சேர்ந்த விக்னேஷ்வரன் விஜய பிரபாகரன் (26) என தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, விஜய பிரபாகரனை கைது செய்த பொலிஸார் அவரிடமிருந்த 4 சிம் அட்டைகளைப் பறிமுதல் செய்தனர்.
குறித்த நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmsyJTcKUho1.html
Geen opmerkingen:
Een reactie posten